Jayalalitha tax amount reduced to 13 croes from 36 croes by income tax dept in deeba case
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமான வரி பாக்கி தொகை 36 கோடியை செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஜெயலலிதா சொத்து ஏலம் விடப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்தது எந்த அறிவிப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா. ்ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வருமான வரி தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது வருமான வரி விவரங்கள் சரியாக எங்களுக்கு வழங்கவில்லை எனவே வருமான வரி தொடர்பாக புதிதாக திருத்தம் செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வருமானவரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த்து. அப்போது வருமானவரித்துறை சார்பாக வக்கீல் ஏபி சீனிவாசன் ஆஜராகி, ஜெயலலிதாவுடைய வருமான வரி தொடர்பாக அனைத்து ஆவணங்களும் ஆராய்ந்து பார்த்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 36 கோடியை தற்போது மாற்றியமைத்து 13 கோடியே 69 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று தற்போது புதிய நோட்டீசை தயார் செய்து அனுப்பி உள்ளோம் என்று அதை கோர்ட்டில் தாக்கல் செய்தார் இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு தீபா தாக்கல் செய்த வழக்கு முடித்து வைத்தனர்