https://youtu.be/glJiYbT79Cc?si=jdiskUiFLO9yBA1j [02/07, 08:14] sekarreporter1: [02/07, 08:13] sekarreporter1: தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு https://share.google/SpAMC1Q7ndHIE1hOQ [02/07, 08:13] sekarreporter1: சென்னை: தனியார் பள்ளிகளின் சொத்துக்களை கையாள்வது தொடர்பான தமிழக அரசின் சட்டப்பிரிவை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.பழனியப்பன் சார்பாக வக்கீல் விஜய் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், 2018ம்

[01/07, 21:04] sekarreporter1:

தனியார் பள்ளிகள் வழக்கு

[02/07, 08:14] sekarreporter1: [02/07, 08:13] sekarreporter1: தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு; அரசு பதிலளிக்க உத்தரவு https://share.google/SpAMC1Q7ndHIE1hOQ
[02/07, 08:13] sekarreporter1: சென்னை: தனியார் பள்ளிகளின் சொத்துக்களை கையாள்வது தொடர்பான தமிழக அரசின் சட்டப்பிரிவை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.பழனியப்பன் சார்பாக வக்கீல் விஜய் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின், 30வது பிரிவுப்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியும், தன் சொத்துக்களை மாற்ற, அடமானம் வைக்க அல்லது வேறு விதமாக கையாள, பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும்.

சங்கங்கள், அறக்கட்டளைகள் அல்லது நிறுவனங்களால் நடத்தப்படும் தனியார் பள்ளிகளின் சொத்து விவகாரங்கள் மீது, கல்வித் துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. தமிழக அரசின் இந்த சட்டப் பிரிவு சொத்துரிமை மாற்றுச் சட்டம், இந்திய ஒப்பந்தச் சட்டம், பதிவுச் சட்டம் ஆகியவற்றுக்கு முரணானது. எனவே, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் ஓரிரு பிரிவுகளை, சட்டவிரோதமானதாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சட்டத்துறை, தமிழக பள்ளிக் கல்வித் துறை, தமிழக தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்டோர், நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version