Headline

இன்றைய தலைப்புச் செய்திகள்!

🗞️ திமுக கூட்டணியில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆலோசனை.

🗞️ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லையென செல்வப்பெருந்தகை விளக்கம். இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்.

🗞️ திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு. வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

🗞️ மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு. மற்றொரு உறுப்பினர் பதவியை அன்புமணிக்கு வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு எனத் தகவல்.

🗞️ தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவதால், வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

🗞️ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை.

🗞️ தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள 38 லட்சம் பேருக்கு தலா 2 ரூ.1000. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகள் நன்றி.

🗞️ ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம். நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மூன்றரை கோடி முட்டைகள் தேக்கம்.

🗞️ இந்தியாவின் 4 லட்சம் மெட்ரிக் டன் பாசுமதி அரிசி, துறைமுகங்களில் தேக்கம். சரக்கு கட்டணம் இரு மடங்காக உயர்ந்ததால் ஏற்றுமதியும் குறைந்தது.

🗞️ ஈரானில் உயர்மட்ட தலைவர் கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? கமேனி படுகொலையை மோடி ஆதரிக்கிறாரா என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி.

🗞️ ஈரான் மீது 5-வது நாளாக தாக்குதல் நடத்தும் அமெரிக்கா-இஸ்‌ரேல் கூட்டுப்படை. தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 787ஆக அதிகரிப்பு.

🗞️ ஈரான் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 153 பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு. 153 உடல்களும் ஒரே இடத்தில் குழிதோண்டி புதைத்து இறுதிச்சடங்கு.

🗞️ ஐசிசியின் மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம். தென்னாப்ரிக்காவின் லாரா வோல்வார்ட் 2-வது இடத்துக்கு சரிந்தார்.

🗞️ டி20 உலக கோப்பை முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை. இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version