Court news

[9/15, 15:16] Sekarreporter: தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் oவலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்ய தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு பட்ட வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், மக்கள் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் துவங்க விலக்களிக்கப்படுவதாகவும், இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில்மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மக்கள் தொகை அதிகரித்து வருவதால், குடியிருப்புகளுக்கும், தொழில்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[9/15, 15:16] Sekarreporter: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விடுமுறை காலங்களில் கடுமையான கட்டுபாடுகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்கள்  வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு  தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்  கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தான் சுற்றுசூழல் மாசு  ஏற்படுத்துவதாக தெரிவித்த நீதிபதிகள்,சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிக அளவில் உள்ளதாகவும்,சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் 
நச்சு புகை பரவுவதாகவும், இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள்,
குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாபயணிகள் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,
குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என தெரிவித்தனர்.

விடுமுறை காலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்…. 
————
[9/15, 15:16] Sekarreporter: கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருக்கோயிலின் ஐந்து அறங்காவலர்களை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.

தற்காலிக நீக்கம் செய்ததை எதிர்த்து ஸ்ரீதரன் என்ற அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், மற்ற 4 பேருக்கு எதிரான  தற்காலிக நீக்கத்திற்கு  ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளதாக கூறி, ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்து  செய்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, சட்டப்படி விசாரணையை  தொடர அனுமதி அளித்தார்.

அதே சமயம், கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டுமென அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல் எண்களை  அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[9/15, 15:59] Sekarreporter: சேரன்மாதேவியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியத் தொகை 21 லட்சத்தை திருப்பி செலுத்த பிறபித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை வாபஸ் பெற்றார்.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரையின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேல்துரையின் வெற்றியை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தது.

அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததாரராக இருந்ததால் அவரது தேர்தலை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2006 முதல் 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பெற்ற ஊதியத் தொகை 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தும்படி, சட்டமன்ற செயலாளர், வேல்துரைக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஊதியத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஊதியத்தை திருப்பிச் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஊதிய தொகையை திருப்பி செலுத்துவது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வேல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...