Case against admk gs edapady dismissed chief court

அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், வேட்புமனுவில், சொத்து, வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி, தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும்,
2021, 2026ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதேபோல வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,,
இந்த வழக்கு
விசாரணைக்கு உகந்தது அல்ல. தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version