பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடுத்த மனு மீது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடுத்த மனு மீது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணை நடத்தியது.

பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

பேனா நினைவுச்சின்னத்திற்காக CRZ விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.

மெரினாவிலும், கொட்டிவாக்கம் – கோவளம் கடற்கரையிலும் யாருக்கும் சமாதி அமைக்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும் – மனுதாரர்.

அரசு வழக்கறிஞர்: இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா : பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா?

இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு. மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version