புதுக்கோட்டையில் 140 ஆண்டுகள் பழமையான மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டு தற்போது ரூ.15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கட்டிடத்தை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
brand-logo-img
home-btn
தலையங்கம்
அரசியல்
இந்தியா
தமிழகம்
குற்றம்
ஆன்மிகம்
மருத்துவம்
மகளிர்
வேலைவாய்ப்பு
சமையல்
மாவட்டம்
சிறப்பு பகுதி
search-icon-img
recent-news-img
whatsapp-img
brand-menu-logo-img
Type to Find latest articles, topics, and more…
Search
மாவட்டம்
வேலூர்
விழுப்புரம்
விருதுநகர்
பெரம்பலூர்
மதுரை
புதுக்கோட்டை
நீலகிரி
சமையல்
facebook
youtube
instagram
உலகம் வர்த்தகம் ஸ்பெஷல் படங்கள் ஜோதிடம் விளையாட்டு வீடியோ
Advertisement
Home / செய்திகள் / “அறம் கூறும் அரங்கங்கள்’’ என்று நீதிமன்றங்களை அழைக்கவேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு
“அறம் கூறும் அரங்கங்கள்’’ என்று நீதிமன்றங்களை அழைக்கவேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு
08:32 PM Apr 26, 2026 IST
featured-imgfeatured-img
share
Share
fb
twitter
whatsapp
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 140 ஆண்டுகள் பழமையான மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டு தற்போது ரூ.15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கட்டிடத்தை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: வழக்காடு மன்றங்கள் என நீதிமன்றங்களை அழைப்பதில் எனக்கு ஒவ்வாமை இருக்கிறது. ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்று நீதிமன்றங்களை அழைக்கவேண்டும். நம் முன் வரும் வழக்குகளை ஒரு கருத்துடன் அணுகாமல், நடுநிலையுடன் பார்க்கவேண்டும். சாதாரண மனிதனுக்கும் மேலாக முழுமையாகவும் கவனத்துடனும் வாதங்களை கவனிக்கவேண்டும். இறந்த காலமும் நிகழ்காலமும் தான் எதிர்காலத்தைக் காட்டும். இங்குள்ள கட்டிடத்தை போல் தமிழகத்தில் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தர்மாதிகாரி பேசியதாவது: வழக்கறிஞர்களின் இன்னொரு வீடு தான் நீதிமன்றங்கள். பாரம்பரியமான சின்னமாக விளங்கும் இதுபோன்ற கட்டிடங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக பயன்பட வேண்டும். நம்மை நாடிவரும் வழக்காடிகளுக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரவேண்டும். அதற்காக நீதித்துறை அலுவலர்களும் வழக்கறிஞர்களும் தங்களின் பணிகளை செம்மையாகச் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.Rail Freight
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில், ‘’ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் இப்போது முதன்மையான தொழிலாகக்கொண்டு நீதித்துறைக்குள் வந்திருக்கிறார்கள். எல்லாத் தரப்பிலும் துறையிலும் திறமை பெற்றிருந்தால்தான் சமுதாயத்தின் சிற்பிகளாக வழக்குரைஞர்கள் ஆக முடியும். அப்போதுதான் புகழும், அந்தஸ்தும் தேடிவரும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருள்முருகன், புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்தையன், செயலாளர் ரமேஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் வரவேற்றார். தலைமை நீதித்துறை நீதிபதி பால்பாண்டியன் நன்றி கூறினார்.
Live Matches
RCB
RCB
scheduled
VS
DC
DC
Scheduled to start at Apr 27, 07:30 pm IST
Arun Jaitley Stadium, Central Delhi
LSG
LSG
result
VS
KKR
KKR
Kolkata Knight Riders won by Tie Breaker, Apr 26, 07:30 pm IST
Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow
CSK
CSK
result
VS
GT
GT
Gujarat Titans won by 8 wickets, Apr 26, 03:30 pm IST
M. A. Chidambaram Stadium, Chennai
Related News
குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகனை கொன்ற தாய் கைது
5 minutes ago
ஐ.பி.எல். கிரிக்கெட் : இன்றைய போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதல்
8 minutes ago
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு!
22 minutes ago
திருத்தணியில் சித்திரை பெருவிழா; புலி, யானை வாகனத்தில் முருகன் வீதியுலா: திரளான பக்தர்கள் தரிசனம்
24 minutes ago
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி திறப்பு
25 minutes ago
திருவொற்றியூரில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
26 minutes ago
Advertisement
VIT VIT B.Arch
மேலும் செய்திகள்
திருத்தணியில் சித்திரை பெருவிழா; புலி, யானை வாகனத்தில் முருகன் வீதியுலா: திரளான பக்தர்கள் தரிசனம்
8 minutes ago
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி திறப்பு
9 minutes ago
திருவொற்றியூரில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
10 minutes ago
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சென்னைவாசிகளை வாட்டி எடுத்த வெயில்: காலை நேரத்தில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்: மாலை நேரத்தில் பூங்கா, கடற்கரையில் மக்கள் வெள்ளம்
7 hours ago
கொடைக்கானல் ஏரிச்சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கிங்: செல்பி எடுத்தும், கைகுலுக்கியும் பொதுமக்கள் உற்சாகம்
7 hours ago
New
brand-logo-ftr
Dinakaran is a Tamil daily newspaper distributed in Tamil Nadu, India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group’s Sun Network.
Popular Categories
இந்தியா
தமிழகம்
குற்றம்
உலகம்
வேலைவாய்ப்பு
Links
E-Paper
Privacy Policy
About us
Contact Us
Advertise with us
Download Apps
Google Play
App Store
Designed and Developed by SORTD.
Dinakaran Cinema
|
Dinakaran Astrology
|
Kungumam
Facebook
Twitter
YouTube
Instagram
வேலைவாய்ப்பு பயிற்சி