.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறாடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததாகவும் அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரியும் தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறாடா உத்தரவுக்கு எதிராக  வாக்களித்ததாகவும் அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரியும்  தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

You may also like...

CALL ME
Exit mobile version