நீதியரசர்கள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் நடவடிக்கை பாரபட்சமாக இருக்கக் கூடாது

சென்னை அனகாபுத்தூர் பகுதியில், ஆக்கிரமிப்பு அகற்றல் என்கிற பெயரில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இப்பகுதியைக் குடியிருப்பு மண்டலமாக அறிவித்திருந்த போதிலும், சென்னை நதிநீர் சீரமைப்புத் தொண்டு நிறுவனம் (CRRT) வெளியிட்டுள்ள புதிய வரைபடங்களை மேற்கோள் காட்டி, மக்களின் நியாயமான எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் புறக்கணித்து, மனிதாபிமானமற்ற முறையில் வீடுகள் இடிக்கப்பட்டன.

அதேநேரம் இப்பகுதியை அடுத்துள்ள, ஆற்றின் கரையோரத்தில் உள்ள பல பகுதிகளில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் குடியிருப்புகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து எஸ்டிபிஐ ஒருங்கிணைப்பில், சர்வே எண் 235க்கு உடபட்ட பகுதியில் வசித்த மக்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பாரபட்சமானது என்றும், இப்பகுதியை ஒட்டியுள்ள அடுத்தடுத்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சர்வே எண் 235ல் உள்ள குடியிருப்புகளுக்கு மட்டும் பட்டா வழங்காதது பாரபட்சமான நடவடிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று(28.08.2025) விசாரணைக்கு வந்தபோது குடியிருப்புவாசிகள் சார்பில் வக்கீல்.ராஜா முகமது, தமீம் அன்சாரி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராயினர். வாதங்களை கேட்ட நீதியரசர்கள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் நடவடிக்கை பாரபட்சமாக இருக்கக் கூடாது என தெரிவித்து, குறிப்பிட்ட பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மட்டும் பட்டா வழங்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version