நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் குற்ற பத்திரிக்கை ரத்து செய்து உத்தரவு

[22/07, 16:58] sekarreporter1: http://youtube.com/post/Ugkxh1PfdZ9LbdYMVrhZYcwCrWonQ4QlTUzn?si=fyF2u7tAFXAWhVou
[22/07, 16:58] sekarreporter1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் குற்ற பத்திரிக்கை ரத்து செய்து உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காவல் நிலையத்தில் பழனி @ திலீபன், அறிவுசெல்வன் மற்றும் அன்பழகன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (Crime No. 114/2023) ரத்து செய்யக் கோரி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் Crl.O.P. No.1823 of 2024 என்ற வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை 02.02.2024 அன்று விசாரித்த மாண்புமிகு நீதிபதி திரு. N. ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொய்யாக புனையப்பட்டதாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட குற்ற எண்ணில் புலனாய்வு மேற்கொள்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தடை உத்தரவு நடைமுறையில் இருந்தபோதிலும், அப்போதைய பாணாவரம் காவல் ஆய்வாளர் லக்ஷ்மிபதி, மேற்கண்ட குற்ற எண்ணில் புலனாய்வு மேற்கொண்டு, சோளிங்கர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதனை நீதிமன்றமும் கோப்பில் ஏற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது ( 289/2025).

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறியதாகக் கூறி, மனுதாரர்கள் காவல் ஆய்வாளர் லக்ஷ்மிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தனர். (Cont P 1846/2026).

அவ்வழக்கை 03.07.2026 அன்று விசாரித்த மாண்புமிகு நீதிபதி N. ஆனந்த் வெங்கடேஷ், தடை உத்தரவை மீறிய காவல் ஆய்வாளர் லக்ஷ்மிபதியை 22.07.2026 அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று 22.07.2026, காவல் ஆய்வாளர் லக்ஷ்மிபதி உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தடை உத்தரவை மீறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இதே காவல் ஆய்வாளர் உயர்நீதிமன்றத்தின் மற்றொரு உத்தரவையும் மீறியுள்ளதால், அவருக்கு எதிராக மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நிலுவையில் இருப்பதாகவும், உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை தெரிந்தே உள்நோக்கத்துடன் மீறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்த மாண்புமிகு நீதிபதி N. ஆனந்த் வெங்கடேஷ், உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி சோளிங்கர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இரா. திருமூர்த்தி ஆஜரானார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version