நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.

 

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் மன்றத்தில் உள்ள நூறாண்டு பழமையான மெட்ராஸ் பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர்கள் ராகவன், அழகிரிசாமி, குமார் ராஜரத்தினம் ஆகியோரின் புகைப்படத் திறப்பு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நீதித்துறை சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை – சர்வதேச பார்வை என்ற தலைப்பில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சதாசிவம் உரையாற்றினார்.

அப்போது அவர், கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்த முடியாது என்ற போதிலும் தற்போது அதை கட்டாயப்படுத்திய செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் கிழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஒரு வழக்கு பல ஆண்டுகள் நிலுவையில் இருப்பதால் வழக்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவ்ய்ம், அதனால் லோக் அதாலத்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

இதை தவிர்க்க நிலுவை வழக்குகளை விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கிழமை நீதிமன்ற நீதிபதிகளை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சந்தித்து இது சம்பந்தமாக பேச வேண்டும் என்றும் நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தியுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version