நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை

 

சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(வயது 34). இவரது மனைவி அம்மு. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

அம்முவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்த ஸ்ரீனிவாசன், மனைவியை கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் அம்மு அதனை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீனிவாசன், கடந்த 25.8.2018 அன்று அம்முவை கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

=========

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version