நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த மோசடி தொடர்பாக வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மட்டுமே வழக்கின் விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கு புலன் விசாரணை என்பது ரகசியமானது எனவும், இந்த ரகசியத்தன்மை தான் புலன் விசாரணை வெற்றி பெற வழிவகுக்கும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி தொடர்பாக ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் மீதான வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வேலூர், சென்னையில் செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபினான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம், பொதுமக்களிடம் டிபாசிட்களைப் பெற்று, பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிக வட்டி வழங்குவதாகக் கூறி, முதலீடுகளைப் பெற்றது. இவ்வாறு பெற்ற முதலீடுகளைப் பயன்படுத்தி, நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட சிலரை கைது செய்தது. இதுசம்பந்தமாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த வழக்கின் புலன் விசாரணை குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கில் கைது செய்யப்பட்டவரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த மோசடி தொடர்பாக வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மட்டுமே வழக்கின் விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடுவது நீதி பரிபாலனத்தை பாதிக்கும் எனவும், வழக்கு புலன் விசாரணை என்பது ரகசியமானது எனவும், இந்த ரகசியத்தன்மை தான் புலன் விசாரணை வெற்றி பெற வழிவகுக்கும் எனவும் கூறி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

You may also like...

CALL ME
Exit mobile version