திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக எம்.பி. தான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக எம்.பி. தான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுக’வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்
தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுக’வில் இருந்து விலகி திமுக’வில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version