தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிலத்தின் விற்பனை தொடர்பாக எப்படி கேள்வி எழுப்ப முடியும்? இதை ஏற்க முடியாது… இதில் எந்த பொதுநலன் எதுவும் இல்லை எனக் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    கோவில் சொத்து விற்பனை தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்பட்ட வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா திருவாயர்பாடி கிராமத்தில் உள்ள கரிகிருஷ்ணபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை கடந்த 1984ல் தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர்.

    பிரதான சாலையில் உள்ள அந்த இடத்தின் மதிப்பு கடந்த 1985ல் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் எனவும், ஆனால், சென்டுக்கு 300 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், நிலத்தின் விலையை சந்தை மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொன்னேரியை சேர்ந்த அமர்கவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிலத்தின் விற்பனை தொடர்பாக எப்படி கேள்வி எழுப்ப முடியும்? இதை ஏற்க முடியாது… இதில் எந்த பொதுநலன் எதுவும் இல்லை எனக் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version