ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும் சட்டத்தை இரத்து செய்த நீதிமன்றம், வீட்டை தீபா & தீபக் வசம் ஒப்படைக்கச் சொன்னதை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன.

ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும் சட்டத்தை இரத்து செய்த நீதிமன்றம், வீட்டை தீபா & தீபக் வசம் ஒப்படைக்கச் சொன்னதை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன.

ஜெயலலிதா அத்தகு நினைவிடத்திற்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருப்பதைக் கூறவில்லை.

குறிப்பாக,

1. “தொழில்முறையில் சாதித்ததாலேயோ,அரசியல் பிரபலம் என்பதாலோ,திட்டமிடபட்ட அலங்கரிப்பின் மூலம் செயற்கையாக கவர்ச்சியை பெற்றதனாலேயோ அல்லது தேர்தல் பெரு வெற்றிகளாலோ ஒருவருக்கு நினைவில்லம் பொதுமக்கள் பணத்தில்அமைக்க முடியாது.”

2. “இங்கே அரசு வழக்கறிஞர் 1969ம் ஆண்டு அலகாபாத்தில் மகாத்மா காந்தி நினைவிடம் சம்பந்தமான தீர்ப்பை சுட்டிகாட்டினார். அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க மகாத்மா காந்தி வழக்கை காரணம் காட்டும் நீங்கள், நினைவிடம் அமைக்கப்படும் நபர் காந்தியின் வாழ்க்கையை வாழ்ந்தவரா அல்லது குறைந்தபட்சம் காந்தியின் உணர்வையாவது கொண்டவரா?
என்று யோசித்தீர்களா?”

3.”ஏற்கனெவே மக்கள் வரிப்பணம் ரூ80 கோடியை கொட்டி மெரினா கடற்கரையில் சம்பந்தபட்டவருக்கு நினைவிடம் கட்டியாயிற்று. வேதா நிலையத்திற்கு வெகு அருகில் இருக்கும் இந்த நினைவிடம் வெளிப்படுத்தாததை இந்த இல்லம் என்ன வெளிபடுத்தப்போகிறது ?”

4.”மக்கள் வரிப்பணம் பாழாவதை மகாபாரதத்தின் திருதிராஷ்டரை போல கண் மூட
சமூக ஆர்வலர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
Punithan T A

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version