சேவை குறைபாட்டால் இழந்த 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயையும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்ச ரூபாயையும் வாடிக்கையாளருக்கு வழங்க ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏர்டெல் நிறுவனம் ஆகியவற்றிற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேவை குறைபாட்டால் இழந்த 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயையும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்ச ரூபாயையும் வாடிக்கையாளருக்கு வழங்க ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏர்டெல் நிறுவனம் ஆகியவற்றிற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெய்டு செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்த சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஜெ.யேசுதயன் என்பவரின் செல்போன் சேவை, கோரிக்கை வைக்கமலேயே 2012ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது குறித்து, புகார் அளித்தபோது போலியான குறுஞ்செய்தி என கூறிய ஏர்டெல், புதிய சிம்கார்டு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அந்த எண் முடக்கப்பட்ட நேரத்தில் சென்னை தேனாம்பேட்டை ஐசிஐசிஐ வங்கியில் உள்ள அவரது கணக்கிலிருந்து 4 லட்சத்து 89 ஆயிரம், அவருக்கே தொடர்பிப்லாத நான்கு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து ஐசிஐசிஐ வங்கி மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், சேவை குறைபாடு குறித்து ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றிற்கு எதிராக சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஆர்.வி.ஆர்.தீனதயாளன், உறுப்பினர் டி.வினோத்குமார் ஆகியோர் சேவை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை உறுதி செய்வதாக கண்டறிந்துள்ளனர். அதனடிப்படையில், மனுதாரர் இழந்த தொகை 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன், மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயையும் மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டுமென ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

You may also like...

CALL ME
Exit mobile version