சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் லா அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கான கெட்ட செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்ற பரிந்துரையை திரும்ப பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லா அசோசியேசன், ஓய்வின் விளிம்பில் உள்ள நீதிபதி டி.ராஜாவை அவரின் ஒப்புதல் இன்றி பணியிட மாற்றம் செய்வதற்கு பரிந்துரைத்தது ஆரோக்கியமான சூழல் அல்ல எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version