செக் மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிசினஸ் மேனுக்கு விதிக்கப்பட்ட எட்டு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செக் மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிசினஸ் மேனுக்கு விதிக்கப்பட்ட எட்டு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ஜலான். இவர், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷிடம், தொழில் அபிவிருத்திக்காக, கடந்த 2022ம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாயை கடனாகப் பெற்று உள்ளார்.
கடனுக்காக, சஞ்சய் ஜலான் கொடுத்த காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து, சஞ்சய்சலான் மீது ‘செக்’ மோசடி வழக்கை, சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் சதீஷ் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,’ சஞ்சய்சலானுக்கு எட்டு மாத சிறை தண்டனையும், கடன் தொகையான 7 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 3 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என, கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சஞ்சய் சலான் மேல்முறையீடு செய்தார். மனுவில்,’ விசாரணை நீதிமன்ற தண்டனை உத்தரவு சட்டத்துக்கு முரணானது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறிவிட்டது’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த 16வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஆர்.அருள்மொழிசெல்வி, குற்றம் சாட்டப்பட்ட நபர், புகார்தாரருக்கு எதிராக வலுவான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எவ்வித குறையும் காண முடியவில்லை என்பதால், எட்டு மாத சிறை தண்டனை விதித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.