சாலைக்கு கீழ் பாலம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களுக்கு பயன்படும் இடத்தில் மாற்றி அமைக்க கோரிய வழக்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைக்கு கீழ் பாலம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களுக்கு பயன்படும் இடத்தில் மாற்றி அமைக்க கோரிய வழக்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் சி. சிராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி சிக்கரிமேடு அருகே தேசிய நெடுஞ்சாலையை வாகனங்கள் மற்றும் மக்கள் எளிதாக கடக்கும் வகையில், நெடுச்சாலைக்கு கீழ் பாலம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அந்த இடம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடத்திலிருந்து தொலைவில் உள்ளதால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். சிக்கிரிமேடு அருகே சுங்கச்சாவடியும் இருப்பதால் பாலம் அமையும்பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் அதிக்கரிக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்திற்கு பதிலாக மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரிகள், பள்ளிகள் உள்ள போலுப்பள்ளி கிராம பகுதியில் அமைத்தால், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சிக்கரிமேடு பகுதியில் அமைய இருக்கும் சாலை கீழ் பாலத்தை போலுப்பள்ளி சந்திப்பு அருகே மாற்றி திட்டமிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

CALL ME
Exit mobile version