குற்றப் பின்னணி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிடக்கோரிய பாஜக வழக்கறிஞர் ஏற்காடு A மோகன்தாஸ் தாக்கல் செய்த ரிட் மனுவில் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!. தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குற்றப் பின்னணி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிடக்கோரிய பாஜக வழக்கறிஞர் ஏற்காடு A மோகன்தாஸ் தாக்கல் செய்த ரிட் மனுவில் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!.

தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மனு விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல் 2018 ஆண்டுக்கு பிறகு நடைபெறாத நிலையில்!.

கடந்த ஆண்டு உச்ச நீதி மன்றம், உடனடியாக அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல்களை இந்த வருடம் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது!.

கடந்த 2018 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலின் போது அன்றைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும், தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரின் 10 ஆண்டுகால வருமானம் சொத்து விவரம், மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும்.

இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகித்தவர் மீண்டும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும்.

பார் அசோசியனில் பதவிகிப்பவர் எம்பி எம்எல்ஏ அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பதவியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும்.

மாநில பார் கவுன்சில் தேர்தலை முறையாகவும், எந்த ஒரு பனபலம், ஆள் பலம் மற்றும் அடியாள் பலம், ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்கள் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சந்திரமோகன் அவர், உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, இந்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்று. அந்த மேல் முறையிட்டு வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2018 ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வழக்கறிஞர்கள், குற்ற பின்னணி உள்ளவர்கள்.

 

இந்நிலையில் கடந்த 2023 வருடத்தில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா 7 வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்ற வழக்கில் ஈடுபட்ட வழக்கறிஞருக்கு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சட்டம் இயற்றியது.

இந்த சட்டத்தை கடந்த அக்டோபர் 2025 ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது.

கடந்த டிசம்பர் 17, 2025 அன்று மேலும் ஒரு விளக்க அறிக்கையை பார் கவுன்சில் ஆப் இந்தியா வெளியிட்டு இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது அந்த குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றம் குற்றம் பதிவு செய்திருந்தால் மட்டுமே பொருந்தும் என சட்ட திருத்தம் கொண்டு வந்திருந்தது.

இந்த திருத்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கூறியதாவது நீதிமன்ற உத்தரவின் பேரில் பார் கவுன்சில் ஆப் இந்தியா குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

ஏதாவது ஒரு குற்ற வழக்கில் ஏழு வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றப் பின்னணி உள்ள நபரை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவும், உறுப்பினராக தேர்ந்தெடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும்.

நீதியரசர் கிருபாகரன் அடங்கிய அமர்வு கடந்த 2018 ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார் கவுன்சில் தேர்தலில் போட்டிடும் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வருமானம் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும்.

இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி வகித்தவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும்.

பார் அசோசியேசன் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகிப்பவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று 27.1.2026 அன்று தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதி அரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மோகன்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி எஸ் மணி மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோர் ஆஜராகி, தமிழகத்தில் மட்டும் தான் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் அதிக குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு வழக்கு இருந்தாலே வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு தடை இருக்கும்போது, இரண்டு வழக்கிற்கு மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை என்பது, பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின்பாரபட்சமான ஒரு அணுகுமுறையாக இந்த சட்ட திருத்தம் இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தம் சம்பந்தப்பட்ட சில பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் நிர்வாகியை காப்பாற்றும் வகையில் உள்ளதாக இருப்சட்டவிரோத செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்.

இரண்டு முறைக்கு மேல் பார் கவுன்சில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் இடைவெளி இல்லாமல் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் பார் கவுன்சில் ஆப் இந்தியா தரப்பில் ஆஜரான பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து, இந்த வழக்கு விசாரணையை இறுதி விசாரணைக்காக வரும் 20 பிப்ரவரி 2026 ஆம் தேதி அன்று ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது!

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version