இறால் பண்ணைகள் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு வரும் இறால் பண்ணைகள் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள தில்லை விளாகம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் யோகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள தில்லை விளாகம், புவிசார் குறியீடு பெற்றுள்ள பறவை சரணாலயம் அமைந்துள்ள உதய மார்த்தாண்ட புரம், மற்றும் தொண்டியகாடு ஆகிய இடங்களில் சட்ட விரோதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறால் பணிகள் அமைத்திருந்தனர்
இது தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சுப்பிரமணி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இறால் பண்ணைகள் அப்புறப்படுத்தப்பட்டன
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மீண்டும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன
இதற்கு எதிராக எங்கள் பகுதி மக்கள் நீண்ட போராட்டம் நடத்தினார்கள்
இதனை தொடர்ந்து மாவட்ட அரசு அதிகாரிகள் அமைதி கூட்டமும் நடத்தினார்கள்
ஆனாலும் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை
இதனையடுத்து நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை தாக்கல் செய்தேன்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வரத சக்கரவர்த்தி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்
அதன்படி 12 வார காலத்திற்குள் சட்ட விரோதமாக இயக்கப்பட்டு வரும் அனைத்து இறால் பண்ணைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்
ஆனால் நீதிமன்ற உத்தரவு இதுவரை கடைபிடிக்கப்படவில்லை தற்போது தொடர்ந்து இறால் பண்ணைகள் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன .
எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறிய மாவட்ட ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது .
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி காசிநாத பாரதி ஆஜராகி தற்போது நீதிமன்ற உத்தரவை மீறி ஈரால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி அதுக்கான புகைப்படங்களையும் நீதிபதியிடம் காட்டினார்
இதனை பார்த்த நீதிபதி பரத சக்கர வர்த்தி ,வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிவு மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்