இன்று சென்னை மாண்பமை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய கவுன்சில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நாளை நடைபெற இருக்கும் சேர்மன் மற்றும் வைஸ் சேர்மன் தேர்வில் கலந்து கொள்வதற்கும் முறையாக காவல் துறை ஒவ்வொரு திமுக உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆர்கே பேட்டை யூனியன் உறுப்பினரான பி நதியா அவர்களுக்கும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் புவனேஸ்வரி அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீது நீதியரசர் ஆதிகேசவலு, தமிழ்நாடு தேர்தல் கமிஷன் வழக்கறிஞரிடம் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் நாங்கள் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றும், தேர்தலில் வீடியோ கிராப் பண்ணுவதற்கும் உத்தரவாதம் அளித்து உள்ளோம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் நாளை சேர்மன் மற்றும் உதவி சேர்மன் பதவிக்கு நடக்கும் தேர்தலில் பங்கெடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த தேர்தலை வீடியோ கிராப் பண்ண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளில் வி. அருண் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர், G. கிருஷ்ணராஜா மற்றும் V.வேலுச்சாமி வழக்கறிஞர்களும் மற்றும் பி. முத்துகுமார் தலைமை கழக வழக்கறிஞர் வாதாடினர்
இன்று சென்னை மாண்பமை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய கவுன்சில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நாளை நடைபெற இருக்கும் சேர்மன் மற்றும் வைஸ் சேர்மன் தேர்வில் கலந்து கொள்வதற்கும் முறையாக காவல் துறை ஒவ்வொரு திமுக உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆர்கே பேட்டை யூனியன் உறுப்பினரான பி நதியா அவர்களுக்கும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் புவனேஸ்வரி அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீது நீதியரசர் ஆதிகேசவலு, தமிழ்நாடு தேர்தல் கமிஷன் வழக்கறிஞரிடம் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் நாங்கள் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றும், தேர்தலில் வீடியோ கிராப் பண்ணுவதற்கும் உத்தரவாதம் அளித்து உள்ளோம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் நாளை சேர்மன் மற்றும் உதவி சேர்மன் பதவிக்கு நடக்கும் தேர்தலில் பங்கெடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த தேர்தலை வீடியோ கிராப் பண்ண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளில் வி. அருண் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர், G. கிருஷ்ணராஜா மற்றும் V.வேலுச்சாமி வழக்கறிஞர்களும் மற்றும் பி. முத்துகுமார் தலைமை கழக வழக்கறிஞர் வாதாடினர்.