அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

[3/3, 11:17] Sekarreporter 1: திங்கள் புதன் வெள்ளி மூன்று நாட்கள்
[3/3, 11:17] Sekarreporter 1: திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கடுமையான நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புகார் அளித்தவர் தற்போது நல்ல
மநிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையையம் காயங்கள் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காயமடைந்த நபர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று சென்று விட்டதாகவும் எனவே கடுமையான நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
[3/3, 11:17] Sekarreporter 1: டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

நிபந்தனை ஜாமீன்

திருச்சியில் தங்கியிருக்க உத்தரவு. கண்டேன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரம் கையெழுத்திட வேண்டும். திங்கள் வெள்ளி ஆகிய கிழமைகளில்- நீதிபதி

நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைமுடிந்து வீடு திரும்பியுள்ளார். நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் கொடுக்கலாம் – தண்டையார்பேட்டை காவல் நிலையம்

சாலை மறியல் வழக்கில் 2 வாரம் கையெழுத்திட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது – ஜெயக்குமார் தரப்பு

கள்ளஒட்டு போட வந்த திமுக நரேஷ்குமாரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கு
[3/3, 11:17] Sekarreporter 1: நீதிபதி ஜெகதீஷ் சந்திரா
[3/3, 11:17] Sekarreporter 1: ஜெயகுமாருக்கு ஜாமீன். திருச்சியில் தங்கியிருக்க வேண்டும். கண்டோன்மென்ட் போலீசில் திங்கள், புதன், ஆஜராக வேண்டும்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version