அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று* கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

[1/4, 16:34] sekarreporter1: *அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று*

கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

48 வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு பிற்பகல் 2மணிக்கு உணவு இடைவேளைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கின் அவசரத்தன்மை குறித்தும் பொதுக்குழு தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்று தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர்.

முதலில் வாதத்தை தொடங்கிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் மாலை 4 மணிவரை வாதிட்டு விட்டு நாளை மேலும் வாதாட ஒரு மணி நேரம் வழங்கும் படி கேட்டார்.

இதற்கு நீதியரசர்கள் இந்த வாரத்திற்குள் வழக்கை இரு தரப்பினரும் வாதிட்டு முடித்து விடவேண்டும். அடுத்த வாரம் வேறு வழக்குகளை விசாரிக்கவேண்டியது உள்ளது என கருத்து தெரிவித்தனர்.நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை 2 மணிக்கு தொடர்வதாக கூறி நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

*ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்
[1/4, 16:37] sekarreporter1: .

You may also like...

CALL ME
Exit mobile version