SHANMUGA SUNDARAM R: Adv Archana: l

SHANMUGA SUNDARAM R:
Adv Archana:
சிறுமிகள் கர்ப்பமாக்கப்படும் சூழல்களில் மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் 1971 மட்டுமல்லாது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, பரிசோதனையின் மூலம் கர்ப்பம் கண்டறியப்பட்டால், அந்தச் சிறுமி யைப் பரிசோதித்த மருத்துவர், அதுபற்றி காவல்நிலையத்திலோ, இளம் சிறார்களுக்கான சிறப்புக் காவல்துறையினரிடமோ ரிப்போர்ட் செய்ய வேண்டும். அதை செய்யத் தவறினால், போக்ஸோ சட்டப் பிரிவு 19(1)-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அக்குற்றச் செயலுக்குத் தண்டனையாக அதிகபட்சம் ஆறு மாதகால சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும். அபராதமும் உண்டு. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும்போது மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை அல்லது சிகிச்சையை மேற்கொள்ளலாம். சட்டப்படியான அறிக்கை யைக் கொடுத்தால்தான் அனுமதிப்போம்’ என்று மறுக்கத் தேவையில்லை. சிறுமிக்கு சிகிச்சையை ஆரம்பித்துவிட்டு, சட்டப் படியான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2015 பிரிவு 74-ன்கீழ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர், ஊர், பள்ளி உள்ளிட்ட எந்த ஓர் அடையாளத்தையும் மருத்துவமனை, காவல்துறை, ஊடகம் என யாரும் வெளிப் படுத்தக் கூடாது. அதை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாத காலம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்

10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்புச் சட்டத் தீர்ப்பு

சட்டம் பெண் கையில்! – 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு… தீர்ப்பும் விவாதமும்
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, உறவினரால் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாக்கப்பட்டாள். அந்த சிறுமிக்கு, தனக்கு என்ன நடந்தது என்பதை உணரத் தெரியவில்லை. வயிறு வலிக்கிறது என்று தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பம் என்று தெரியவர அதிர்ச்சியுற்றனர். பால்யம் மாறாத அந்தச் சிறுமிக்கு, ஏற்கெனவே இதயக் கோளாறு காரணமாக அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதி கேட்டு சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தை அவள் பெற்றோர் அணுகினர். அவர்களது கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டது. அவர்கள், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர். உச்ச நீதிமன்றம், சிறுமியின் மருத்துவ அறிக்கையை அறிந்துகொள்ள மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு அவளை அனுப்பிவைத்தது.

ஏற்கெனவே அவளுக்கு உடல்நிலையில் சிக்கல் இருப்பதாலும், கருக்கலைப்பு செய்தால் அந்தச் சிறுமியின் உயிருக்குப் பாதிப்பு உண்டாகும் என்பதாலும், சட்டப்படி 20 வார காலத்தைக் கடந்துவிட்டதாலும் கருக்கலைப்பு இந்த நிலையில் சாத்தியமாகாது என்ற மருத்துவர்களின் அறிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், கருவைப் பெற்றெடுக்கத்தான் வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஊடகங் களின் மூலம் உலகெங்கும் இந்தத் தீர்ப்பு விவாதமானது.

ஒரு குற்றவாளியால் தன்னையே அறியாமல் இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த 10 வயது குழந்தை, மருத்துவ அறிக்கையின்படி கருக்கலைப்பைத் தாங்க முடியாது என்றால், பின்னர் எப்படி அவளால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்?’, அவள் உடல்நிலை இதற்கு ஒத்துழைக்குமா… சுகப்பிரசவம் இவளுக்குச் சாத்தியமாகுமா?’, அறுவை சிகிச்சை மூலம் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் வலிகளையும் குழந்தையின் சுமையையும் அவள் சுமக்க வேண்டுமா… அவள் எதிர்காலம், உடல்நிலை என்னவாகும்?’ என்று நாடெங்கும் இந்தத் தீர்ப்பு விவாதப்பொருளானது.

இறுதியாக, அந்த 10 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அந்தக் குழந்தையை குழந்தைகள்நல வாரியத்திடம் ஒப்படைத்தனர்.

கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் தேவை

ஒரு குழந்தை உறவினர்களாலோ, வெளி நபர்களாலோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பெற்றோரிடம் சொல்லக் கூடாது’ என்ற மிரட்டலுக்குப் பயந்து, உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும்போதுதான் அவள் கர்ப்பம் என்பதே கண்டறியப்படும். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே அந்தக் குடும்பத்துக்கு அவகாசம் தேவைப்படும். பின்னர், அவர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு, இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு கருவைக் கலைத்து விடலாம்’ என்று முடிவெடுக்கும்போது, சட்டப் பிரிவு அவர்களை அனுமதிக்க மறுக்கிறது.

இப்போதுள்ள மருத்துவ வளர்ச்சியில், கைதேர்ந்த மருத்துவர்களால் பாதுகாப்பான முறையில் கருவைச் சுமப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கருக்கலைப்பு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. அதனால், கரு வளர்ந்து 20 வாரத்தைத் தாண்டியிருந்தால் அதைக் கலைக்கக் கூடாது என்று, மருத்துவ வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் ஏற்படுத்தப் பட்ட கருக்கலைப்புச் சட்டப் பிரிவில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான சிறுமிகளின் உடல்நிலையை மருத்துவப் பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்ட தரப்பு விரைவான முடிவை எடுக்க உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் குழுமம் அமைக்கப்பட வேண்டும். வளர்ந்த கருவைக் கலைக்கும் அவகாசத்தை 20 வாரத்திலிருந்து 24 வாரமாக மாற்றி சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இவற்றையெல்லாம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

முன்மாதிரி தீர்ப்பு!

சட்டத்தின் வரைமுறைகளிலிருந்து விலகுவதற்கான சந்தர்ப்பங்களைச் சில நேரங்களில் வழக்குகளின் தன்மை வழங்குகிறது. அதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனக்கு வைத்தியம் பார்த்த ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, அவன் மிரட்டலுக்கு அஞ்சி, தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறாள். அவள் தாங்க இயலாத வயிற்றுவலி என்று சொல்லவே, மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுதான் அவள் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவளது கர்ப்பம் 24 வாரத்தை அடைந்துவிட்ட நிலையில், கருக்கலைப்பு அனுமதிக்காக நீதிமன்றத்தின் மூலம் மருத்துவக்குழு பரிசோதனைக்கு அவள் அனுப்பி வைக்கப்பட்டாள். ‘இந்தக் கருக்கலைப்பால் அந்தச் சிறுமியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றால், மருத்துவர்கள் கருக்கலைப்பு முடிவை எடுக்கலாம்’ என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமையால் வஞ்சிக்கப்பட்டு கர்ப்பமான சிறுமிகளின் கர்ப்பகாலம் 20 வாரங்களைக் கடந்துவிட்ட நிலையிலும், சிறுமியின் தரப்பில் கர்ப்பத்தைக் கலைத்துவிட விருப்பம் தெரிவித்தால், சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று மருத்துவர்கள் அறிவிக்கும் சூழ்நிலைகளில், நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் இத்தகைய தீர்ப்புகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங் களுக்குக் குறைந்தபட்ச நிம்மதியைத் தரும்.

#கட்டிடஅனுமதி பெறுவதற்கான வழிமுறை:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் இனி #கட்டிடஅனுமதி அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால், 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மண்டல இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்ளக் குறிப்புக்கள் இங்கே…

“ஒன்றிய, மாநில அரசின் கொள்கை முடிவுகளின்படி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், கட்டிட விண்ணப்பங்களின் மீது இறுதி முடிவு எடுத்துக்கொள்ளும் பரிசீலனைக்கான கால அளவினை குறைக்கவும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், ஆவணங்களையும், உரிமம் கட்டணங்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையதளம் வாயிலாக செலுத்திட மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொழில்சார்ந்த வல்லுநர்களைத் தகுதியின் அடிப்படையில் பதிவு செய்து கட்டணங்கள் வசூலித்தல், பதிவு சான்று அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் புது நிலைப்படுத்தி ஏப்ரல் மாதத்தில் மன்றத்தின் பார்வைக்காக வைத்து மற்றும் இணையதளத்தில் பதிவிடுதல் மற்றும் தவறு செய்யும் தொழில் சார்ந்த வல்லுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்தான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக முழு விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டண விகிதங்கள் பொறுத்தவரையில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் திட்ட மற்றும் கட்டிட அனுமதி உத்தரவுகளை விரைந்து வழங்கிடும் வகையில் தானியங்கி மென்பொருள் வாயிலாகக் கட்டண விகிதங்களைக் கணக்கீடு செய்து இணையதளம் மூலம் வசூலிக்க மென்பொருளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக 1200 சதுர பரப்பளவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்குக் கள ஆய்வின்றி 10 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்கப்படும் என்றும் அலுவலர்கள் தவறும் நிலையில் ஒப்புதலளிக்கப்பட்டதாகக் கருதி கட்டணங்கள் கணக்கீடு செய்யும் நிலைக்கு மாற்றப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாயிரம் சதுரடி பரப்பளவு வரைவு திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாகக் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதியினை உரியக் காலத்திற்குள் சீரிய முறையில் வழங்கிட மாநகராட்சி, நகராட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டிட விண்ணப்பங்கள் மற்றும் வரைபடங்களைத் தயார் செய்யத் தகுதி வாய்ந்த தொழில் சார்ந்த வல்லுநர் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்றுப் பதிவுச் சான்று வழங்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிப்பது அவசியம். மேலும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கட்டிட விண்ணப்பங்களை http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நகரமைப்பு ஆய்வாளர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இணையதளத்தில் ஆணையர் ஒப்புதல் அளித்தவுடன், கட்டணங்கள் கேட்பு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மனுதாரருக்கு அனுப்பப்படும். கட்டணங்கள் 15 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் கோப்பு கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக அடுத்த 7 நாட்களில் மனுதாரருக்குத் தகவல் தெரிவித்துக் கோப்பு முடிக்கப்படும்.

பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால் #3நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். விண்ணப்பத்தில் கூறியபடி கட்டடம் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் நபர்களின் மீது தகுந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற துறைகளின் பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நகராட்சி/மாநகராட்சியின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர், கணக்கர் மற்றும் பொறுப்பானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தேவேந்திர பிரசாத் என்பரை விசாரிக்க காவல் ஆய்வாளர் அவரது வீட்டுக்கு எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் செல்கிறார். மேலும் தேவேந்திர பிரசாத்தை சட்ட விரோதமாக தடுத்து, அடித்து அவர்வசம் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். இதனால் காவல் ஆய்வாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 323, 341, 379, 504 ஆகியவற்றின் கீழ் தனிநபர் புகார் தாக்கல் செய்கிறார். அதனை குற்றவியல் நடுவர் விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் பாட்னா உயர்நீதிமன்றத்தில், தன்மீது வழக்கு தாக்கல் செய்ய குவிமுச சட்டப் பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதியை தேவேந்திர பிரசாத் பெறவில்லை என்றுகூறி குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டது. காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் குவிமுச சட்டப் பிரிவு 197 ன் கட்டாயமாக முன்அனுமதி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனை எதிர்த்து தேவேந்திர பிரசாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் திரு. அபைய் மனோகர் சாப்ரே மற்றும் திரு. தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் விசாரித்தனர்.

தேவேந்திர பிரசாத் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனிப்புகாரில் காவல் ஆய்வாளர், அவரது அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் படியாக நடந்து, புகார்தாரரின் வீட்டுக்கு சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். எனவே காவல் ஆய்வாளர் அலுவலக பணியாக இந்த செயலில் ஈடுபட்டார் என்று கருத முடியாது. ஆகையால் குவிமுச சட்டப் பிரிவு 197 ன் படி காவல் ஆய்வாளர் மீது தனிப்புகார் தாக்கல் செய்ய முன் அனுமதி பெற வேண்டியதில்லை.

ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு குவிமுச சட்டப் பிரிவு 197 ன் கீழ் அனுமதியை பெற வேண்டுமென்றால், அந்த அரசு ஊழியர் பணியிலிருக்கும்போது ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே 197 ன் கீழ் அரசிடமிருந்து முன் அனுமதியை பெற வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அதுபோன்ற எதுவும் இல்லை. புகார்தாரரின் வீட்டில் வைத்து காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது கடமையை செய்யும் போது நடந்ததாக கருத முடியாது.

எனவே உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

CRl. A. No – 579/2019

DT – 02.04.2019

வணக்கம் நண்பர்களே…!

நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை தீர்த்து கொண்டால், நீதிமன்ற கட்டணம் திருப்பி அளிக்கலாம்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1J_F4uC93Bwvjxx–qxIiftV1ZgbR6RPi/view?usp=drivesdk

நன்றி…!

வணக்கம் நண்பர்களே…!

பிரதிவாதி சம்மன் வாங்க மறுத்தால், அதன் பிறகு அவர் ஒரு தலை பட்ச தீர்ப்பை மாற்ற மனு செய்தால் ஏற்க முடியாது – உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1JBJAv83X4CgyakIhO2HfVXf1Iz5n_daa/view?usp=drivesdk

நன்றி…!

வணக்கம் நண்பர்களே…!

மோட்டார் வாகன விபத்து இழப்பீடு மனுக்களை, தங்கள் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் இல்லை என்று கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு.

உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1IufD0UQ1fW4K9gBdvN27LBAXP2y5-sdb/view?usp=drivesdk

நன்றி…!

வணக்கம் நண்பர்களே…!

கிரைய பத்திரம் பதியும்போது, சொத்து வாங்குபவர் பதியும் அலுவகத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1HzFbNjPJZxE1zkqHlq89h6qWUJsxoN7T/view?usp=drivesdk

நன்றி…!

#Criminal வழக்கு எப்பொழுது எந்த மாதிரியான சூழ்நிலையில் #Quash செய்யப்படும் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் என்று கூறப்படும் Cr.PC சட்டபிரிவு 482 இன் கீழ் எந்தெந்த வழக்குகள் Quash செய்யலாம்,மேலும் Cr.PC சட்டப்பிரிவு 320 எந்தெந்த வழக்குகள் Compoundable Offences என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி Section 482-ன் கீழ் Non Compoundable Offences யை Quash செய்யலாமா என்பதை பற்றி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் Guidelines வழங்கியுள்ளது.

Cr.PC 1973 Section 482 and CPC 1908 Section 151 இன் கீழ் Inherent Powers of High Court செயல்படுத்த இரண்டு காரணங்கள்
1.To Secure the ends of Justice.
2.To prevent the abuse of Process of any Court.

ஒரு கிரிமினல் வழக்கில் Offender and Victim இரண்டு நபர்களும் Court க்கு வெளியே அவர்களின் வழக்கை முடிந்துகொள்ள பேசி கொண்டாலும்.CrPC 320 ல் கூறப்பட்ட Compoundable Offences என்றாலும் With Court Permission, Without Court Permission என்பது உண்டு.Compoundable offences க்கு மட்டும் தான் Quash செய்ய கேட்க வேண்டுமென்று இல்லை Non Compoundable Offences க்கும் Quash செய்ய கோரி 482 வில் கேட்கலாம்.ஆனால் Serious gravity of punishment கொடுக்கப்படுகின்ற Heinous Crimes களுக்கு Offender and Victim சமரசம் ஏற்பட்டாலும் FIR Quash செய்ய நீதிமன்றம் அனுமதிப்பதில்லை. ஏன் எனில் இவ்வகையான heinous crimes தனி மனிதர்களுக்கு மட்டும் எதிரான குற்றம் இல்லை ,சமூகத்திற்கு எதிரான குற்றமாகும்.

#Quashing_of_FIR யில் இந்த வழக்குகள் முக்கிய பங்காகும்.

Parbatbhai Aahir @
Parbatbhai Bhi msinhbhai Karmur & Ors. Vs. State of Gujarat &
Anr.,

and Gian Singh vs. State of Punjab(Supra).

DR. DEEPAK JUNEJA vs. CENTRAL INFORMATION COMMISSION
High court of Delhi
W.P.(C) 11489/2016, CM No. 2470/2018
Judgment delivered on: April 29, 2019

மனுதாரர் பொது அதிகார அமைப்பிடமிருந்து தகவல்கள் கோருகின்றார். தகவல்கள் கிடைக்க பெறவில்லை என்ற நிலையில் முதல் மேல் முறையீடு செய்கின்றார். அப்போதும் அவருக்கு திருப்பதியாக தகவல் கிடைக்கவில்லை என்பதால், மத்திய தகவல் ஆணையத்தில் பிரிவு 19(3) மற்றும் 18(1)-ன்படி ஒரே மனு தாக்கல் செய்கின்றார். அதில் பிரிவு 20-ன்படி தண்டனை வழங்கவும், பிரிவு 19(8)(b) –ன்படி இழப்பீடும் மற்றும் பிரிவு 19(8)(a)(v)-ன்படி அலுவலர்களுக்கு பயற்சி அளிக்கவும் கோருகின்றார் மத்திய தகவல் ஆணையமானது, மனுதாரர் ஒரே மனுவில் மேற்படி இரண்டு பிரிவுகளையும் (பிரிவு 18 மற்றும் 19) கலந்து மனு தாக்கல் செய்ததால், அதை தள்ளுபடி செய்கின்றார்கள். அதை எதிர்த்து, மாண்புமிகு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்கின்றார். அவருடை மனுவில், ஏற்கனவே பல மனுக்கள் மத்திய தகவல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், பிரிவு 19(3) மற்றும் பிரிவு 18-ன் கீழ் மனுக்கள் தாக்கல் செய்யும்போது, அது அதிக காலத்தினையும் செலவினத்தையும் ஏற்படுத்தும், மத்திய தகவல் ஆணையததிற்கு கூடுதல் வேலைப்பழுவை உருவாக்கும், மேலும் சட்டத்தில் இவ்வாறு தனிதனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்றும், ஒரு குற்றச்சாட்டு என்றால் அதில் அனைத்து விபரங்களையும் குறிப்பிடவேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

.
மனுதாரர் சட்டத்தின் பிரிவு 18 மற்றும் 19(3)-ன் படி ஒரே மனுவை தாக்கல் செய்யலாமா என்பதை மாண்புமிகு உயர்நீதிமன்றம் கீழ்கண்டவாறு தீர்மானிக்கின்றது.
.
பிரிவு 20-ன்படி தண்டனை வழங்க, பிரிவு 18 மற்றும் 19 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கோரலாம். ஆனால் பிரிவு 19(8)(a)(v) மற்றும் 19(8)(b) ஆகியவைகளை மேல்முறையீட்டு வாயிலாக மட்டுமே கோரலாம். Chief Information Commissioner and Ors. v. State of Manipur and Ors., MANU/SC/1484/2011 என்ற வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றமானது, சட்டப்பிரிவு 18-ன் கீழ் புகார் தாக்கல் செய்யப்படும்போது, தகவல் ஆணையருக்கு தகவலை வழங்க ஆணையிட அதிகாரமில்லை மாறாக தகவல் வழங்க சொல்லி ஆணையிடும் அதிகாரம் பிரிவு 19(8)-ன்படி பிரிவு 19(3)-ன் கீழ் மேல் முறையீடு செய்யும்போதே உள்ளது என்று குறிப்பிடப்பட்டது, இந்த நீதிப்பேராணையில் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதன்படி பிரிவு 19(8)(a)(v) மற்றும் 19(8)(b) ஆகியவைகளை பிரிவு 19 (3)-ன் படி இரண்டாம் முறையீடு மூலமாக மட்டுமே கோரலாம். ஆகவே, மனுதாரர் பிரிவு 18 மற்றும் 19-ன் படி பரிகாரம் கோரினால், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

You may also like...