Sethu Sir Dinamalar: *உழைப்பே உன்னை நேசிக்கிறேன்!* * அவர் பெயர் கோகுல். சமீப ஆண்டுகளாக, வேலூர் செல்லும்போதெல்லாம், டார்லிங் ரெசிடென்சி ரெஸ்டாரண்டில் பார்த்திருக்கிறேன்.
[14/03, 06:35] sekarreporter1: http://youtube.com/post/UgkxzBVDePg3GJzyGXErd_cIysXnlO0cu03q?si=2cC9m7sE8XM4EpMS
[14/03, 06:35] sekarreporter1: [14/03, 06:33] sekarreporter1: Part 3
[14/03, 06:33] sekarreporter1: [14/03, 02:38] Sethu Sir Dinamalar: *உழைப்பே உன்னை நேசிக்கிறேன்!*
*
அவர் பெயர் கோகுல். சமீப ஆண்டுகளாக, வேலூர் செல்லும்போதெல்லாம், டார்லிங் ரெசிடென்சி ரெஸ்டாரண்டில் பார்த்திருக்கிறேன்.
முதல் முறை பார்த்தபோது, கிச்சனிலிருந்து, ஸ்கேட்டிங் வீலில் வருவதுபோல, சறுக்கிக் கொண்டே வந்து நின்று, “என்ன சார் சாப்பிடுறீங்க” என்றார்.
கிட்டத்தட்ட, பிரபு தேவாவின் மூவ்மென்ட்.
நமது பிளேட்டில், இட்லிக்கு துணையாக இருக்கும் சாம்பார் கிண்ணம் தீர்ந்து போவதை கவனித்து, நம் தேவை அறிந்து கேட்காமலேயே அடுத்த கிண்ணம் கொண்டு வந்து வைப்பார்.
பனங்கற்கண்டு பால் ஆர்டர் செய்தால், நாம் எப்போது அருந்த நினைக்கிறோமோ, அந்தக் குறிப்பு அறிந்து கொண்டு வந்து வைப்பார்.
என்னைப் போலவே அடுத்தடுத்த டேபிளில் அவர் கண்கள் அலை பாய்ந்து கொண்டிருக்கும்.
எப்போதும் புன்முறுவல்.
அந்த ரெஸ்டாரண்டில், பம்பரமாய் சுற்றி கொண்டிருப்பார்.
இன்று டார்லிங் சென்று இருந்தபோது பார்த்தேன். அவரது உடை மாறி இருந்தது.
என்னைப் பார்த்ததும் அதே புன்முறுவலுடன், துள்ளலுடன் அருகில் வந்து, குட் மார்னிங் சார் என்றார்.
“இப்ப, நான் கேப்டன் …” என்றபோது அவர் முகத்தில் குழந்தையின் மகிழ்ச்சி.
புலம்பல் இல்லாமல், உழைப்பை ரசித்து, மகிழ்ந்து செய்யும் ஒவ்வொரு மனிதரையும் மனதிற்குள் கொண்டாடிக் கொண்டே இருக்கிறேன்.
எங்கு சென்றாலும், ரசனையோடு உழைக்கும் யாராவது ஒரு மனிதர் கவனத்தை ஈர்க்கிறார்.
கோகுலுடன் ஒரு படம் எடுத்துக் கொள்ள தோன்றியது.
பெரிய பெரிய மனிதர்களோடு ஒட்டி நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள எப்போதும் எனக்கு சங்கோஜம்.
கோகுல் போன்றவர்களை காணும்போது தோள் தொட்டு புகைப்படம் எடுக்க ஆசை வந்தது.
ஏனென்றால், நானும் இப்படித்தான் வளர்ந்து இருக்கிறேன். உயர்ந்திருக்கிறேன்.
சமீபத்தில் கோயம்புத்தூர் சுந்தராபுரம் சென்றபோது அங்குள்ள அரோமா பேக்கரியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தேன்.
அங்கு பணிபுரியும் ஒரு தோழர், என் அலைபேசியை வாங்கி, பல கோணங்களில் எங்களை படம் எடுத்தார்.
அவருக்கு திருப்தி இல்லை.
நாங்கள் தேநீர் அருந்தி கொண்டிருந்த போது, மீண்டும் எங்களிடம் வந்து அலைபேசியை வாங்கி பல கோணங்களில் படங்களை சுட்டு தள்ளினார்.
“இங்க பேக் லைட் வருது சார்…”
“இந்த பக்கம் திரும்புங்க. லைட்டிங் நல்லா இருக்கு…”
அவரின் கண்களையும், அலைபேசியை கையாண்ட, கை விரல்களையுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சலிப்பு இல்லாமல், அந்தப் பணியை செவ்வனே செய்ய முற்பட்டார்.
அவர் பெயர் முருகன். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்றார்.
கோவை தினமலரில் பணியாற்றிய நாட்களில், காலையில் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பின்னர் அதை பிரிண்ட் செய்து அலுவலகம் வந்து காண்பித்து, அவை தேர்வு செய்யப்பட்ட பின், மீண்டும் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள, ஸ்கேனிங் சென்டர் சென்று ஸ்கேன் செய்து அந்த ஃபிலிமை அலுவலகத்தில் கொடுத்து சென்ற புகைப்படக் கலைஞர், சிவ சரவணன் உழைப்பை பார்த்து நெகிழ்ந்து இருக்கிறேன்.
செய்தி படம் எடுப்பதோடு என் வேலை முடிந்தது என்று நினைக்காமல், அது அச்சில் ஏறும் வரைக்குமான ஒரு பொறுப்பை சுமந்த சிவ சரவணன் இப்போது தி ஹிந்து ஆங்கில நாளிதழில் முக்கிய பொறுப்பில் இருப்பதை காணும்போது நெஞ்சம் சிலிர்க்கிறது.
புதுச்சேரியில் பிறந்து கோவையில் ஜொலிக்கும் ஒளிப்பட கலைஞர் சிவ சரவணனின், உழைப்பின் பயணத்தின் வலியை நான் அறிந்தவன்.
அவர் பணியில் இருந்த நாட்களில் எப்போது உண்பார். எப்போது உழைப்பார் என்று தெரியாது.
அவரைப்போல் பல உன்னத உழைப்பாளிகளை நான் கோவை தினமலரில் பார்த்திருக்கிறேன்.
செய்வனத் திருந்த செய்… என்பது மட்டுமல்லாமல், செய்வனவற்றை விரும்பிச் செய்… என்று உழைக்கும் தோழர்களை காணும் போது, அது நானாக இருக்கக் கூடாதா என்று ஏங்கி இருக்கிறேன்.
இதுபோல்தான், 1988 இல், மதுரை தினமலரில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்தேன்.
எடுத்த பணிகளில், நான்கு மடங்கு ஆர்வம் கொண்டேன்.
ஊதியத்திற்காக அல்லாமல், அனுபவத்திற்காக உழைத்தேன்.
உணவு, உறக்கம், உறவு, நட்பு என எல்லாம் உழைப்பு மட்டுமே என்றானது.
மதுரை தினமலர் பணியில் இருந்த காலங்கள் அது திறந்த வெளி பல்கலைக்கழகம் போல…
திரு. பார்த்திபன் மகாராஜன், திரு. ப. திருமலை, திரு. எல். முருகராஜ், திரு. குமரன், திரு. காளிதாஸ் என்று எளிமையாக அணுகும் மூத்தவர்களை பார்த்து கற்றுக் கொண்டேன்.
அதையே, இப்போது என்னுடன் பயணப்படும் புதியவர்களிடம் வலிய சென்று பணி அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் இறக்கும் போது, சொல்லாமல் விட்டுவிட்ட, பணி அனுபவங்கள் என்று எதுவும் இருக்கக் கூடாது. பல மூத்தவர்களின் அனுபவ வழிகாட்டல்களால் நிரம்பிய இந்த இதயத்தை, எதுவும் இல்லாமல் “எம்ப்ட்டி”யாகவே எடுத்து செல்ல நினைக்கிறேன்.
35 ஆண்டுகளில் திரும்பிப் பார்த்தால், உழைப்பு என்னை உயர்த்தியிருக்கிறது.
காலம் என்னை, செய்தி ஆசிரியர் நாற்காலியில் அமர்த்தி இருக்கிறது.
இப்போதும், கோகுல் போலவே, உழைப்பின் பொழுதுகளில், நான் உற்சாகமாகிறேன்.
முருகன் போலவே, மனதிற்கு திருப்தி வரும்வரை உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
சிவ சரவணன் போல, முதலாளிகள் யாரும் உத்தரவிடாமலேயே, பொறுப்புகளை சுமந்து கொள்கிறேன்.
இதையெல்லாம், கேலியாக பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஜாலியாக பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள்.
என்னை நேசிக்கும் புது முகங்களிலும் எல்லாம், திரும்பத் திரும்ப நான் சொல்லிக்கொண்டே இருப்பது இதுதான்: உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்து. உற்சாகமாய் உழைப்பை கொடு.
நீ உயர வேண்டும் என்ற சுயநலத்துக்காகவாது உழை.
காலம் உன்னை கவனிக்கும்.
காலம் உனக்கு அனுபவ கிரீடம் சூட்டும்.
ப்ரியமுடன் சேது
14.03.2025
[14/03, 06:29] sekarreporter1: Super