Sethu dinamalar sir may day வாழ்த்து உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே, என்னை உயரே வைத்திருக்கிறது.
*
1988 இல், ஒரு பிழை திருத்துனராக, தொடங்கியது என் உழைப்பின் பயணம்.
அதன்பின், உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியேன்.
உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே, என்னை உயரே வைத்திருக்கிறது.
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்ற பக்குவத்தை 33 ஆண்டு கால உழைப்பே கற்றுத் தந்திருக்கிறது.
உழைப்புதான் என்னை உளிபோல் செதுக்கி, உருவாக்கியது.
உளியின் வலிகளையும், கேலியின் வலிகளையும் தாங்கிக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறது மனது.
உழைப்பு, எனக்கு ஒரு தொழில் கற்றுத்தந்திருக்கிறது.
உழைப்பு, எனக்கு நிறைய குருமார்களை அடையாளம் காட்டியிருக்கிறது.
உழைப்பு, எனக்கு அன்பு நிறைந்த இதயங்களை நட்பாக்கி இருக்கிறது.
உழைப்பு, என் அறிவை பெருக்கி புதுப்புது அடையாளம் தந்திருக்கிறது.
உழைப்பு, என் வாழ்க்கை பயண வலிகளை போக்குகிறது – என்
உழைப்பு இன்னொருவர் உழைப்பு மீது
பொறாமை கொள்ள செய்ததில்லை.
உழைப்பு, இன்னமும் என் வயதை சொல்லாமல் மாயம் செய்கிறது.
உழைப்பே உன்னை நேசிக்கிறேன்! ஒன்றே ஒன்று யாசிக்கிறேன்.
என் உழைப்பின் இறுதி நிமிடமே, வாழ்வின் இறுதி நிமிடமாக இருக்க வேண்டும். இதுவே எனது ஆகப்பெரிய ஆசை.
பொன், பொருள், பூமி மீதெல்லாம் ஆசை இருந்ததில்லை. ஆனால், உழைப்பின் மீதான காதல் மட்டும் தீருவதே இல்லை.
உழைப்பாள தோழர்களுக்கு சேதுவின் அன்பு வாழ்த்துக்கள்!
maydaywishes
[5/1, 07:34] Sekarreporter: Super sir