R sureskumar judge order ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்தது.

61 கோடியே 80 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பில் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என அறிவிக்கப்படது

இந்நிலையில், ஏற்காட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, கொடைக்கானலில் அமைக்கவுள்ள தேசிய அளவிலான பயிற்சி மையத்திற்கு பதிலாக, ஏற்காடில் திட்டமிடப்பட்ட மாநில அளவிலான மையத்தின் பணிகளை தொடர அரசுக்கு உத்தரவிடக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு ((லேம்ப் – LAMP)) கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் எல்.பிசண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்

பின்னர்,இதுவரை சேலத்தில் கட்டுமான பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது,
திடீரென கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட என்ன காரணம் என கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து தமிழக அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்

You may also like...