Madras high court orders october 28th

[10/27, 11:36] Sekarreporter: தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமலபடுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு,
தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள்… எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை… ஆனால் அரசு நிலம் சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தியது.

மேலும், எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்திய நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[10/27, 12:27] Sekarreporter: பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் குற்ற சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ததோடு, விழுப்புரம் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளார்
[10/27, 13:02] Sekarreporter: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழக கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்து சமய அறநிலைய துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல்பணியாக நியமிக்கும் போது, கோவில் நிதியில் இருந்து தான் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது என்பதால், இது இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு விரோதமானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், அது அரசின் கடமை எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் அயல் பணியாக கோவில்களில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அறங்காவலர்களை நியமிப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், நான்கு வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிப்பதாக தெரிவித்தனர்.

கோவில்களின் அன்றாட பணிகளை கவனிக்கவும், நிலம் மற்றும் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போதுமான ஊழியர்கள் தேவை என்பதால், அயல் பணியாக கோவில்களுக்கு இந்து சமய அறநிலைய துறை ஊழியர்கள், அதிகாரிகள் நியமிப்பதற்கு தடை விதிக்க முடியாது என மறுத்த நீதிபதிகள், அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி விசாரணையை டிசம்பர் 2 வரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இத்ற்கிடையில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
[10/27, 13:34] Sekarreporter: சர்ச்சைக்குரிய கருத்துக்ளை டிவிட்டரில் வெளியிட்டதாக கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாஜக-வை சேர்ந்த கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில் பதிவான வழக்கில், அக்டோபர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரிய அவரது மனு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபட்ட நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க புகார்தாரர் கோபிநாத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கல்யாணராமனை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவற்றை பதிவு செய்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[10/27, 14:45] Sekarreporter: முதுநிலை மருத்துப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம் டி,, எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கையின்போது, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடிய அரசு மருத்துவர்கள் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படுவதை எதிர்த்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயின்று வரும் அரசுசார சேவை மருத்துவர்கள் சங்கத்தைச்சேர்ந்த 11 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கப் படுவதாக தெரிவித்துள்ளனர். அதனால் தங்களுக்கு முதுநிலை மருத்துவப்படிப்பில், உரிய இடங்கள் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசு வருகிற நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[10/27, 15:09] Sekarreporter: தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கடையாம்பட்டி தாலுகாவில் உள்ள தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை மக்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்த நிலம், பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தாரரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்கள் நல அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினர். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினர். வீட்டு மனை ஒதுக்க கோரி மீண்டும் புதிதாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம் தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதற்காக மாவட்டவாரியாக நிலங்களை அடையாளம் காணவும் வலியுறுத்தினர்.
[10/27, 16:10] Sekarreporter: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரிய மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற
உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளால் நியமிக்கபட்டவர்கள்,
யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்று பேசினார்.
இது வருத்தபட வேண்டியது, ஊழல் செய்பவ்ர்க்ளை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை, ஆகவே
தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடைபெறாது என்றும் குருமூர்த்தி பேசியிருந்தார்.

இதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனிடம் மனு ஒன்றை அளித்தார்.அதில் துக்ளக் பத்திரிக்கையின் 51வது ஆண்டு விழாவில் நீதித்துறையும் நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த மனுவை அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நிராகரித்துவிட்டார் .இந்த நிலையில் தற்போது மீண்டும் அரசுத்தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரிடம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் , தங்கள் தரப்பிடம் உரிய விசாரணை நடத்தப்படாமல் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .இதையடுத்து ஏற்கனவே அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்ற தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மனு மீது மீண்டும் அடுத்த மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
[10/27, 16:24] Sekarreporter: இயக்குனர் சுசி கணேஷனையும் மீ டூ இயக்கத்தின் கீழ் அவர் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலையையும் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இயக்குனர் சுசி கணேஷன் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக, இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லீனா மணிமேகலை பாஸ்போர்ட்டை முடக்கத்தை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,
பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டது

எனினும், மண்டல பாஸ்போர்ட் அலுவலரிடம் அவதூறு வழக்கு விசாரணையை காரணம் காட்டி லீனா மணிமேகலைக்கு பாஸ்போர்ட் வழங்க கூடாது என சுசிகணேசன்
புகார் அளித்திருந்ததால்,
பாஸ்போர்ட் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது

இந்நிலையில்,ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் தனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரி லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,நவம்பர் 1 ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு லீனா மணிமேகலையையும்,சுசி கணேசனையும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
[10/28, 06:37] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதிய நீதிபதி, நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக் ஆகிய 4 பேரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி நான்கு பேரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய நீதிபதி ஜெ.சத்தியநாராயணா பிரசாத், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

You may also like...