Madras high court orders march 6

[3/5, 10:44] Sekarreporter 1: திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பான
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். பின் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், 2019 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இதயவர்மனுக்கு பணம் கொடுத்து உதவாததால்,
 கோவில் நிலத்தை தான் ஆக்கிரமிக்கவுள்ளதாக பொதுமக்களிடையே
அவதூறு பரப்பி,தனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த இதயவர்மன் ஆட்கள் நிலத்தை  சேதப்படுத்தியதாக  தொடர்பாக குமார் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து 
விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தாரர் பரிந்துரைத்ததை
எதிர்த்து குமார்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திருப்போரூர் தாசில்தார் விசாரணையில் சம்மந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பும் அல்ல… கோவிலுக்கு சொந்தமான இடமும் அல்ல என தெரிய வந்த போதும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இருந்தும் இதயவர்மனின் அரசியல் செல்வாக்கால் பொறுப்பை தட்டி கழிக்கும் விதமாக செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்குருக்கு பரிந்துரைத்த  உத்தரவை ரத்து செய்து,  தாசில்தாரரே விசாரிக்க  உத்தரவிட   வேண்டுமெனவும், இதயவர்மனோ அவரது ஆட்களோ தன்னுடைய நிலத்திற்கு சென்று வர இடையூறு ஏற்படுத்தக் கூடாதென உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின்  உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும்
இந்த நில விவகாரத்தில் தலையிட கூடாது என அப்போதைய திமுக எம்.எல்.ஏ இதய வர்மன் தரப்பினருக்கும் உத்தரவிட்டிருத்த து. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இது சிவில் வழக்கு என்றும் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[3/5, 12:00] Sekarreporter 1: திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை நான்கு மாதத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றவேண்டும் என்ற கவிஞர் லீனா மணிமேகலையின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டிவிட்டரில் கவிஞர் லீனா மணிமேகலை திரைப்படஇயக்குனர் சுசிகணேசன் எதிராக மீ டு புகாரை தெரிவித்ததை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளதாகவும் சுய விளம்பரத்திற்காக லீனா மணிமேகலை இது போல ஒரு தகவலை பரப்பி உள்ளதாகவும் எனவே இந்திய தண்டனை சட்டம் அவதூறு பிரிவின்கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.வழக்கு விசாரணையில் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து லீனா மணிமேகலை தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பாஸ்போர்ட் முடக்கத்தை நீக்கியதால்,உச்சநீதிமன்றத்தில் சுசிகணேசன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,நான்கு மாதத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை விசாரித்துமுடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் மோகனாம்பாள் இந்த வழக்கை விசாரிக்க கூடாது வேறு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு விசாரணையின்போது, இயக்குனர் சுசிகணேசன் சார்பில் ஆஜரான அலெக்சிஸ்சுதாகர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழககு விசாரணையை இழுத்தடித்துவருவதாகவும், வழக்கை மேலும் தாமதப்படுத்தவேண்டும் என்பதற்காகவே இதுபோல் வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் எனவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.மேலும் உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கை நான்குமாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று கெடு விதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, லீனா மணிமேகலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட்க்கு எதிராக கூறி வழக்கை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளதாகவும் எனவே வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[3/5, 12:31] Sekarreporter 1: 10 ஆயிரம் பேரிடம் 14 கோடி ரியல் எஸ்டேட் மோசடி செய்த புகாரில்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அகிலாண்டீஸ்வர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாதம் 400 வீதம் 50 மாதங்களுக்கு பணம் கட்டினால் செய்யாறு பகுதியில் அரை கிரவுண்ட் நிலம் கிடைக்கும் என்றும் மாதம் 300 வீதம் 50 மாதங்களுக்கு பணம் கட்டினால் திருச்சியில் அரை கிரவுண்ட் நிலம் கிடைக்கும் என்றும் திருச்சியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் கடந்த 2007ல் அறிவித்தனர்.
இதையடுத்து, அந்த திட்டத்தில் ஏராளமானோர் பணம் கட்டனர். ஆனால், அவர்களுக்கு நிலத்தை கிரயம் செய்து தராமல் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஏமாற்றி
சுமார் 10 ஆயிரம் பேரிடம் சுமார் 14 கோடியை பணத்தை வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக காஞ்சிபுரம் சர்வதீர்த்த மேல்கரையை சேர்ந்த ஆர்.வரதராஜன் சிவகாஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், அவரது மகன் சுதாகர், அந்த நிறுவனத்தை சேர்ந்த செல்வராஜ், பிரகாஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சங்கரசுப்பிரமணியனும், சுதாகரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் புகார்தாரர் வரதராஜன் சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி
பாதிக்கப்பட்ட 2206 பேர் நீதிமன்றத்தில் நாடி நிவாரணம் கோரியுள்ளதால், நிறுவனத்திற்கு சொந்தமான 21 சொத்துக்களில் 5 தவிர மற்றவற்றின் மதிப்பு சந்தை மதிப்பில் தற்போது 10 கோடியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருமான வரித்துறை 6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதால், தற்போது இந்த விஷயத்தை தீர்க்க தயாராக உள்ளதாக மனுதாரர்களில் ஒருவரான சுதாகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பிரச்னையை தீர்த்துவைக்க ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை ஆணயராக நியமனம் செய்வதாகவும், அவர் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை, ஆவணங்களை பெற்று பரிசீலித்து நிலம் அல்லது பணத்தை திரும்ப தர உரிய நடவடிக்கைகளை எடுத்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் நிறுவன உரிமையாளரான சுதாகர் நீதிபதி ஆணையத்திற்கு உரிய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
[3/5, 14:25] Sekarreporter 1: பிரசவ அறுவை சிகிச்சையை கவனக்குறைவாக மேற்கொண்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பூசாரிவளவு கிராமத்தை சேர்ந்த கே.சகுந்தலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது 2020 டிசம்பர் 16ம் தேதி எடப்பாடி அருகே உள்ள ராயனம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டபோது, சுக பிரசவம் என்ற நிலை இருந்தும், தொலைபேசி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற செவிலியர், அறுவை சிகிச்சை செய்ததாக குறிபிட்டுள்ளார்.

உரிய அனுபவம் எதுவும் இல்லாமல் நான்காம் தர சிகிச்சை, பெருங்குடல் வாய், சுருக்குதசை ஆகிய பகுதிகளில் அதிக ஆழமாக வெட்டப்பட்டது போன்ற காரணங்களால் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதனால் மிகவும் பலவீனமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பொது சுகாதார துறை இயக்குனர், சேலம் பொது சுகாதார துறை துணை இயக்குனர் ஆகியோரை தானாக முன்வந்து சேர்க்க உத்தரவிட்டதுடன், வழக்கு குறித்து அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[3/5, 17:15] Sekarreporter 1: ஏற்கனவே சகோதரர் அரசு பணியில் இருப்பதாக கூறி,
கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியரை, 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால், நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர், ஏற்கனவே அதே துறையில் சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி, 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்து பொது சுகாதார துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது அவர் இறந்து விட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வழக்கை நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில் திடீரென பணி நீக்கம் செய்தது அவரது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவருக்கு சேரவேண்டிய பணிஓய்வு பலன்களை வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு உத்தரவின்படி, கருணை அடிப்படையில் ஒரு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க முடியும் எனவும், மற்றொரு உறுப்பினருக்கு வழங்க முடியாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு ஊழியரின் குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் அரசு வேலையில் இருந்தால், குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு, மற்றொரு உறுப்பினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும், நாகராஜன் 22 ஆண்டுகள் பணியற்றிய நிலையில், ஏற்கனவே அவரது சகோதரர் பணியாற்றி வருவதாக கூறி திடீரென பணி நீக்கம் செய்திருக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும், நாகராஜனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்களை அவரது வாரிசுகளுக்கு மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, அரசு மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.

You may also like...