Madras high court orders march 10 ஐகோர்ட் உத்தரவுகள்ஐகோ

[3/9, 10:05] Sekarreporter: Prisoners case full ordrr M.N.BHANDARI, CJ AND D.BHARATHA CHAKRAVARTHY,J RS for police. Mr.Hasan Mohammed Jinnah, State Public Prosecutor for R4 https://sekarreporter.com/prisoners-case-full-ordrr-m-n-bhandari-cj-and-d-bharatha-chakravarthyj-rs-for-police-mr-hasan-mohammed-jinnah-state-public-prosecutor-for-r4/
[3/9, 11:41] Sekarreporter: Idol Case dismissed. Court says Idol Wing CID is already investigating the theft cases and recovery is part of such investigation. Cj order state pp ginna argued . https://sekarreporter.com/idol-case-dismissed-court-says-idol-wing-cid-is-already-investigating-the-theft-cases-and-recovery-is-part-of-such-investigation-cj-order-state-pp-ginna-argued/
[3/9, 12:27] Sekarreporter: நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது https://sekarreporter.com/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/
[3/9, 12:27] Sekarreporter: Actor Simbu case mhc judge velmurugan order fine one Lak for producers association for not filing counter for more than 1k days https://sekarreporter.com/actor-simbu-case-mhc-judge-velmurugan-order-fine-one-lak-for-producers-association-for-not-filing-counter-for-more-than-1k-days/
[3/9, 12:39] Sekarreporter: Judicial service Compulsory retirement case full order HON’BLE MR.MUNISHWAR NATH BHANDARI, CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.11885 of 2021 Dr.I.Jayanthi .. Petitioner. For the Petitioner : Mr.R.Singaravelan Senior Counsel for Mr.R.Jayaprakash For the Respondents : Mrs.R.Anitha Special Government Pleader for respondent Nos.1 and 2 : B.Vijay for respondent No.3 ORDER https://sekarreporter.com/judicial-service-compulsory-retirement-case-full-order-honble-mr-munishwar-nath-bhandari-chief-justice-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-p-no-11885-of-2021-dr-i-jayanthi/
[3/9, 12:55] Sekarreporter: https://youtu.be/dFx4H31wvL8
[3/9, 15:48] Sekarreporter: https://youtu.be/pyY_o1leICg
[3/9, 16:08] Sekarreporter: /9, 15:54] Sekarreporter: … பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருந்ததை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாதம் ஒருமுறை அருகே உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை ஆகிறார். https://sekarreporter.com/9-1554-sekarreporter-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3/
[3/9, 16:59] Sekarreporter: https://youtu.be/EuKikN3BBqQ
[3/9, 17:12] Sekarreporter: https://youtu.be/qD7XQg9UNfM
[3/9, 17:35] Sekarreporter: Bench of Justices L. Nageswara Rao and B.R. Gavai directed that Perarivalan be released on bail subject to the satisfaction of conditions posed by the trial court concerned. He shall report to the local police station. https://sekarreporter.com/bench-of-justices-l-nageswara-rao-and-b-r-gavai-directed-that-perarivalan-be-released-on-bail-subject-to-the-satisfaction-of-conditions-posed-by-the-trial-court-concerned-he-shall-report-to-the-loc/
[3/9, 22:00] Sekarreporter: https://youtu.be/joajgsSIcGc

[3/9, 11:26] Sekarreporter: வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை சிபிஐ தனி குழு அமைத்து மீட்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்திருந்த வழக்கில்,
கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க சென்றபோது அங்கு உள்ள வாஷிங்டன் அருங்காட்சியகத்தில், தமிழகத்தை சேர்ந்த பழமைவாய்ந்த சிலைகள் இருந்த தாகவும்,இதுபோல்
வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்லப்பட்ட இந்திய சிலைகளைமீட்டு இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்..கடத்திசெல்லப்பட்ட சிலைகளை சிபிஐ இணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து விசாரித்து மீட்க நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனுதார ர் வழக்கு தொடர்ந்து,அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சிலை கடத்தல் வழக்குகளை சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[3/9, 11:28] Sekarreporter: அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது, வாஷிங்டன் நகரில் உள்ள பெரார் அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், ஐந்து முக ருத்ராட்சம் உள்ளிட்ட புராதன பொருட்கள் இருந்ததை கண்டதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் திருடப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரித்து சிலைகளை மீட்கும் வகையில் இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் தனி குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை குற்றவியல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி ஏற்கனவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றியதை எதிர்த்து மனுதாரர் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்து, சிறப்பு அதிகாரியை நியமனம் செய்ததாகவும், அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் இந்த தகவல்களை மனுதாரர் மறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, இந்த வழக்குகளை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[3/9, 11:56] Sekarreporter: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், இங்கு மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை பறித்து கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

குதிரை பேரமும், கட்சி தாவலும் நடக்கும் வாய்ப்புள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது.
[3/9, 12:10] Sekarreporter: நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், 1008 நாட்கள் ஆகியும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.

வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத் தோல்வியால் ரூ. 1.51 கோடி மட்டுமே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சம்பளம் வழங்கியதாக சிம்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் நடிகர் சங்கத்தில் புகார்

இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி ரூ. 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
[3/9, 12:16] Sekarreporter: ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது.

இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.

அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு வழக்கை, ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[3/9, 12:25] Sekarreporter: நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா அவரது உறவினர்களுடன் சேர்ந்து, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித் தொகை 45 லட்சம் ரூபாயை வரித்துறைக்கு செலுத்தி விட்டது போல போலி ஆவணங்களை காட்டி விட்டு, அத்தொகையை தனது உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதுதொடர்பான ழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் என கணக்காளர் ரம்யா முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரம்யா தரப்பில் 45 லட்சம் ரூபாயில் 21 லட்சம் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஷால் தரப்பில் ரம்யாவிற்கு முன் ஜாமீன் வழங்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

15 லட்சம் ரூபாயை பிணை தொகையாக செலுத்தவும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட நிபந்தனை விதித்து, முன் ஜாமீன் வழங்கியுள்ளார்.
[3/9, 13:04] Sekarreporter: வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன்,இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கடந்த அக்டோபர் மாதம் தேதி கைது செய்தது. கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார.. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி னுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அந்த மனுவில் ஏற்கனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வோடு பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் பேசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை என்றும் இவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மத மோதலை உருவாக்கும் விதமாக பேசுவதால் அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது சரிதான் என்றும் எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like...