Madras high court orders feb 26 ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 26

[2/26, 11:46] Sekarreporter 1:

 

[2/26, 07:08] Sekarreporter 1: Full order THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM Contempt Petition (MD) SR No.62844 of 2021 S.Radhika … Petitioner -vs- 1.Mrs.G.Latha, IAS, The Chairman, Teachers Recruitment Board, 4th Floor, EVK Sampath Maaligai, DPI Campus, College Road, Chennai-06. 2.Mrs.R.Swaminatha, Chief Educational Officer, O/o.The Chief Educational Office, Madurai. 3.Mr.S.Krishnasamy, The Member Secretary, Tamil Nadu State Council for Higher Education, Wellington College for Lady Campus, Chennai. … Respondents Prayer:- Petition filed under Section 11 https://sekarreporter.com/full-order-the-honourable-mr-justice-s-m-subramaniam-contempt-petition-md-sr-no-62844-of-2021-s-radhika-petitioner-vs-1-mrs-g-latha-ias-the-chairman-teachers-recruitment-board-4t/
[2/26, 07:08] Sekarreporter 1: HON’BLE MR.MUNISHWAR NATH BHANDARI, CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.3371 of 2022 & WMP Nos.3481, 3482 & 3484 of 2022 1. Indic Collective Trust 5E, Bharat Ganga Apartments Mahalakshmi Nagar 4th Cross Street Adambakkam, Chennai 600 088 Rep. by its President T.R.Ramesh. 2. T.R.Ramesh vs https://sekarreporter.com/honble-mr-munishwar-nath-bhandari-chief-justice-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-p-no-3371-of-2022-wmp-nos-3481-3482-3484-of-2022-1-indic-collective-trust-5e-bharat/
[2/26, 07:08] Sekarreporter 1: High Court of Madras – Principal Seat at Madras Sitting Arrangements (Revised) – From February 28, 2022 Hon’ble Judges Subject 1. The Hon’ble Chief Justice and D.Bharatha Chakravarthy, J Writ Petitions – Public Interest Litigations (PILs); https://sekarreporter.com/high-court-of-madras-principal-seat-at-madras-sitting-arrangements-revised-from-february-28-2022-honble-judges-subject-1-the-honble-chief-justice-and-d-bharath/
[2/26, 07:08] Sekarreporter 1: Hon’ble Chief Justice has been pleased to approve the following arrangements with effect from 28.2.2022. A) The urgent matters pertaining to the Division Bench presided over by the https://sekarreporter.com/honble-chief-justice-has-been-pleased-to-approve-the-following-arrangements-with-effect-from-28-2-2022-athe-urgent-matters-pertaining-to-the-division-bench-presided-over-by-the/
[2/26, 07:42] Sekarreporter 1: https://youtu.be/HWBxGnDfdNc
[2/26, 07:42] Sekarreporter 1: https://youtube.com/shorts/TOtr3mA65oU?feature=share
[2/26, 07:42] Sekarreporter 1: Mba madras bar association marathan walk judhes advocates photos tks k balu for taking photos https://sekarreporter.com/mba-madras-bar-association-marathan-walk-judhes-advocates-photos-tks-k-balu-for-taking-photos/
[2/26, 08:08] Sekarreporter 1: [2/26, 08:06] Sekarreporter 1: if any one in judges cricket match please take photos videos and send me
[2/26, 08:06] Sekarreporter 1: 🌹🌹
[2/26, 08:38] Sekarreporter 1: THE HONOURABLE MR.JUSTICE ABDUL QUDDHOSE W.P.(MD)No.3704 of 2022 https://sekarreporter.com/the-honourable-mr-justice-abdul-quddhose-w-p-mdno-3704-of-2022/
[2/26, 08:43] Sekarreporter 1: [2/26, 08:42] Sekarreporter 1: https://youtu.be/kochW86Ng34
[2/26, 08:42] Sekarreporter 1: judge pushpa sathiya narayanan farwell speech in mhc function
[2/26, 14:48] Sekarreporter 1: Archagar case implead petition copy https://sekarreporter.com/archagar-case-implead-petition-copy/
[2/26, 16:47] Sekarreporter 1: Life appeal sentence reduced full order THE HONOURABLE MR. JUSTICE P.N.PRAKASH and THE HONOURABLE MRS. JUSTICE R.HEMALATHA Crl.A.No.381 of 2018 Muniappan                                              Vs. The Inspector of Police, Nagarasampatti Police Station, https://sekarreporter.com/life-appeal-sentence-reduced-full-order-the-honourable-mr-justice-p-n-prakash-and-the-honourable-mrs-justice-r-hemalatha-crl-a-no-381-of-2018-muniappan/
[2/26, 17:38] Sekarreporter 1: [2/26, 17:35] Sekarreporter 1: https://youtu.be/CKWJ8iTDLVw
[2/26, 17:35] Sekarreporter 1: Senior Advt Wilson Live பேட்டி arguments 10.5% ஒதுக்கீடு ரத்து செய்யக்கூடாது வன்னியர் வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தள்ளி வைப்பு
[2/26, 20:15] Sekarreporter 1: https://youtu.be/UwhFX4cCNZY
[2/26, 20:37] Sekarreporter 1: https://youtu.be/zd9S-lT-csI

 

 

மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில் மாமல்லபுரம் பேரூராட்சி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பைக் கிடங்காக பயன்படுத்தப்படுவதாக தனதேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளை பின்பற்றி குப்பைக்கிடங்கு அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பி உள்ளதாகவும், அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதன் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாமல்லபுரம் பேரூராட்சி தரப்பில், உலக பிரசித்திபெற்ற மாமல்லபுரம் பகுதியை சுகாதாரமான முறையில் பராமரித்து வருவதாகவும், குப்பைக்கிடங்கு அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்றும், அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும், இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்தே குப்பைக்கிடங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என தெரியவருவதாகவும், இதுகுறித்து விரிவான அறிக்கையை ஒருவாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விதிமீறல் நோட்டீஸ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தி , விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/26, 13:12] Sekarreporter 1: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தங்களை சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் அந்த மனுவை கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நிராகரித்து விட்டனர் .இந்த நிலையில் மீண்டும் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.ரங்கநாதன் மீண்டும் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் அரசால் அமைக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற பள்ளியில் சாதி பார்க்கப்படாமல் அனைத்து சாதி மாணவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நல சங்க வழக்கில் தாங்களும் ஒரு இடையீட்டு மனுதாரர் ஆக இருந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறார் .அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசு உத்தரவை ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற பள்ளியில் பயிற்சி பெற்று தீட்சை பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்ட நிலையில்,இந்த வழக்கில் தங்களை இடையீட்டு மனுதாரராக விசாரிக்க வில்லை என்றால், நேரடி பாதிப்புக்கு உள்ளாவது தாங்கள்தான் என்றும் தங்கள் தரப்பு விசாரிக்கப்படவில்லை என்றால் பாரபட்சமாக இருக்கும், தங்களுடைய உரிமை பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
[2/26, 13:51] Sekarreporter 1: அர்ச்சகர் என்பது சாதி சார்பற்ற பதவி என்றும், அதில் எந்த பாரபட்சம் இருக்கக்கூடாது எனக் கூறி, அர்ச்சர்கர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி, அர்ச்சர்கர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்ட தமிழக அரசு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுத்திருந்தது.

இந்த விதிகளை எதிர்த்தும், அர்ச்சகர் பள்ளிகள் நடத்துவதை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி, அர்ச்சர்கர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வா. அரங்கநாதன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் வகையில், 2006ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சென்னை பார்த்தசாரதி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் போன்ற கோவில்களில் அர்ச்சர்கர் பயிற்சி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அர்ச்சகர் என்பது சாதி சார்பற்ற பதவி என்றும், அதில் எந்த பாரபட்சம் இருக்கக்கூடாது என்றும் முறையான பயிற்சி பெறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகமம் மற்றும் மந்திர பயிற்சிக்கு தேர்வு நடத்தி சான்றுகள் வழங்கியுள்ளதாகவும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆலய நுழைவு சட்டத்தை எதிர்த்த வழக்கில், சாதி அடிப்படையில் பாரபட்சம் கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக பயிற்சி பெற்று தீட்சை பெற்றுள்ள தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், தங்கள் சங்கத்தை இவ்வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[2/26, 16:12] Sekarreporter 1: கசாப்புக் கடை பெண்ணை தாக்கி மரணத்தை ஏற்படுத்தியதாக அவருடன் இணைந்து வாழ்ந்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவரஹள்ளியில் இறைச்சி கடை நடத்திவந்த முத்தம்மாள் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் முத்தம்மாளும், முனியப்பன் என்பவரும் மணமுடிகாமல் இணைந்து வாழ்ந்தனர். கடந்த 2015 ஜூலை 27ஆம் தேதியன்று மணிமேகலை என்பவரின் வீட்டில் முத்தாம்மாள் தனது சகோதரர் பழனியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த முனியப்பன், பணம் மற்றும் சொத்தை சகோதரனுக்கு கொடுக்கிறாயா எனக் கூறி, கசாப்பு கத்தியால் முத்தம்மாளை வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த முத்தம்மாள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முத்தம்மாள் தாக்கபட்ட சம்பவம் தொடர்பாக முனியப்பன் மீது நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி அரசு மருத்துவமனையிலிருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் மாற்றப்பட்ட நிலையில்15 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, சற்று உடல்நலம் தேறினார். ஆனால் அவரது உறவினர்கள் அலைச்சல் மற்றும் பணச் செலவு காரணமாக முத்தம்மாளை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

வீடு திரும்பிய சில நாட்களில், காயத்தில் வலி அதிகமாகி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு செப்டம்பர் 20ஆம் தேதி முத்தம்மாள் மரணமடைந்தார்.

இதன்காரணமாக முனியப்பன் மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக காவல்துறையினர் மாற்றி, கிருஷ்ணகிரி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் முனியப்பனுக்கு
ஆயுள் தண்டனையும் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முனியப்பன் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முனியப்பன் தரப்பில் வழக்கறிஞர் கே. முருகேசன் ஆஜராகி, மூன்று நேரில் பார்த்த சாட்சியங்களும் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், கொலைக்கான உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிட்டார்.

ஆனால் காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எம். பாபு முத்துமீரான் ஆஜராகி, சொத்தை சகோதரனுக்கு கொடுத்துவிடுவார் என்ற உள்நோக்குடன் கொலை நடந்திருப்பதாகவும், சாட்சிகளில் முரண்பாடு இல்லை என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சகோதரனுக்கு சொத்துக்களை கொடுத்துவிடுவார் என்ற சந்தேகம் நிலவிவந்த நிலையில், ஒன்றாக டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு முனியப்பன் வெட்டியதை சுட்டிக்காட்டி, கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் முத்தாம்மாள் தாக்கப்பட்டு 55 நாட்களுக்கு பிறகு இறப்பு நிகழ்ந்துள்ளதாகவும், தொடர் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றாலும், அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றதும் மரணத்திற்கு காரணம் என தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 304 உட்பிரிவு 2ன் கீழ் முனியப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளனர்.

அதனடிப்படையில் கொலை வழக்கில் முனியப்பனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
[2/26, 16:12] Sekarreporter 1: கோயில்களை யார் நிர்வகிப்பது என்ற ஒரு அடிப்படைப் பிரச்சினையும் உள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரலின் கீழ் இருக்க வேண்டுமா நீதிபதி

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் ரெங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ,
என திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர்/செயல் அலுவார்ஜெயராமன், 01.10.2019 அன்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது முகநூலில் கோவில் முறைகேடு நடப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.மதஉணர்வை புண்படுத்தும் விதமான கருத்துகளை பரப்பி வருவதாக கூறினார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்..என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது,
தமிழ்நாடு கோவில்களின் நகரம். கோவில்கள் நமது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . பழமையான கோவில்களின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள் தனியார்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. கோவில் பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

கோயில்களை யார் நிர்வகிப்பது என்ற ஒரு அடிப்படைப் பிரச்சினையும் உள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரலின் கீழ் இருக்க வேண்டுமா
அறிவும், அர்ப்பணிப்பும் உள்ள ஆர்வலர்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அதே அளவு, நிலைபாட்டை கோவில்கள் மீதும் கடைபிடிக்க வேண்டும் என்று வாதிடுவது நியாயமானது தான்.
ஏனென்றால் மனுதாரர் ஒரு தீவிர பக்தர் மட்டுமல்ல, ஆர்வலரும் கூட. அவரது நம்பிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை.
அதேவேளையில், சில சமயங்களில் மனுதாரர் நடந்துகொண்டிருக்கும் விதம் கோவில் நிர்வாகத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குவாதம், விவாதம் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் . இது தான் நாகரீகம் .மனுதாரர் இதை உணரவேண்டும் . மனுதாரர் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை. என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[2/26, 16:56] Sekarreporter 1: இந்து சமய அறநிலையத்துறை கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரு திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதித்தம் ஊராட்சியின் தலைவரான ஆர்.சந்திரா தொடர்ந்துள்ள வழக்கில், கண்டிராதித்ததில் உள்ள கருப்பசாமி அய்யனார் கோவில் அறநிலையத்துறை செயல் அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கண்டிராதித்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவரான டி. தில்லை திருவாசகமணி கருப்பசாமி அய்யனார் கோவிலின் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெற்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, கோவில் வளாகத்திற்குள் இரண்டு திருமண மண்டபங்களை கட்டியதாகவும், மண்டபத்தின் சாவியை ஒப்படைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அறநிலையத்துறைக்கு அளிக்கப்பட்ட தொடர் புகார்களை தொடர்ந்து, மண்டபங்களை பூட்டி சீல் வைக்க கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி 9 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டும், அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், பக்தர்களும், பொதுமைக்களும் நன்கொடை கொடுத்த நிதியில் கட்டப்பட்டதால், மண்டபத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் நன்கொடை கொடுத்து கட்டிடம் கட்ட சொன்னால் அனுமதிபீர்களா என கேள்வி எழுப்பி, உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/26, 17:35] Sekarreporter 1: வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்றும், சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது எனவும், சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
[2/26, 17:44] Sekarreporter 1: தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகவும், தனியார் கல்லூரிகளுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடி க்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி, தலைமைச் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020 – 21ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்ல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடததாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார் கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் எனவும், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டைகள் எழுந்ததால் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை என்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஓய்வுபெற்ற மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜனுக்கான ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி க்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கூடாது என தமிழக டிஜிபிக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தகுதி இருந்தும், மேற்படிப்பு கனவை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இரு மனுதாரர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இத்தொகையை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளவும் அனுமதித்துள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 25ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...