Madras high court orders december 18th

[12/17, 07:05] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்காக நாளை (டிசம்பர் 17) வெளியிடுவதாக இருந்த வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என தேர்தல் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் சங்கமான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளை வகுத்து உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 25 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணியாற்றி இருக்க வேண்டும் எனவும், ஆண்டுக்கு 50 வழக்குகளில் ஆஜராகி வாதிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சங்கத்தின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிட உள்ளதால் மறு ஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், ஜி.ராஜேஷ், சத்யபால், காணிக்கைநாதன் ஆகியோர் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் முறையிட்டார்.

முறையீட்டை ஏற்று, ஜனவரி 7ம் தேதி மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், நாளை வெளியிட இருக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிடக் கூடாது என தேர்தல் குழுவுக்கு அறிவுறுத்தினர்.
[12/17, 09:42] Sekarreporter 1: பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் குற்றபத்திரிகை நகல் வழங்குவதற்காக நடிகை மீராமிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மீதுனுக்கும் சம்மன் அனுப்பிய நிலையில், மீரா மிதுன் தலைமறைவானார்.

பின்னர் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கிடையில் இருவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை டிசம்பர் 17ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
[12/17, 10:49] Sekarreporter 1: வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்…

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார்….

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது…

உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது…

நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு…
[12/17, 11:14] Sekarreporter 1: உணவு கலப்படம் தொடர்பாக மாதிரிகள் சேகரித்து, ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது என்றும், கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிய தனியா பாதுகாப்பற்றது என உணவு பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனோகர் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் பிறப்பித்த உத்தரவில், உணவு கலப்படத்தை தடுக்க தனி துறை அமைக்கப்பட்டுள்ள போதும், கலப்படம் என்பது அதிகளவில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்வது மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதி, உணவு கலப்படத்தை தடுக்க, பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உணவு கலப்படம் தொடர்பாக மக்கள் உடனடி புகார் தெரிவிக்க கடைகளில் உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் ஆப் எண்களை வைக்க அறிவுறுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உணவு கலப்பட புகாருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கத் தவ்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[12/17, 16:33] Sekarreporter 1: பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் குற்றபத்திரிகை நகல் பெறுவதற்காக நடிகை மீராமிதுன் ஆஜராகதால் ஜனவரி 11ஆம் தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதற்கிடையில் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதன் நகல்களை கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரான நிலையில், நடிகை மீரா மீதுன் ஆஜராகவில்லை.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், ஜாமீன் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீராமிதுன் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, நிபந்தனையை நிறைவேற்றவில்லை ஏன்றால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
[12/17, 17:04] Sekarreporter 1: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், டில்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்த போது, சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான கேளம்பாக்க நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளை தூண்டி விட்டு இந்த பொய் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தரமாக நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் பதியப்படுவதாகவும், அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், நேற்று கூட ஒரு புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிவசங்கர் பாபா மாணவிகளுடன் இருந்த புகைப்படங்களையும், அவர் மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தாக்கல் செய்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டத்த்தில் தான் உள்ளது என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்றார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், இந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்றும், மனுதாரருக்கு 73 வயதாகி விட்டது என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாமியார் என கூறிக்கொள்ளும் மனுதாரருக்கு எதிரான புகார்களின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்பதாலும், ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[12/17, 20:01] Sekarreporter 1: உடல் குறைபாட்டை கிண்டல் செய்தவரை தாக்கி, மரணத்திற்கு காரணமான மாற்றுத் திறனாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பாலகுருவை மாற்றுத் திறனாளி என ஸ்டாலின் என்ற சிவராமகிருஷ்ணன் கிண்டல் செய்துள்ளார். இதனால் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த பாலகுரு கட்டை ஒன்றால் தாக்கியதில் படுகாயமடைந்த ஸ்டாலின் பின்னர் உயிரிழந்தார். இதுகுறித்து ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பாலகுருவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.டி.லட்சுமி ரமேஷ் முன்பு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பாலகுரு திட்டமிட்டு கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், திடீர் ஆத்திரம் காரணமாக குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
[12/17, 20:43] Sekarreporter 1: ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது
[12/17, 22:54] Sekarreporter 1: பெண் வழக்கறிஞர், அவரது மகளுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதியை துஷ்பிரயோகம் செய்யும் வீடியோவைப் பரப்பி, நீதிமன்றத்தை அவமதித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரை உயர்நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்காட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கின்போது கடந்த ஜூன் 6 ஆம் தேதி சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜன் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார், வெளியே வருவதற்கான தகுந்த பாஸ் இருக்கிறதா என்று கேட்டதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரின் தாயாரான வழக்கறிஞர் தனுஜா ராஜனுக்கும், காவல்துறைக்கும் வாக்குவாதம் நடந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், அரசு அதிகாரியை பொது வெளியில் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக, வழக்குரைஞர், அவரது மகள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

சட்டத்துறையைச் சேர்ந்தவர்களின் நடத்தை தொடர்பான விவகாரம் என்பதாலும், இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதையும் உணர்ந்த நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் அறிக்கை கோரியது.
நீதிமன்றத்தின் இந்தச் செயலால் கோபமடைந்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீதித்துறை செயல்முறையையும், தனி நீதிபதியையும் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோவை பதிவு செய்து, அதையே சமூக வலைதளங்களில் பரப்பியதாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தானாக முன்வந்து தொடரப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
நீதிமன்ற அவமதிப்பு, நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் கிருஷ்ணமூர்த்தி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு குற்றச்சாட்டிற்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் ஒரு வாரம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். இது தவிர நீதிமன்றத்தை அவமதித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரை உயர்நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்காட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கிருஷ்ணமுர்த்தியின் தண்டனை குறித்து அவர் பதிவு செய்துள்ள கேரளா பார் கவுன்சிலுக்கும், பணியாற்றக்கூடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கும் தெரிவிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடுள்ளனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறித்தியுள்ளனர்.ma

You may also like...