Madras high court october 13 orders

[10/13, 11:06] Sekarreporter 1: [10/13, 11:04] Sekarreporter 1: Hijab Row | Supreme Court Gives Split Verdict- Matter to be Referred to Three Judges Bench
[10/13, 11:04] Sekarreporter 1: The Supreme Court has given a split verdict on the hijab ban by the Karnataka Government in petitions challenging the March 15 Karnataka High Court, whereby the Karnataka HC dismissed a batch of petitions filed by Muslim girls studying in Udupi pre-university colleges seeking the right to wear hijab in classrooms.
[10/13, 11:39] Sekarreporter 1: கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நியமிப்பதற்கான கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்து விசாரணை நடத்தி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது ..இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ் .எம். சுப்பிரமணியம், தகுதியற்ற கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் படிக்கும் மாணவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியிடங்களை நியமிப்பதற்கான கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் கல்லூரி நிறுவனங்களில் நிர்வாகிகள் ஆசிரியர் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த ஒரு அனுதாபமோ சமரசமோ காட்டக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். எனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரி பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கல்லூரி கல்வி இயக்குனரை விசாரணை நடத்துவதற்கு தகுதியான அதிகாரி என்பதனால், கல்லூரிகள் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா சரியானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும், ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 254 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களுடைய கல்வி தகுதி மற்றும் அசல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம்14ஆம் தேதி இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[10/13, 12:37] Sekarreporter 1: தானம் அளிப்பவரின் சகோதரர் புகார் தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லீரல் பாதிக்கப்பட்ட ஜஸ்பிர் சிங் என்பவருக்கு அவரது உறவினர் நரேஷ்குமார் சாகர், கல்லீரல் தானம் வழங்க முன் வந்தார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் தனியார் மருத்துவமனை (ரெலா மருத்துவமனை) உரிய ஆவணங்களை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

அதை பரிசீலித்த குழு, கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஒப்புதல் வழங்கிய நிலையில், மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறி, நரேஷ்குமார் சாகரின் சகோதரர், கடந்த செப்டம்பர் 29ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்த மருத்துவமனை நிர்வாகம், அந்த புகாரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஏற்கனவே குழு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்படி மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி உறுப்பு தானம் செய்யும் நரேஷ்குமார் சாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழு அளித்த ஒப்புதலை, மூன்றாம் நபர் அளித்த ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் ஒரு போதும் மறு ஆய்வு செய்யப்பட மாட்டாது எனவும், மருத்துவமனை அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, தானம் அளிப்பவரின் சகோதரர் அளித்த புகார் தடையாகவில்லை எனக் கூறி, மருத்துவ தகுதி அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[10/13, 15:10] Sekarreporter 1: உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை 2017 மார்ச்சிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி,
பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் நேரில் ஆஜரானார். அப்போது அரசுத்தரப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரனுக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பணம் எப்போது மனுதாரருக்கு வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர்.

இரு வாரங்களில் பணம் மனுதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மனுதாரரை மிரட்டுவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். இது தீவிரமானது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
[10/13, 17:19] Sekarreporter 1: இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீதான புகாரில் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான, திமுக எம்.பி.-யுமான ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு உள்ளது.

You may also like...