Madras high court news sekarreporter

 

[8/5, 07:43] Sekarreporter: [8/4, 20:01] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1422928204147269633?s=08
[8/5, 07:40] Sekarreporter: Full order THE HONOURABLE DR. JUSTICE ANITA SUMANTH W.P. No.2916 of 2016 Arulmighu Angala parameswari Aalaya Committee, Rep. by its Secretary, R.Vinayagam. —-or Petitioners : Mr.R.Jayaprakash For Respondents : Mr.NRR.Arun Natarajan Government Advocate temple fit person caseArulmighu Angala Parameswari Thirukovil, Kulakkarai, Vadapalani, Rep. by its Fit Person, Vadapalani, Chennai – 600 026. https://sekarreporter.com/full-order-the-honourable-dr-justice-anita-sumanth-w-p-no-2916-of-2016-arulmighu-angala-parameswari-aalaya-committee-rep-by-its-secretary-r-vinayagam-or-petitioners-mr-r-jayaprakash-for/
[8/5, 08:33] Sekarreporter: [8/5, 08:32] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423116798669606916?s=08
[8/5, 08:32] Sekarreporter: சென்னை வடபழனியில் உள்ள அங்காள பரமேஸ்வரி என்ற தனியார் கோயில் இந்து அறநிலைத்துறை எடுத்துக்கொண்டது செல்லாது அந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த வழக்கில் வரும் ஜெயப்பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். உண்டியல. இல.லை mismanagement ,வராது
[8/5, 08:51] Sekarreporter: https://youtu.be/6XuqFN9pa9g
[8/5, 13:00] Sekarreporter: Full order summon to IAS. Officer. Mhc advocate MRavi priya ravi —plaintiff Prof. Dr. A. Ramachandran, Ph.D., D.Sc.,I.F.S., (Retd.) (M,64) No.96/76, Greenways Extension Road, Raja Annamalaipuram, Chennai – 600 028. … Plaintiff damagae Rs.1 croe case filed by. Tentative amount of damage payable by the Defendant is Rs.1,00,00,000.00. https://sekarreporter.com/full-order-summon-to-ias-officer-mhc-advocate-mravi-priya-ravi-plaintiff-prof-dr-a-ramachandran-ph-d-d-sc-i-f-s-retd-m64-no-96-76-greenways-extension-road-raja-annamalaipuram/
[8/5, 14:13] Sekarreporter: Full order CORAM : THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN W.P.No.20389 of 2020 K.Mariammal … Petitioner —order dated 01.07.2021 passed by Hon’ble Mr. Justice S.Vaidyanathan in W.P.No.20389 of 2020. Petitioner herein (aged 73 years) is the wife of a deceased Freedom Fighter. She is receiving State Government Freedom Fighter’s Pension. She has sought for Central Government Freedom Fighter’s Pension. Writ Petition is allowed. https://sekarreporter.com/full-order-coram-the-honourable-mr-justice-s-vaidyanathan-w-p-no-20389-of-2020-k-mariammal-petitioner-order-dated-01-07-2021-passed-by-honble-mr-justice-s-vaidyanathan-in-w/
[8/5, 15:19] Sekarreporter: [8/5, 15:17] Sekarreporter: [8/5, 15:17] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423219057445130241?s=08
[8/5, 15:17] Sekarreporter: நடிகர் தனுஷ் 48 மணி நேரத்தில் பணம் கட்ட ஐகோர்ட் உத்தரவு
[8/5, 15:17] Sekarreporter: #Madras HC directs actor @dhanushkraja to pay the remaining entry tax of Rs 30.30 lakhs within 48 hours. The court also lays down certain guidelines to be followed in such cases. Says “courts are already overburdened with several cases” @xpresstn
[8/5, 15:47] Sekarreporter: [8/5, 15:46] Sekarreporter: [8/5, 15:45] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423226178542837761?s=08
[8/5, 15:45] Sekarreporter: தனுஸ் வழக்கு full order IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS Dated: 05.08.2021 CORAM: THE HON’BLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM WP No.33800 of 2015 Mr.K.Dhanush .. Petitioner Vs 1. The State of Tamilnadu, Rep. By its Secretary, https://sekarreporter.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-full-order-in-the-high-court-of-judicature-at-madras-dated-05-08-2021-coram-the-honble-mr-just/
[8/5, 15:46] Sekarreporter: For Petitioner : Mr.S.Vijayan

For Respondents : Mr.V.Veluchamy
Government Advocate
[8/5, 16:44] Sekarreporter: [8/5, 16:43] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423240582487445505?s=08
[8/5, 16:43] Sekarreporter: Unprecedented Suit for damages filed by I.F.S. Officer against I.A.S. Officers for Rupees One Crore and One Thousand as token damage. Plaintiff: D.Ramachandran IFS (V.Retd) Through Counsel M.Ravi & Priya Ravi Summons issued by High Court, Madras   IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS https://sekarreporter.com/unprecedented-suit-for-damages-filed-by-i-f-s-officer-against-i-a-s-officers-for-rupees-one-crore-and-one-thousand-as-token-damage-plaintiff-d-ramachandran-ifs-v-retd-through-counsel-m-rav/
[8/5, 18:01] Sekarreporter: Full order IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 05.07.2021 CORAM THE HONOURABLE MR.JUSTICE M.GOVINDARAJ ADVOCATE: M.Ravi & Priya Ravi, argued in a case relating to promotion to the post of Deputy Inspector General of Prison and the Order of Hon’ble Mr.Justice M.Govindaraj : The Petitioner to make a representation setting out all the grounds with substantiating materials as well as judicial precedents to the 1st respondent within a period of three weeks from the date of receipt of a copy of this order. On such representation, the respondents are directed to consider the same and after forming appropriate opinion as to the objects and reasons of the classifications particularly between the General Category and Women Category, pass a reasoned appropriate order within a period of eight weeks thereafter. https://sekarreporter.com/full-order-in-the-high-court-of-judicature-at-madras-dated-05-07-2021-coram-the-honourable-mr-justice-m-govindaraj-advocate-m-ravi-priya-ravi-argued-in-a-case-relating-to-promotion-to-the-post/
[8/5, 18:08] Sekarreporter: [8/5, 18:08] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423261967947423747?s=08
[8/5, 18:08] Sekarreporter: Full order CORAM : THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN W.P.No.20389 of 2020 K.Mariammal … Petitioner —order dated 01.07.2021 passed by Hon’ble Mr. Justice S.Vaidyanathan in W.P.No.20389 of 2020. Petitioner herein (aged 73 years) is the wife of a deceased Freedom Fighter. She is receiving State Government Freedom Fighter’s Pension. She has sought for Central Government Freedom Fighter’s Pension. Writ Petition is allowed. https://sekarreporter.com/full-order-coram-the-honourable-mr-justice-s-vaidyanathan-w-p-no-20389-of-2020-k-mariammal-petitioner-order-dated-01-07-2021-passed-by-honble-mr-justice-s-vaidyanathan-in-w/
[8/5, 20:33] Sekarreporter: W.P.Nos.3656 of 2021 etc.
W.P.Nos.3656, 3660, 3662 and 3663 of 2021
THE HON’BLE CHIEF JUSTICE
and
P.D.AUDIKESAVALU, J.
(Order of the Court was made by the Hon’ble Chief Justice)
A report has now been filed by the Principal Chief Conservator of
Forests and Chief Wildlife Warden, Chennai indicating the state of the
captive elephants in the State.
2. It is recorded that the Hindu Religious and Charitable
Endowments Department has also filed a previous report.
3. The petitioner seeks to point out several anomalies and makes
out a case that there is sufficient land owned by the Hindu Religious
and Charitable Endowments Department or by the temples under such
Department’s control for large pockets of natural habitats for elephants
to be developed, so that the captive elephants may be housed at such
places and taken to the temples only for the performance of rituals at
appropriate times.
__________
Page 1 of 5
https://www.mhc.tn.gov.in/judis/

 

 

 

[8/5, 11:06] Sekarreporter: Actor Dhanush Entry Tax case

Vijayan Subramanian lawyer for dhanush appeared and informed the court that Dhanush is ready to pay balance 50% tax on monday and requested the court to direct to Respondent to issue demand Notice.

Hon’ble Justice S.N Subramanian directed the Government advocate to produce the demand notice by 2.15 pm for passing orders
[8/5, 11:06] Sekarreporter: தனுஷ் வழக்கு நீதிபதி சுப்ரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது தனுஷ் சார்பாக வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி வரி முழுவதும் செலுத்திவிடுகிறோம் என்றார். இதை கேட்ட நீதிபதி வழக்கில. மதியம் தீர்ப்பு கூறுவதாக தெரிவித்தார்
[8/5, 11:24] Sekarreporter: சோப்பு வாங்கினால் கூட வரி விதிக்கப்படுகிறது. அதற்கு எந்த சாமனிய மனிதனும் வரிவிலக்கு கேட்டு வழக்கு போடுவதில்லை…ஹெலிகாப்டர் கூட வாங்கிகோங்க ஆன குறிபிட்ட காலத்திற்குள் வரியை கட்டுங்கள் வரிவிலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
[8/5, 11:26] Sekarreporter: இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்த்து.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் பால்காரர், சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என இ
அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக மதியம் தள்ளிவைத்துள்ளார்.
[8/5, 12:25] Sekarreporter: சென்னை வடபழனி குளக்கரை பகுதியில் இருக்கும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை, இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கோவிலின் ஆலய நிர்வாக கமிட்டிச் செயலாளர் வினாயகம் தாக்கல் செய்த மனுவில், ” தனியாருக்கு சொந்தமான, தானமாக வழங்கப்பட்ட இடத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இதன் நிர்வாகத்தை, தனி நபர்களே நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நடவடிக்கை எடுத்து வருகிறார். கோவில் நிர்வாகத்தை கவனிக்க, வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றதும், கோவிலில் உண்டியல் வைத்துள்ளார்.

கோவில் தங்கள் கட்டுபாட்டில் இருந்தவரை, உண்டியல் கிடையாது. கோவிலுக்கு என்று எந்த நிலமோ, சொத்துக்களோ கிடையாது. நிர்வாகத்திலும் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. இந்நிலையில், கோவில் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்க நடவடிக்கை எடுத்து வரும் அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர். ஜெயபிரகாஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வடபழனி குளக்கரை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை கையகபடுத்துவது தொடர்பாக, அறநிலையத்துறை ஆணையர் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

++++++++++++++++++
[8/5, 14:44] Sekarreporter: கோவில் யானைகளை, இயற்கையான, பசுமையான இடத்தில் பராமரிக்கலாம் எனவும், விழாக்காலங்களில் மட்டும் கோவிலுக்கு அழைத்து வராலாம் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா, எத்தனை யானைகள் உள்ளது என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுதும் 30 யானைகள் கோவில்களில் வளர்க்கப்படுவதாகவும், முறையான இடத்தில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறுக்கிட்டு, 30 மட்டும் என்பது தவறு என்றும், 34 யானைகள் கோயில்களில் வளர்க்கபடுவதாகவும், பாதிக்கு மேற்பட்ட யானைகளுக்கு பாகன்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அவற்றின் கால்கள் கட்டப்பட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக நிற்கவைக்கப்படுவதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் யானைக்காக பிரத்தியேக இடத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோர்க்கை வைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி, இன்று காலை குதிரை ஒன்று மெரினா சாலையின் குறுக்கே வந்துவிட்டதாகவும், உடனடியாக காரிலிருந்து இறங்கி உதவ வேண்டுமென மனம் பதைபதைத்தாக குறிப்பிட்டார்.

பின்னர் மதத்தின் பெயரால் 2000 சதுர அடி அளவிலான கான்கிரீட் தளத்தில் யானைகளை பராமரிப்பதற்கு பதிலாக, இயற்கையான வனப்பகுதியில் பராமரிக்கலாமே என நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோவில்களின் யானைகளை இயற்கையான பசுமையான இடத்தில் பராமரிக்கலாம் எனவும், விழாக்காலங்களில் மட்டும் கோவிலுக்கு அழைத்து வராலாம் எனவும் அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.
.

கான்கரீட் பகுதியில் யானை வளர்ப்பை தடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது எனவும், யானைகளின் நலன உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு அறிவுறுத்தினர். யானைகளின் அன்றாட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[8/5, 15:46] Sekarreporter: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான் நுழைவு வரி நிலுவைத்தொகை 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2018ல் தீர்ப்பளித்த்து.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என இ
அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக மதியம் தள்ளிவைத்தார்.

அதன்படி, வணிக வரித் துறை தரப்பில் தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது தனுஷ் தரப்பில், கொரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்திவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என குறிப்பிட்டார். பின்னர், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்ற உயர் நீதிமன்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[8/5, 16:45] Sekarreporter: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு
தலைமை நீதிபதி சஞ்சிவ்பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது .

அப்போது, கோவில் நிலத்திறகு இழப்பீடு நிர்ணயித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லையென மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதிப்பீடு செய்யப்பட்ட அறிக்கையை மனுதாருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்…

இதற்கிடையில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை  பெறாமல் கட்டுமான பணிகளை தொடர கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கட்டுமான பணிகளை  மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டனர்..
———————–
[8/5, 16:45] Sekarreporter: முன்னாள் அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டி வருவதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், அதனால் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் கூறி,
வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாதாக கூறப்பட்டு இருந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது என கூறினார் . இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை நடத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[8/5, 16:57] Sekarreporter: வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினியும், முருகனும் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டதாக சிறைத்துறை அளித்த விளக்கத்தை ஏற்று, நளினியின் தாயார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதிக்க கோரி நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாம் என தெரிவித்து, இருவரையும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறபித்தது.

அந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேலூர் சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த கடிதத்தில், உயர்நீதிமன்ற ஆணைப்படி, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன், இருவரையும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அனுமதிக்கப்பட்டதாக
தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நளினியின் தாயார் பத்மா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...