Madras high court news nov 15

[11/15, 13:36] Sekarreporter 1: தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிரான குற்றசாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு
அரசிடம் அனுமதி கேட்கபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், உதகமண்டலம், உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகளை கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
1 லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அசி கட்டிடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவ கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும்தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடம்) ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோருக்கு இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கடந்த 2021 ஆண்டு ஜூலை 7 தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்..

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது. எனவே அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. என்று கூறினார்.

அப்போது நீதிபதி, தமிழ்நாடு காவல்துறையில் இந்த புகார் குறித்து விசாரிப்பதாக கூறும்போது, சி.பி.ஐ. விசாரணை ஏன் கேட்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20 தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
[11/15, 14:47] Sekarreporter 1: மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம் என பள்ளிக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (நவம்பர் 21) ஒத்திவைத்தார்.
[11/15, 15:23] Sekarreporter 1: வழக்கறிஞரை தாக்கியது தொடர்பான வழக்கில் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம், மாறன்குளத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜரத்தினம் தாக்கல் செய்திருந்த மனுவில், மனித உரிமை தொடர்பான வழக்குகள், கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியவர்களுக்காக வழக்குகள் என்று பல வழக்குகளை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 3ம்தேதி நடு இரவில் வீட்டுக்கு வந்த போலீசார், தன்னை அடித்து இழுத்து சென்றதாகவும் போலீஸ் நிலையங்களில் வைத்து நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியதாக தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சப்இன்ஸ்பெக்டர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆனால், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், பணக்குடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
வழக்கை நிலுவையில் இருக்கும்போதே ராஜரத்தினம் இறந்து விட்டதால் வழக்கை அவரது மனைவி சரோஜா நடத்தி வந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணிம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்து விட்டதாக கூறினார்.

மனுதாரர் தரப்பில் கைது நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறும் போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,வழக்கு தொடரப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், போலீசாரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை, எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல், வழக்கறிஞரை பிடித்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, உச்ச நீதிமன்ற வழங்கியுள்ள அதிகாரத்தின்படி. டி.ஜி.பி., நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும், இந்த வழக்கிற்கு நேரில் ஆஜராகி பதில் அளிக்க டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவதாக கூறி வழக்கை அடுத்த மாதம் 15 ம்தேதி ஒத்திவைத்துள்ளார்.
[11/15, 15:59] Sekarreporter 1: பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடலாசிரியர் சினேகன் “சினேகம்” என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். சினேகம் அறக்கட்டளைக்கு எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்க களங்கம் ஏற்படுத்தியாக கூறி சினேகன் மீது ஜெயலட்சுமி புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.
[11/15, 17:46] Sekarreporter 1: உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு விளக்கத்தை ஏற்று, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், பட்டியலினத்தைச் சேர்ந்த வேல்முருகன் பழங்குடியினர் சான்றிதழ் கோரி செப்டம்பர் 20ம் தேதி அளித்த விண்ணப்பத்தில் செப்டம்பர் 23ம் தேதி கள ஆய்வு செய்து, செப்டம்பர் 26ம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்திற்குள் தற்கொலை சம்பவம் நடந்ததால் தனது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்பதால், தாமாக முன்வந்து வழக்கை எடுத்ததாக தெரிவித்தனர்.
வேல்முருகனும், அவரது தந்தையும் பட்டியல் இன குறவர் என்பதால், அவரது மகனுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
[11/15, 20:57] Sekarreporter 1: ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து
அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஏ.டில்லிபாபு என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதாக தெரிவித்திருந்தார். ஆனால், கோவில் இணைய தளம் வாயிலாக பக்தர்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி பிரிவு இணை ஆணையர் கவிதா நன்கொடை வசூல் செய்து வைத்துக்கொண்டு, அரசு நிதியிலும் முறைகேடு செய்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்படி, இணை ஆணையர் கவிதா உள்ளிட்டோர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில இணை ஆணையர் கவிதா வழக்கு தொடர்ந்திருந்தார் . வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன், புகாரை சரியாக ஆய்வு செய்யாமல், போலீசாரை வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அரசு பணி செய்யும் அதிகாரிகள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்த டில்லிபாபு, கோவிலுக்கு சொந்தமான கடையில் உள்வாடகையில் இருந்துள்ளார். அவரை கடையில் இருந்து வெளியேற்றியதால், உள்நோக்கத்துடன் இந்து புகாரை கொடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர்கள் தங்களது பணியை எந்த ஒரு பயமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, சிவகாஞ்சி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவில் புதுப்பிக்க பக்தர்களிடம் நன்கொடை வசூலித்ததாக குற்றம்சாட்டு குறித்து,உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்தால், அதன்படி. செயலாளரும், ஆணையரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று
நீதிபதி கூறியுள்ளார்.
[11/16, 06:44] Sekarreporter 1: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோவிலில்
வெள்ளி தகடு திருட்டு வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள அனுமன் கோவிலில் 20 ஆண்டுகளாக பூசாரியாக உள்ள முரளிதர தேசிகர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை என்றும், பூஜைகளின்போது தட்சனையாக அளிக்கப்படும் தட்டுக்காசு மூலமே வாழ்க்கை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சாமி மீது சாத்தப்படும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளித்தகடுகள் திருடப்பட்டுள்ளதாக சென்னை கே.கே.நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து அறநிலையத்துறை அதிகாரிகளான கோவில் செயல் அதிகாரி சுரேஷ், இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர்கள் ஞானசேகரன், மாரியப்பன், கணக்காளர் ராஜா, அரவிந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் தன் பெயர் இல்லாத நிலையில், கோவில் பொறுப்பாளரான சீனிவாச ரெங்கபட்டருடன் சேர்த்து, தன்னையும் விசாரணைக்கு அழைத்து சென்று, கைது செய்து சிறையில் அடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி தகடு திருடப்பட்ட நாளில் அந்த கோவிலில் இல்லை என்றும், வேறு ஒரு கோவிலில் பூஜை செய்ய சென்று இருந்ததாகவும், அதைகூட விசாரிக்காமல், கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனிவாச ரெங்கபட்டரிடம் கோவிலின் சாவி உள்ள நிலையில், வெள்ளி தகட்டை யார் எடுத்தது என தன்னை காவல்துறை மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

You may also like...