Madras high court march 22 orders

[3/21, 11:43] Sekarreporter: மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 – 21ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதனால் மாற்று திறனாளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[3/21, 12:59] Sekarreporter: சென்னை: ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கைவிரித்துள்ளார். மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.
[3/21, 13:00] Sekarreporter: ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – ஓபிஎஸ்
[3/21, 13:04] Sekarreporter: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன்; அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன்

* 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றுவந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம்
[3/21, 13:08] Sekarreporter: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? எதன் அடிப்படையில் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது

* பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைப்பு – ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ் பதில்
[3/21, 15:11] Sekarreporter: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள முருகனை பரோலில் விடுவிக்ககோரிய மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

முருகனின் மனைவி நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால், மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நளினி தனது கணவரை பரோலில் விடுவிக்க மனு அளித்தும் சிறைத் துறைக்கு எந்த நடவடிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மருமகனுக்கு உடல்நலக்குறைவுடன் உள்ளதாகவும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதால், 30 நாட்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே ராஜிவ் கொலை வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ளதால், இந்த மனுவை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதி பிரகாஷ், மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு பதிந்துரைத்து உத்தரவிட்டார்.
[3/21, 15:22] Sekarreporter: பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதபடுத்திய வழக்கில் கைது செய்யபட்ட டாக்டர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் சுப்பையா சென்னை அரும்பாக்கத்தில் அருகில் உள்ள வீட்டில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அரும்பாக்கம் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது சட்ட பிரிவுகள் சேர்க்கபட்டு வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் கடந்த 19ம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளபட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய என்ன காரணம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்? மேலும் மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[3/21, 16:26] Sekarreporter: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 36 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

முதல் சோதனையில் சிறு வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தற்போது அபராதம் விதிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக கூறினாலும், அவை தொடர்ந்து கிடைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
[3/21, 16:46] Sekarreporter: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2012 ஏப்ரல், மே மாதத்தில் பாலியல் தொல்லை அளித்தாதாக சிவசங்கர் பாபா, ஆசிரியை தீபா, பக்த்தை கருணாம்பிகை, பாரதி, நீரஜ் ஆகியோர் மீது மூன்றாவது வழக்கு பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சிவசங்கர் பாபா, தீபா உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் 2021 ஆம் ஆண்டு புகாரை பெற்று அதற்காக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், இது தவறு என வாதிட்டார். புகாரில் அளித்த பெண்ணுடன் குற்றம்சாட்டிற்கு உள்ளானவர்களின் தொடர்பு இல்லாத நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாதிட்டார்.எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து மனு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளலாம், ஆனால் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிவசங்கர் பாபாவிற்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோரி வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

You may also like...