Madras high court july 25th round upn

[7/25, 10:46] Sekarreporter1: சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், டில்லியில் அரசு அலுவலகங்களில் அவரது படத்தை பொருத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளுவர், தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்க அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அவரது புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அம்பேத்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு உள்ளதால் மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக எச்சரித்தது.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[7/25, 11:23] Sekarreporter1: மொட்டை மாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் எம்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை விடுத்து அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டைமாடி பாரில் நடந்த விருந்தின் போது ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற மொட்டை மாடி பார்களில் மதுபானங்கள் தவிர போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், ஹூக்காக்கள் உபயோகிக்கப்படுவதாகவும், அதன் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[7/25, 14:57] Sekarreporter1: ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவிடப்பட்ட வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், தமிழகத்தில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, பணியை துவங்கினால் மட்டும் போதாது எனவும், அனைத்து ஆர்டர்லிகளையும் ஒரே உத்தரவில் திரும்பப் பெற வேண்டும் எனவும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 1979ம் ஆண்டே ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டும், அது இன்னும் தொடர்கிறது எனவும், அதை உடனடியாக ஒழிக்க வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

திருநெல்வேலியில் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 39 ஆர்டர்லிகள் உள்ளதாக தகவல் வந்துள்ளதாக அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, உங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை பராமரிக்க பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா? உங்கள் நாயை நீங்கள் பராமரிக்க வேண்டியது தானே? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், காவல் துறை அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அது பேராபத்தாகி விடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து அரசுத் தரப்பில், தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறையினர், காவல்துறை என்றோ, அதற்கான சின்னத்தையோ ஒட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உயரதிகாரிகள் விதி முறைகளை கடைபிடிப்பது அரசு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற பணியாளர் தனது வாகனத்தில் உயர் நீதிமன்றம் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக போலீஸ்காரர் ஒருவர் தனக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்ட நீதிபதி, அதை தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். முதலில் நம்மை திருத்தியாக வேண்டும் எனவும் கூறினார்.

பணியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிகளை விட ஓய்வு பெற்றவர்கள் அதிக சலுகைகளை வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது என சுட்டிக்காட்டிய நீதிபதி, பல மாநிலங்களில் ஆர்டர்லி முறை ஒழிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆர்டர்லி முறை இன்னும் தொடர்கிறது. இது உயரதிகாரிகளின் ஆங்கிலேயே காலனிய மனநிலையை காட்டுகிறது என்றார்.

காவல்துறை உயரதிகாரிகள் ஆர்டர் முறையை இன்னும் பின்பற்றினால் அது அரசு உத்தரவை மதிக்காதது போன்றது எனத் தெரிவித்த நீதிபதி, 1979ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருப்பதை ஏற்க முடியாது என்பதால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

உயரதிகாரிகள் தங்களது ஆர்டர்லிகளை தாமாக முன்வந்து விட்டுகொடுக்க வேண்டும் எனவும், உயரதிகாரிகள் ஆர்டர்லி வைத்திருப்பதாக புகார் அல்லது தகவல் அவர்கள் மீது நன்னடத்தை விதியின் கீழ் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[7/25, 16:05] Sekarreporter1: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி-யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்குக்கான மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி. செல்வராஜ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான மூன்று வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஒரு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், மற்றொரு வழக்கை சிவ காஞ்சி காவல் நிலைய விசாரணைக்கு மாற்றியும், மேலும் ஒரு வழக்கில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை இரு நீதிபதிகள் கண்காணித்து வருவதால், அதனுடன் தொடர்புடைய வழக்குகளில் தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்படுவதாலும், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளாலும் குழப்பம் ஏற்படுவதால், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இதே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமெனவும், அதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள் அந்த கூடுதல் மனுவை வெள்ளிக்கிழமை (ஜூலை 29) அன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
[7/25, 17:09] Sekarreporter1: திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி அனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊடகங்களில் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ். சமுதாயத்தினர் அளித்த சொற்களஞ்சியத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்குவது தொடர்பாக சொற் பிறப்பியல் மற்றும் அகராதி துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும், அதற்காக நான்கு வார கால அவகாசம் வழ்ங்க வேண்டும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல பள்ளிக் குழந்தைகளுக்கு இப்பிரிவினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி வழ்ங்கப்பட்டு, அதன் விவரங்கள் அடுத்த விசாரணையின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொற்களஞ்சியத்தை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகள் இறுதி செய்ய நான்கு வார காலம் அவகாசம் வழங்கி, விசாரணையை ஆகஸ்ட் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தொழில்ரீதியிலான தவறான நடத்தை என அறிவிக்கை வெளியிடுவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஊடகங்கள் பயன்படுத்த சொற்களஞ்சியத்தில் அரசுத்தரப்பில், இரு பாலீர்ப்பு, ஒரு பாலீர்ப்பு, விரும்பப்படுபவன், விரும்பப்படுபவள் உள்ளிட்ட சொற்றொடர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வார்த்தைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ். சமுதாயத்தினர், தங்களை திருநர், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன் உள்ளிட்ட பெயர்களை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

சமுதாயத்தினர் பரிந்துரைத்த பெயர்களை தற்போதைக்கு பயன்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[7/25, 17:31] Sekarreporter1: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…..

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள், கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என தந்தை வழக்கு….

மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை, மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனவும் மனுவில் புகார்….

வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை – நீதிபதி சதீஷ்குமார் அதிருப்தி…..

போக்சோ சட்ட விதிகளை பின்பற்ற அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி-க்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்…

வழக்கு முடித்து வைத்துவைப்பு….
[7/25, 17:57] Sekarreporter1: திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி அனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊடகங்களில் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ். சமுதாயத்தினர் அளித்த சொற்களஞ்சியத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்குவது தொடர்பாக சொற் பிறப்பியல் மற்றும் அகராதி துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும், அதற்காக நான்கு வார கால அவகாசம் வழ்ங்க வேண்டும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல பள்ளிக் குழந்தைகளுக்கு இப்பிரிவினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி வழ்ங்கப்பட்டு, அதன் விவரங்கள் அடுத்த விசாரணையின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொற்களஞ்சியத்தை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகள் இறுதி செய்ய நான்கு வார காலம் அவகாசம் வழங்கி, விசாரணையை ஆகஸ்ட் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தொழில்ரீதியிலான தவறான நடத்தை என அறிவிக்கை வெளியிடுவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஊடகங்கள் பயன்படுத்த சொற்களஞ்சியத்தில் அரசுத்தரப்பில், இரு பாலீர்ப்பு, ஒரு பாலீர்ப்பு, விரும்பப்படுபவன், விரும்பப்படுபவள் உள்ளிட்ட சொற்றொடர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வார்த்தைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ். சமுதாயத்தினர், தங்களை திருநர், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன் உள்ளிட்ட பெயர்களை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

சமுதாயத்தினர் பரிந்துரைத்த பெயர்களை தற்போதைக்கு பயன்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[7/25, 20:03] Sekarreporter1: தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும் எனவும் இதற்காக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணிக்கான நிதியை ‘ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்’ மற்றும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி’ ஆகியோரிடம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இதற்காக பத்து ஆண்டுகள் காத்திருக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் பணிகள் விரைந்து முடியும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும், அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள தமிழக அரசே, யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இனி தமிழகத்தில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
….
[7/25, 20:04] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 70 பேரின் முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் ஈபி.எஸ் ஆதரவாளர்கள் 200பேர் மீதும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீது என மொத்தம் 400 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[7/25, 20:04] Sekarreporter1: அதிமுக இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன….

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தகவல்

பொது அமைதிக்கு பாதிப்பு. பள்ளிகள், கடைகள் மூடல். பொதுமக்கள் பாதிப்பு. இரு தரப்பிற்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது – அரசு

விசாரணை ஆரம்ப கட்டம். மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி – முதன்மை நீதிபதி அல்லி

ராயப்பேட்டை காவல் நிலைய வழக்கில் ஈ.பி.எஸ். தரப்பின் மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேர் மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு 27 பேர் என 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

[7/25, 20:05] Sekarreporter1: அதிமுக இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன….

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தகவல்

பொது அமைதிக்கு பாதிப்பு. பள்ளிகள், கடைகள் மூடல். பொதுமக்கள் பாதிப்பு. இரு தரப்பிற்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது – அரசு

விசாரணை ஆரம்ப கட்டம். மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி – முதன்மை நீதிபதி அல்லி

  • ராயப்பேட்டை காவல் நிலைய வழக்கில் ஈ.பி.எஸ். தரப்பின் மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேர் மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு 27 பேர் என 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

You may also like...