Madras high court december 7 th ordersnews

[12/7, 10:39] Sekarreporter 1: அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக விசாரிக்க சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவு க்கு முழு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது
அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ராமு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை நீதிபதி மகாதேவன் விசாரித்தார் அமலாக்கப்பிரிவு சார்பாக வக்கீல் என் ரமேஷ் ஆஜராகி வாதாடினார் அவர் வாதாடும் போது அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்ப சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதன்பிறகு அவர் வீடு சோதனை நடத்தப்பட்டது சம்மன் .இதில் அடிப்படை உரிமையை எந்த வகையிலும் மீறாது வழக்கறிஞர்கள் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார் இதை நீதிபதி மகாதேவன் ஏற்றுக்கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார் நீதிபதி தீர்ப்பில் சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவு க்கு சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது மேலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அமலாக்கப்பிரிவு அனுப்பு அனுப்பும் சம்மன் சிவில் விசாரணைதான் எனவே மனுதாரர் நேரடியாக ஆஜராக வேண்டும் சம்மனுக்கு ஆஜராகாமல் இருக்க கூடாது விசாரணையின் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்புக் கூறினர்
[12/7, 12:05] Sekarreporter 1: அதிமுக தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், இத்தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிட வில்லை என்றும் கூறியுள்ளார்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாவதாக கூறி, இந்த வழக்கை கடைசி வழக்காக அவசரமாக விசாரிக்க வேண்டும் என ஜெயச்சந்திரன் தரப்பில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு என்றும், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி ஆர்.பிரசாத், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும், ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் எனவும், வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை என்றும் தெரிவித்தார். அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும் போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என பிசிசி ஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரசாத் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முந்தைய நாள், போட்டியின்றி இருவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர் . அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட அனுமதி என திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, உட்கட்சி தேர்தல் தொடர்பான வழ்க்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை இணைத்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[12/7, 12:41] Sekarreporter 1: கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும்,  அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான டாக்டர் எழிலன், 
தாக்கல் செய்த மனுவில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்றும், இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு  மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  1976 ம் ஆண்டு மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் கல்வி முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளின் அனுமதியின்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது, இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்..
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் , வழக்கு விசாரணை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
[12/7, 13:01] Sekarreporter 1: எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி:
மத்திய மந்திரியின் உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை கோர்ட்டு உத்தரவு
சென்னை, டிச.8-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஸ்குமார் (வயது 29). பா.ஜ.க. பிரமுகர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இவரது உறவினர் வசந்தி என்பவருக்கு ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. சார்பில் சீட் வாங்கி தருவதாக கூறி தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் ரூ.50 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்த படி சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நரோத்தமன் மீதும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை டி.வி.பிரசாத் மீதும் சென்னை பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முதன்மை குற்றவியல் அரசு வக்கீல் தேவராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
[12/7, 13:32] Sekarreporter 1: பல் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வில் இடம் ஒதுக்கியும், சேர்க்கை மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும், தேர்வு குழுவுக்கும், தனியார் கல்லூரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ம் ஆண்டு பிளஸ் டு தேர்வில் தேர்ச்சி பெற்று பல்மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்த ஜெயரஞ்சனி, பல் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டார்.

அவருக்கு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.பல்மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கி கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் 30 ம்தேதி மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அன்றே கல்லூரிக்கு சென்று சேரமுடியாததால் மறுநாள் கல்லூரிக்கு சென்றபோது மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 30 ம் தேதியே முடிந்துவிட்டதாக கூறி அவருக்கு சேர்க்கை வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதை எதிர்த்து மாணவி ஜெயரஞ்சனி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முன் கூட்டியே கலந்தாய்வு நடத்தாத தேர்வு குழுவின் தவறு தான் மாணவிக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், இடம் ஒதுக்கியது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு தெரிவிக்கப்பட்டும், நிர்வாக ஒதுக்கீட்டில் வேறு மாணவரை சேர்த்த தனியார் கல்லூரியும் ஒரு காரணம் என சுட்டிக்காட்டினார்.

இதனால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, தமிழக சுகாதராத்துறை மற்றும் தேர்வு குழுவும் இணைந்து 3 லட்சம் ரூபாயும், சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி இரண்டும் லட்சமும் என மொத்தம் 5 லட்சம் ரூபாயை இழப்பீட்டு தொகையாக நான்கு வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.
 
[12/7, 13:48] Sekarreporter 1: லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில, மாவட்ட அளவில் ஊழலை தடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில், ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகள் நடத்தி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைப்பது குறித்து அரசு நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[12/7, 14:11] Sekarreporter 1: மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்கும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த இரு பெண்கள்,  நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 
மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி உரிய விதிகளை கொண்டுவர டிஜிபி, அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 23 ம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
[12/7, 14:47] Sekarreporter 1: டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை, எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி , வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளதாக என்று தெரிவித்துள்ளனர். எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என்றும் இந்த அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
[12/7, 16:13] Sekarreporter 1: அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் தொடர்ந்த மனுவில், பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017-18ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டதாகவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்கி வரும் 12ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிபிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கல்லூரிக்கான விரிவுரையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் மொழிப்பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விதிமுறை உள்ளதாகவும், அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாடு அரசு பானியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சிப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியிடங்களில் 100% சதவீதம் தமிழர்களையே நியமிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளதை சுட்டிக்காட்டி, நாளை தொடங்கவுள்ள தமிழ் தெரியாத வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பதால், கடந்து 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது மனு குறித்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/7, 17:14] Sekarreporter 1: சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளதாக தமிழக கால்நடைத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.

சென்னை ஐ ஐ டி வளாகத்தில் உள்ள நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்க கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு

கடந்த மாதம் இரு முறை ஐஐடி வளாகத்தில் அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு நடத்தியதில், நாய்கள் முறையாக, ஆரோக்கியமான முறையில் பராமரிக்கப்படவில்லை – தமிழக அரசு

நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ததில் நாய்கள் உரிய வகையில் பராமரிக்கப்படுவதாகவும், எந்த விதிமீறலும் இல்லை – ஐஐடி & விலங்குகள் நல வாரியம்

தெரு நாய்களை முறையாக பராமரிக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசும் நாம், அடிப்படை கடமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் – பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு
[12/7, 17:24] Sekarreporter 1: தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதன் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், 18 மாதங்களே ஆன தனது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டு, தனக்கு எதிரான சட்ட போராட்டங்களை நடத்திவரும் தன் மனைவி உடல் நலக்குறைவால் சிரமப்படுவதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் சில உடல்நலக்குறைவு இருப்பதால் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்த்வர்கள் அறிவுறித்தி உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால்தான் மதனை குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும், இதுபோன்ற காரணங்களுக்காக அவசரமாக விசாரிக்கக் கூடாது எனவும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற பப்ஜி மதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[12/7, 18:21] Sekarreporter 1: இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 9 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு எஸ்.எஸ்.ஐ. என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை ஏதும் வழங்கவில்லை எனவும்,
படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை டிசம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
[12/7, 18:21] Sekarreporter 1: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்வதால், அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி, அந்த ஓடைக்கு அருகில் நிலம் வைத்துள்ள கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோர் சார்பில் பொது அதிகாரம் படைத்த நபரான கோகுல கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க, தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான இடத்தை மயானத்திற்காக மடூர் கிராமத்தில் உரிய இடத்தை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் இந்த பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கத்தொகை மூலம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.

மத சாதி சகிப்புத்தன்மை, பரஸ்பரம் மரியாதை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.

You may also like...