Madras high court december 1

 

[11/30, 10:58] Sekarreporter 1: ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்து வழக்கில் தற்போது எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர்..

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனால் பல சிக்கல்களையும் ரவுடி பேபி சூர்யா சந்தித்தார்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.
பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது .காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும்,தனது கோரிக்கையை அறிவுரைக்கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார் .
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி என் பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இந்த வழக்கை சீராய்ந்து பார்க்கும்போது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும்,அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக் டாக் காட்சிகளை காண்பித்தார்.ஒரு சில காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் ,வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
[11/30, 13:24] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தலாம் – ஐகோர்ட்

சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

இ.சி.ஆர். பள்ளி மற்றும் சக்தி பள்ளி ஆகியவற்றை டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் – நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்

ஒரு மாதத்திற்கு மீண்டும் நீதிமன்றம் அப்போதைய நிலையை ஆராயும் – நீதிபதி

பொது தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உத்தரவு – நீதிபதி

பள்ளி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை. ஆனாலும் மழலைகள் மற்றும் மாணவர்களின் நலனை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது – நீதிபதி

ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம். தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த சி மற்றும் டி பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது – நீதிமன்றம்

ஏ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3வது மாடியை பயன்படுத்தக் கூடாது – நீதிமன்றம்

எல்.கே.ஜி. முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் – நீதிமன்றம்

விடுதி உள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். அனுமதி அளிப்பது குறித்த உரிய முடிவெடுக்க வேண்டும் – நீதிமன்றம்

வழக்கின் விசாரணையை பெருமளவு முடிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைப்தஅக்கல் செய்ய 3 மாதம் தேவைப்படும். பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை. பள்ளியை முழுமையாக திறப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம் – சிபிசிஐடி

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும். 15 நாட்களில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை 3500லிருந்து 1500 ஆக குறைந்துள்ளது – லதா கல்வி அறக்கட்டளை

மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் சேதமடைந்த பள்ளி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதால் பள்ளியை திறக்க அனுமதிக்க கோரிய லதா கல்வி அறக்கட்டளை வழக்கு

அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது என மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு

பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி எம்.எம்.ரவி என்பவர் இடையீட்டு மனு

கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து பள்ளியுடன் ஆலோசித்து, அதற்கான தொகையை பெற்று காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம் – நீதிமன்றம்

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை வளாக பாதுகாப்பில் ஈடுபடுத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கலாம் – நீதிமன்றம்

வழக்கின் ஜனவரி 2 தள்ளிவைப்பு
[11/30, 14:39] Sekarreporter 1: [11/30, 14:36] Sekarreporter 1: S P Velumani case

Judges P N பிரகாஷ், R M T டீக்காராமன்

(1) டெண்டர் ஒதுக்கீடு குற்றச்சாட்டில் வேலுமணி மீதான வழக்கு மட்டும் ரத்து

(2) சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய வேலுமணி மனு தள்ளுபடி
[11/30, 14:36] Sekarreporter 1: .
[11/30, 15:09] Sekarreporter 1: S P Velumani case

Judges P N பிரகாஷ், R M T டீக்காராமன்

(1) டெண்டர் ஒதுக்கீடு குற்றச்சாட்டில் வேலுமணி மீதான வழக்கு மட்டும் ரத்து

(2) சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய வேலுமணி மனு தள்ளுபடி
[11/30, 15:35] Sekarreporter 1: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுனர்கள் தானாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் எஸ்.வி.ராமமூர்த்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[11/30, 15:42] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதே சமயம் அவருக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/30, 16:20] Sekarreporter 1: *இடம் – சென்னை, உயர்நீதிமன்றம்*

*”தமிழ்நாட்டில் யாரும் நடுநிலை இல்லை என்பது தான் அதிமுகவின் முதல் வாதமே. இதனால் இன்பதுரை அறப்போர் இயக்கம் திமுகவின் பி- டீம் என கூறுவது அப்பட்டமான பொய் – அறப்போர் வழக்கறிஞர் சுரேஷ்”*…

*”தீர்ப்பின் நகல் வந்த பிறகு தான் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்”*…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இரண்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதை தொடர்ந்து அறப்போர் இயக்க வழக்கறிஞர் சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர்….

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ் பி வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று கூறிய அவர் தீர்ப்பை படித்த பிறகு தான் எந்த காரணத்திற்காக வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறினார்..

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் அதிகமாக இருந்தது மக்களுக்கு தெரியும் என்றும் தமிழ்நாட்டில் யாரும் நடுநிலை இல்லை என்பது தான் அதிமுகவின் முதல் வாதமே. இதனால் இன்பதுரை அறப்போர் இயக்கம் திமுகவின் பி- டீம் என கூறுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்தார்…

அதனைத் தொடர்ந்து பேசிய அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன்….

டெண்டர் முறைகேடு வழக்கை பொறுத்தவரை A1 ஆக இருக்கின்ற வேலுமணியை மட்டுமே விடுவித்து உள்ளதாகவும், தீர்ப்பின் நகல் வந்த பிறகு தான் என்ன காரணத்திற்காக எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டது என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்…
[11/30, 16:47] Sekarreporter 1: மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் நயன்தாரா நடிப்பில் உருவான கோல்ட் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

வி ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தாக்கல் செய்துள்ள தாக்கல் செய்துள்ள வழக்கில், நடிகர் சிம்பு நடப்பில் உருவான மாநாடு திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட எஸ்.எஸ்.ஐ. படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொகையில் 27 லட்ச ரூபாயையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தர வேண்டிய நிலையில், பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோல்ட் என்ற மலையாள படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் கோல்ட் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அப்போது எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நிலுவையில் உள்ள தொகையை 90 நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கை முடிந்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
[11/30, 17:53] Sekarreporter 1: சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த உத்தரவு பகுதி…..

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காரமன் பிறப்பித்த தீர்ப்பு விவரம்….

2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து கணக்குகளின் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சொத்துக்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் வழகுப்பதிவு செய்ய முடியும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது என்பதால், இந்த வழக்கில் தலையிட எவ்வித காரணமும் இல்லை என கூறி வேலுமணி வழ்க்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

காவல்துறையினரை அரசியல் மற்றும் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்கிற உசா நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விரும்பாததால், அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யப்படக்கூடிய வழக்குகளில் நீதிமன்றங்கள், காவல் நிலைய உயர் அதிகாரிகள் போல செய்ல்பட வேண்டி உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
[11/30, 17:54] Sekarreporter 1: டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக வேலுமணி மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவு….

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காரமன் பிறப்பித்த தீர்ப்பு விவரம்….

லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. பொன்னி தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் முந்தைய அரசு இந்த வழக்கை கைவிடுவது என முடிவெடுத்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் அந்த அரசின் முடிவை ரத்து செய்யும் அதிகாரம் இருந்தபோதிலும், அந்த முடிவை ரத்து செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் புகார்களை பார்க்கும்போது டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாக தெரிவதாகவும், ஆனால் அமைச்சர் என்ற முறையில் டெண்டரை பரிசீலித்து முடிவெடுத்தார் என்பது அவர்களது புகாரோ, வழக்கோ இல்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த புகார்களிலும் மாநகராட்சி தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் தான் டெண்டர் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சகோதரர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டர் ஒதுக்கப்பட்டதாக கூறுவதால் மட்டும், அமைச்சர் வேலுமணியை வழக்கில் சேர்க்க முடியுமா என்ற கேள்வி எழுவதாக கூறியுள்ள நீதிபதிகள், அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல்வாதிகள் என்கிற பொதுகருத்து நிலவுவதாகவும், அதனடிப்படையில் ஒரு பொது கருத்தின் அடிப்படையில் அரசியல்வாதிக்கு எதிராகவோ அல்லது சாதாரண குடிமகனுக்கு எதிராகவோ வழக்கு தொடர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளை தவிர்த்துவிட முடியாது என்றும், ஆனால் அதிகாரத்தில் உள்ள அரசியல்கட்சிகள் எதிர்க்கட்சிகளை வேட்டையாட அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆட்சியில் எஸ்.பி. பொன்னி அளித்த அறிக்கை வழக்கில் முகாந்திரம் இல்லை என தெரிவித்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கங்காதர் அளித்த அறிக்கையில் வேலுமணியையும் சேர்த்து அறிக்கை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கிறார்கள் என்பது இந்த வழக்கில் தெளிவாவதாகவும், அதனால் வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு விசாரித்த கங்காதர நேரடியாக வழக்குப்பதிவு செய்யாமல், வேலுமணியை வழக்கில் சேர்க்கும் வகையில் ஆரன்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்து, அதனடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்தது என ஏன் இந்த அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேலுமணிக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முறையாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி இருந்தால், இந்த வழக்குப் பதிவை நியாயப்படுத்தி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆனால் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது என்றும், அதிலும் இந்த ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளை கண்டறியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில் டெண்டர் ஒதுக்கீடு முறை தெளிவாக விளக்கப்பட்டு உள்ளதாகவும், அதனடிப்படையில் டெண்டர் ஒதுக்கீடு, பரிசீலனை என எதிலும் வேலுமணிக்கு எந்த பங்கும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேசமயம் முதல் தகவல் அறிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் விசாரிக்க உரிய முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கூறவில்லை என்றும், வேலுமணிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னணி தலைவருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் ஆளும்கட்சி வழக்குப்பதிவு செய்வது எளிதானது என்றாலும், குற்ற சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் தவறால் முறைகேடு நடக்கவில்லை என்றும், மாறாக வேலுமணி தலையீட்டால் தான் முறைகேடு நடந்துள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை நிரூபித்திருந்தால், வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுக்க எந்த தயக்கமும் இல்லை

மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்திருக்காமல், நேரடியாக ஏன் வழக்குப் பதிவு செய்திருக்கக் கூடாது எனவும் உத்தரவில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வழக்கில் சமந்தபட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு முன்பே அரசிடம் அனுமதி பெற வேண்டுமெனவும், அவ்வாறு விசாரணை நடத்தும்போது வேலுமணி செல்வாக்கை செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது வழக்கு அதிவு செய்திருக்கலாம் என்றும், ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்குப் பதிவு செய்தது காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை காட்டுகிறது என குறிப்பிட்டு, டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.

அதேசமயம் வழக்கின் புலன்விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடரலாம் என்றும், அதில் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கபட்டால், குற்றப்பத்திரிகையில் அவரை சேர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
[11/30, 20:30] Sekarreporter 1: 6 மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை போரூர் லட்சுமிநகரில் நடந்த பொருட்காட்சியில் தங்கியிருந்த தம்பதியின் 6 மாத பச்சிளம் குழந்தையிடம், ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்ய்ப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஐஸ் கடைக்காரர் பாரதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
[11/30, 21:52] Sekarreporter 1: குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம், அவர்களின் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மதுபோதைக்கு அடிமையானதுடன், செலவுக்கு பணம் தர மறுத்த மனைவி லட்சுமியை 2018 ஜூலையில் மனைப்பலகை கட்டை, மதுபாட்டில், தண்ணீர் பம்பின் கைப்பிடி ஆகிவற்றால் தாக்கியதில், படுகாயம் அடைந்த லட்சுமி மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலைய வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.ஆரதி ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவிந்தராஜுக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவரது உத்தரவில், மனைவி மரணத்திற்கு மகள் மற்றும் மகனை கோவிந்தராஜ் பராமரித்து வந்த நிலையில், தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் உள்ள இரு குழந்தைகள் படித்து வருவதாகவும், இன்னும் நீண்டகாலம் அந்த குழந்தைகள் பயணிக்க வேண்டியது உள்ளது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கு பொருளாதார ரீதியான உதவி தேவைப்படுவதாலும், குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாலும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி குழந்தைகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத் தர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

You may also like...