Madras high court decem 2 order sasikala case

 

[12/1, 14:54] Sekarreporter 1: தேர்தல் வேட்புமனுவில் கல்வித்தகுதி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாக, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனாம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ், கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 12ஆம் வகுப்பு படித்துள்ளதாக பொய்யான தகவல் தெரிவித்துள்ளதாக கூறி, அவருக்கு எதிராக மங்கா வீரா பாபு என்பவர் ஏனாம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இதேபோல முதியோர் இல்லம் நடத்துவதாகக் கூறி 1,600 சதுர மீட்டர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்த மல்லாடி கிருஷ்ண ராவ், அதை கல்வி அறக்கட்டளை ஒன்றுக்கு உள்வாடகைக்கு விட்டு, மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக, கொண்டமுரி ஸ்ரீ ஹரி குசும குமார் என்பவரும் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இரு புகார்கள் தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய கோரி என்.ஆர். காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ண ராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் மல்லாடி கிருஷ்ண ராவ் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி, குற்றச்சாட்டுகள் தொடர்புடைய இரண்டு புகார்களும் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டதாகவும், தாமதத்துக்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனவும் கூறி, மல்லாடி கிருஷ்ண ராவுக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[12/1, 16:42] Sekarreporter 1: வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தாததால் தான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் என்பவரின் பதில் மனுவை அத்துறையின் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், 2011-12லிருந்து 2018-19ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும் படி உத்தரவு பிறப்பித்த போதும், வரி செலுத்தாததால் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் 2022-23ஆம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தி உள்ளதாகவும், அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணத்தை எடுக்கவில்லை என பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை என்பதால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வரி வசூலிக்க எந்த தடையும் இல்லை எனவும், விஜயபாஸ்கருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுதான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும்,
சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சிப்பதாகவும், வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தார்.
[12/1, 17:35] Sekarreporter 1: இரு தரப்பு மோதலை தட்டிக் கேட்ட ஊர் தலைவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜீவா நகர் மற்றும் பாரதி நகர் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த தகராறு குறித்து பாரதி நகர் பகுதியினரை, 30 ஆண்டுகளாக ஜீவா நகர் பகுதி ஊர் தலைவராக இருந்த பாஸ்கரன் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி நகரை சேர்ந்த முருகன் என்பவர், ஊர் தலைவர் பாஸ்கரனை கத்தியால் குத்தி வெட்டியதில், அவர் பலியானார்.

2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சம்பவம் குறித்து ஆர்.கே. நகர் காவல் நிலைய வழக்கு, சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜரானார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுள்ளார்.
[12/1, 17:56] Sekarreporter 1: சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடம் கட்டியதாற்கு ஈஷா அறக்கட்டளைக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு தள்ளிவைப்பு.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா இல்லையா என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாக உள்ளது. 2 லட்சம் சதுர மீட்டர் உள்ள ஈஷா அமைப்பில் 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக கருத முடியாது என வாதிட்டார். மேலும் கல்வி நிறுவனங்கள்
சுற்றுச்சூழல் விலக்கு அளிப்பது தொடர்பான மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு கொண்டு சட்டத்தை முன் தேதியிட்டு அமல் படுத்த முடியாது எனவே இடைக்கால தடையை நீக்க வேண்டும் நோட்டீஸ் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடல், மனம், நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் கருத வேண்டும். இதனை செய்யும் கல்வி நிறுவனமாக ஈஷா அமைப்பு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை அரசின் நோட்டீஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் அனுமதி கல்வி போதிக்கும் நிறுவனங்கள் விலக்கு பெற முடியும் அதன் படி ஈஷா விலக்கு பெற முடியும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[12/1, 20:10] Sekarreporter 1: பூ வியாபார போட்டியில் வியாபாரியை வெட்டிய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சென்னை திருவான்மியூரில் பூ வியாபாரம் செய்யும் சுப்புரா மற்றும் லட்சுமி இடையே வியாபார ரீதியாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சாந்தியின் உறவினரான ஆட்டோ ஓட்டுனர் முரளியும், அவரது நண்பர் யுவராஜும் சேர்ந்து சுப்புரா வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.

இந்த கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் குறித்து இருவர் மீதும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கின் விசாரணை சென்னை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றசாட்டப்பட்ட முரளி, யுவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[12/1, 21:18] Sekarreporter 1: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண் மற்றும் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் வழக்கின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற விதிகள் வகுக்கப்பட்டதாகவும், அதன்படி வழக்கின் கட்டணம் 25 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்த சசிகலாவின் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரிக்க உகந்த வழக்கு அல்ல என்றும், இரு நீதிபதிகள் முன்பாக மட்டுமே விசாரிக்க முடியும் என தெரிவித்தனர்.

ஆனால் சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, நீதிமன்ற பதிவுத் துறையில் சரிபார்த்த பின் தான் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதனால் தனி நீதிபதியே விசாரிக்கலாம் என வாதிட்டார்.

இதையடுத்து சசிகலா தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு உகந்ததா என்கிற மனு மீதான உத்தரவை நீதிபதி சவுந்தர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

You may also like...