Madras high court april 6th day orders

[4/6, 11:36] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் எனவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம் ஆண்டு உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கபட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராடடத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வழக்குகள் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில், ஆறு சக்கரங்களுக்கு மேல் கொண்ட வாகனங்கள் செல்ல மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை தடை விதிக்கலாம் எனவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம் எனவும், உள்ளூர் மலை கிராம மக்கள் எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல், உரிய ஆதாரங்களை சரிபார்த்து சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம், அழுகும் பொருட்களான காய், பழங்கள், பூக்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் இரவு நேரங்களில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் சாலையின் துவக்கத்திலேயே 16 டன் எடைக்கு மேல் சுமை கொண்டு செல்லக்கூடாது என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ள போதிலும், அதை மீறி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது எப்படி என்று கேள்வி எழுப்பினர். மேலும் 27 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையின் அருகில் உள்ள நிலங்கள் விவசாயம் தவிர வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர். அந்த பகுதியில் உள்ள எடைமேடை செயல்படுகிறதா இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் எஸ்.பி.சொக்கலிங்கம் தரப்பில், வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வனப்பகுதி சாலைகளை விரிவுபடுத்த அனுமதிக்க கூடாது, போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்துவது, வேக கட்டுப்பாட்டு விதித்தல் உள்ளிட்டவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 45 ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இந்த பகுதியில் 45 தனியார் தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. – பி.எல்.சுந்தரம் தரப்பில் தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலைகிராம மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

ஈரோட்டை சேர்ந்த கண்ணையன் என்பவர் தரப்பில், இரவு நேர வாகன போக்குவரத்து தடை காரணமாக தாளவாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மாவட்ட ஆட்சியருக்கு இந்த தடை உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ அவசரத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஏஏற்கனவே தள்ளிவைத்திருந்தனர். அதன்படி இன்று : தீர்ப்பு…

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு

12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்கள் எப்போதும் அனுமதி இல்லை

அதற்கு கீழ் உள்ள வாகனங்கள் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அனுமதி

அந்த சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லக்கூடாது

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதி

பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

27 கி.மீ. தூரமுள்ள சாலையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து, அதை சாலை மற்றும் சிசிடிவி பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம்

27 கிமீ சாலையில் உள்ள கிராம மக்களின் வாகனங்களை புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி வாகனங்களை அனுமதிக்கலாம்

வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும்

வனவிலங்குகளுக்கு ஒரு போதும் சிரமங்கள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிய அனுமதியுடன் சென்று வரலாம்

மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் உரிய அனுமதியுடன் செல்லலாம்

வழக்குகள் முடித்துவைப்பு
[4/6, 15:06] Sekarreporter: ஆன்லைன் விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக நடந்தகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி
வீடியோவில் இடம் பெற்ற பெண்ணுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

 

கொரோனா ஊரடங்கின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டது.அப்போது வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன் மூலம் ஆஜராகி இருந்தார். அப்போது தனக்கு முன்பு இருந்த கேமரா ‘ஆனில்’ இருப்பதை தெரியாமல் உடனிருந்த பெண்ணுடன் ஆபாசமாக நடந்துகொண்டார்.. இதை ஆன்லைனில் ஆஜராகியிருந்த மற்றொருவர் தன் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோவை கண்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான அமர்வு தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
இந்த வீடியோ வெளியானது குறித்து வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது
இதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணனை கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு, வீடியோ காட்சியில் இடம்பெற்றிருந்த பெண்ணுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
[4/6, 15:29] Sekarreporter: பணியில் இருந்த காவலர்களை மிரட்டிய செயல் ஏற்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியிம் 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கடந்த 30-ம் தேதி நள்ளிரவு ராயபுரத்தில், தனது ஆதரவாளர்களுடன் மது அருந்தியிருந்ததாகவும், அவர்களது வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, ரோந்து பணியில் இருந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் கூட்டமாக நின்றிருந்தவர்களைப் பார்த்து, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் “எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்?” எனவும், “நான் இந்தப் பகுதி கவுன்சிலர் நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன்” என்று ஜெகதீசன் மிரட்டியதாக தெரிகிறது.

இது தொடர்பாக காவலர் தியாகராஜன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜெகதீசன், சதீஸ், வினோத் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது, கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகதீஸன், சதீஸ், அறிவழகன் வினோத் ஆகிய 4 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் உள்ள காவலர்களை மிரட்டும் இந்த நபர்களால் மற்றவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்றும், இதனை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்த நீதிபதி இது போன்ற செயல்களை ஏற்க முடியாது எனவும், தற்போதைய நிலையில் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் இது போன்ற செயல்கள் தொடர்வதற்கே வழிவகுக்கும் எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[4/6, 16:16] Sekarreporter: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது , ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பால் ரமேஷ் வாக்கு மூலம் அளித்தார். அதனை தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன், டிசம்பர் 1, 2016 அன்று அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக ஜெயலலிதாவை சந்தித்தாகவும், நலமுடன் தான் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்
[4/6, 16:16] Sekarreporter: உயர் நீதிமன்றம் வளாகத்தைச் சுற்றியுள்ள மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களை மூட வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018யில் தமிழன்பன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றி சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சரி செய்யுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
உயர் நீதிமன்ற எல்லைக்கு அருகில் உள்ள பகுதியை சிறுநீர் கழிப்பதற்காகவோ அல்லது கழிப்பறைக்காகவோ பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, உயர் நீதிமன்றத்தின் எல்லைச் சுவர்களை இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை அழகுபடுத்தும் வகையில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கழிவுநீர் கால்வாய்களை மூடப்படாமல் இருந்தால், அவற்றை மூட முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள்,
தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தன. மேலும் என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சிறு கடைக்காரர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தற்காலிக கழிப்பறை வைக்கலாம் என்றும், தற்காலிக கழிப்பறையை அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கழிவுநீர் கால்வாய்கள் கவனிக்கப்படாமலோ அல்லது மூடி சேதமடைந்திருந்தாலோ, அதை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போதுதான் எந்தவிதமான அசம்பாவித்தையும் தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
[4/6, 17:23] Sekarreporter: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட்ச் ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர் தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மேலும் அவர், பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட்ச் ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதாகக் கூறிய வழக்கறிஞர், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார்.

மார்ச் 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் நீதிபதிகள் நாளை தீர்ப்பளிக்கிறது.
[4/6, 17:55] Sekarreporter: தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முறைகேடில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இ- டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகள் காணபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுபோன்ற தரமற்ற பொருட்கள் வினியோகிப்பதால் மக்கள் பணம் வீணாடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது குற்றச்சாட்டு புகார் மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயூக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்..

எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை. வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[4/6, 18:17] Sekarreporter: பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவதை எதிர்த்த கூடுதல் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு கால அவகாசம் கோரியது. அதை ஏற்று குடியிருப்புகளை காலி செய்ய இந்த கல்வியாண்டு வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், வணிக கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை தொடர வேண்டுமென உத்தரவிட்டது.

இந்நிலையில் பெத்தேல் நகர் குடியிருப்போர் தரப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும், புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மெய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்க அரசுக்கு உத்தாவிடவும், மாற்று இடம் வழங்க உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை மார்ச் 16ல் விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்த கூடுதல் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
[4/6, 19:03] Sekarreporter: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்து எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை சிட்டி சிவில் கோர்ட் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது இந்த வழக்கில் எட்டாம் தேதி தீர்ப்பு கூறப்பட உள்ளது சசிகலா தொடர்ந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவில் நாளை மறுதினம் 8 ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது

You may also like...