Madras high court april 10th orders

 

[4/11, 12:25] Sekarreporter: அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுகளை ஏற்று சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவு….

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் எனவும் தீரப்பு…..

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு…..

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொது செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்….

பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு….

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா கூடுதல் மனு தாக்கல்……

சசிகலா வழக்கை நிராகிரிக்க கோரி பன்னீர் செல்வம், பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல்…..

சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டதலும் சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி மனுவில் தகவல்………

வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனுகளை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு…..

சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி உத்தரவு……
[4/11, 13:43] Sekarreporter: நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக நத்தம் நிலமாக மாற்றுவதை எதிர்த்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேகரிக்கும் நீர் பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான வீட்டு மனைகளுக்கு இலவசமாக பட்டா போட்டு கொடுப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீர் ஆதாரத்தையும், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசின் முடிவை சீராய்வு செய்ய வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் மார்ச் 7ஆம் தேதி மனு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

களம் என வகைப்படுத்தப்பட்ட் நிலத்தை, இலவச வீட்டு மனை பட்டா திட்டத்திற்காக நத்தம் நிலம் என மாற்றக்கூடாது என மிட்டா மண்டகப்பட்டு பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிடவும், இருளர் இன மக்களுகான வேறு இடத்தை கண்டறியவும் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி, மிட்டா மாண்டகப்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[4/11, 14:49] Sekarreporter: தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமாருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பாக தமிழக அரசு தரமற்ற பொருட்களை வினியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்து இருப்பது போல, சமூக வலைதளத்தில் கடிதம் பரவியது.

இந்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பா.ஜ.க தகவல் நுட்பம் மற்றும் சமூக வலைதள தொடர்பு பிரிவு தலைவர் நிர்மல்குமார், சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, நிர்மல்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்பு ஆஜரான நிர்மல் குமாரிடம் ஏப்ரல் 8ம் தேதி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், இந்த பதிவு தம்மால் உருவாக்கப்படவில்லை எனவும், தமக்கு வந்ததை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பதிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 8ம் தேதி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக நிர்மல்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,
சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்க வேண்டுமெனவும்,
தேவைப்படும் போது காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும், 25 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நிர்மல்குமாருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
[4/11, 18:39] Sekarreporter: நடிகர் ராமராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராமராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2016 தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தேன். 2016 மே 18ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசியபோது தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது தென்னிலை போலீசார் தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறியதாக என் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு கரூர் மாவட்ட ஜுடீசியல் மாஜிஸ்திரேட்-1ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புகார் கொடுத்த பொது ஊழியரிடமிருந்து எந்த ஆதாரங்களும் கேட்காமல் வழக்கை விசாரணைக்கு ஏற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதித்திருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. ராமராஜன் சார்பில் வழக்கறிஞர் கே.பிரபாகர் ஆஜராகி, சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் மனுதாரர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் அனுமதியளித்துள்ளார். தென்னிலை நாலு ரோடு சந்திப்பு தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை மாஜிஸ்திரேட் கவனிக்கு தவறிவிட்டார் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ராமராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[4/11, 21:57] Sekarreporter: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருத்தொண்டர் சபை நிறுவனரான சேலம் ஏ. ராதாகிருஷ்ணனுக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் திருத்தொண்டர் சபை நிறுவனரான அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் என்கிற சேலம் ஏ.ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், சேலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டசுவாமி கோயியின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனுத்தாக்கல் செய்தபோது, ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தவறான முகவரி அளித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுநல மனுத்தாக்கல் செய்யும்போது சரியான முகவரியை குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளது.

மேலும், அருள்மிகு சுகனேஸ்வரர், சேலத்தில் உள்ள அருள்மிகு காமநாதேஷ்வரர் கோயில் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள சக்தி விநாயகர் கோயில் ஆகியவற்றின் அறங்காவலராக இல்லாத நிலையில் அறங்காவலர் எனக் கூறி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த நான்கு குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், திருத்தொண்டர் சபை நிறுவனர் ஏ. ராதாகிருஷ்ணனுக்கு நான்கு வழக்குகளுக்கும் சேர்த்து நான்கு வாரங்கள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் 8 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என திருத்தொண்டர் சபை நிறுவனர் ஏ. ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஏ. ராதாகிருஷ்ணனை சேலம் மாநகர காவல் ஆணையர் கைது செய்யும் வகையில், வாரண்ட் பிறப்பிக்குமாறு சேலம் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், கைதுக்கு பிறகு சிறை தண்டனை அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...