Madras high court 11th feb orders ஐகோர்ட் உத்தரவுகள் 12th பிப்

[

[2/11, 08:11] Sekarreporter 1: [2/10, 20:06] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1491777698019962880?t=DEPXqgjO6WM5KfUhiZYAyA&s=08
[2/11, 08:09] Sekarreporter 1: The builder/promoter is directed to hand over construction completed apartments ear marked for the land owners in A.No.51 to 55 of 2021 within 30 days from the date of this order failing which by invoking Section 64 of the Real Estate (Regulation and Development) Act, 2016, the builder/promoter shall be punishable with imprisonment for a term of 3 years and with fine for every day delay, as default continues, which may cumulatively extend upto 10% of the estimated cost of the real estate project BEFORE THE TAMIL NADU REAL ESTATE APPELLATE TRIBUNAL (TNREAT)   (Tamil Nadu, Puducherry, Andaman & Nicobar Islands)   (Under the Real Estate Regulation And Development Act 2016)   DATED     02.02.2022      Coram :   Mr.Justice B.Rajendran, Chairperson https://sekarreporter.com/the-builder-promoter-is-directed-to-hand-over-construction-completed-apartments-ear-marked-for-the-land-owners-in-a-no-51-to-55-of-2021-within-30-days-from-the-date-of-this-order-failing-which-by-invo/
[2/11, 08:25] Sekarreporter 1: https://youtu.be/sDpXkE9zCRc
[2/11, 08:55] Sekarreporter 1: Madras high court orders feb 11. ஐகோர்ட் உத்தரவு https://sekarreporter.com/madras-high-court-orders-feb-11-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81/
[2/11, 10:48] Sekarreporter 1: [2/11, 10:46] Sekarreporter 1: ,,,pnpj no sitting
[2/11, 10:46] Sekarreporter 1: Bench today
[2/11, 11:30] Sekarreporter 1: [2/11, 10:57] Sekarreporter 1: view of the above discussion, this Court is inclined to transfer the investigation in this case to the file of CBCID. The respondent is directed to hand over the entire case diary to the Superintendent of Police, CBCID, Chennai within a period of two weeks from the date of receipt of a THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH Crl.O.P.No.2005 of 2021 Elizebeth, W/o.John Kennedy       .. Petitioner       vs. State rep. By https://sekarreporter.com/view-of-the-above-discussion-this-court-is-inclined-to-transfer-the-investigation-in-this-case-to-the-file-of-cbcid-the-respondent-is-directed-to-hand-over-the-entire-case-diary-to-the-superintenden/
[2/11, 11:21] 👑V. C. Bala Subramaniyam. Mhc Advt: I’m the Petitioner counsel Mr.C.Bala Subramaniam.
Got direction order on last year March to CBCID.
CBCID filed a fresh FIR in Crime no. 3/2021
U/s 6 of pocso act 2012, 305, 366A, 376 IPC.

Arrested and remanded that police day before yesterday.

 

This is minor girl suicide due to the negligence L&O police one minor girl passed away. Not even single rupee got from the minor girl family.
[2/11, 11:37] Sekarreporter 1: Surappa case full order of The Hon’ble Mr. Justice V.PARTHIBAN W.P.No.4607 of 2021 & W.M.P.Nos.5244 and 5246 of 2021 Prof.M.K.Surappa Vice-Chancellor Anna University https://sekarreporter.com/surappa-case-full-order-of-the-honble-mr-justice-v-parthiban-w-p-no-4607-of-2021-w-m-p-nos-5244-and-5246-of-2021-prof-m-k-surappa-vice-chancellor-anna-university/
[2/11, 11:40] Sekarreporter 1: https://youtu.be/lmBI5J2qSuc
[2/11, 11:41] Sekarreporter 1: https://youtu.be/lmBI5J2qSuc
[2/11, 11:43] Sekarreporter 1: https://youtu.be/lmBI5J2qSuc
[2/11, 12:27] Sekarreporter 1: https://youtu.be/8COas7rzMwg
[2/11, 13:59] Sekarreporter 1: [2/11, 13:58] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492052788934692872?t=4XBbJn12betO1_W9r0JozA&s=08
[2/11, 13:58] Sekarreporter 1: Contempt case full order of The Hon`ble Mr.Justice S.VAIDYANATHAN CONT P(MD) No.1225 of 2020 IN WP(MD) No.1380 of 2015 https://sekarreporter.com/contempt-case-full-order-of-the-honble-mr-justice-s-vaidyanathan-cont-pmd-no-1225-of-2020-in-wpmd-no-1380-of-2015/
[2/11, 15:37] Sekarreporter 1: அதிகாரிகள் முன்பு போல் அல்லாமல் தற்போது கடமையை செய்து வருவதாகவாக ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது aag j ravinthiren https://sekarreporter.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/
[2/11, 15:54] Sekarreporter 1: [2/10, 17:34] Sekarreporter 1: [2/10, 14:39] Ravikumarvi Avadi Dmk: https://twitter.com/TRavikumar117/status/1491697121619484674?t=qiI1n_acSBj_CvG9s_mYAA&s=08
[2/10, 17:20] Ravikumarvi Avadi Dmk: https://twitter.com/TRavikumar117/status/1491740099209756675?t=S2NOYCANBOMurd6OBaGNTQ&s=08
[2/11, 07:03] Ravikumarvi Avadi Dmk: https://twitter.com/TRavikumar117/status/1491947623334711301?t=7xu2nisYmAEArdmqM5uKXQ&s=08
[2/11, 15:54] Sekarreporter 1: https://youtu.be/fsD5TZCc94U
[2/11, 16:11] Sekarreporter 1: [2/11, 16:10] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492085973911412738?t=8p3gEYJsByNRhBeSgfXq0w&s=08
[2/11, 16:10] Sekarreporter 1: Justice AD Jagadish Chandira of Madras HC quashes a FIR booked against former Minister KT Rajenthra Bhalaji after he appears https://sekarreporter.com/justice-ad-jagadish-chandira-of-madras-hc-quashes-a-fir-booked-against-former-minister-kt-rajenthra-bhalaji-after-he-appears/
[2/11, 16:26] Sekarreporter 1: [2/11, 16:22] Coimbatore: அதிகாரிகள் முன்பு போல் அல்லாமல் தற்போது கடமையை செய்து வருவதாகவாக ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது aag j ravinthiren https://sekarreporter.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/
[2/11, 16:22] Coimbatore: Sir good evening, can I get the case number for this case pls
[2/11, 18:39] Sekarreporter 1: [2/11, 18:38] Sekarreporter 1: [2/11, 18:27] Kera Hc Advocate: i saw judge dandabani j order in ur website Pl send the Writ Appeal order of HC order in Dr. Parkavian case and SLP NO please
[2/11, 18:37] Sekarreporter 1: 🌹
[2/11, 18:38] Sekarreporter 1: MBBS docters case
[2/11, 18:39] Sekarreporter 1: 50% seat case
[2/11, 20:08] Sekarreporter 1: [2/11, 20:03] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்ற
பொறுப்பு தலைமைநீதிபதி
முனீஸ்வர்நாத் பண்டாரி
தலைமை நீதிபதியாக திங்கட்கிழமை காலை பதவி ஏற்பு..
ஆளுநர் வி.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்….
[2/11, 20:03] Sekarreporter 1: .
[2/11, 20:14] Sekarreporter 1: Pg medical 50% reservation case govt order upheld appeal order bench full order. THE HONOURABLE MR. JUSTICE PARESH UPADHYAY AND THE HONOURABLE MR. JUSTICE SATHI KUMAR SUKUMARA KURUP W.A.Nos.93 & 94 of 2022 and C.M.P.Nos. 784,787,789,790,791 and 794 of 2022 W.A.No.93 of 2022 Dr.Parkaviyan R. https://sekarreporter.com/pg-medical-50-reservation-case-govt-order-upheld-appeal-order-bench-full-order-the-honourable-mr-justice-paresh-upadhyay-and-the-honourable-mr-justice-sathi-kumar-sukumara-kurup-w-a-nos-93-9/
[2/11, 20:20] Sekarreporter 1: [2/11, 20:19] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492148666450145283?t=Y9PtyULUL-7eDOuO0N-vkw&s=08
[2/11, 20:19] Sekarreporter 1: Monday 14th On the assumption of office by the Hon’ble Thiru. Justice MUNISHWAR NATH BHANDARI, as Chief Justice of the Madras High Court, there will be a Welcome Address by the Advocate General, Chairman, Bar Council of Tamil Nadu and https://sekarreporter.com/monday-14th-on-the-assumption-of-office-by-the-honble-thiru-justice-munishwar-nath-bhandari-as-chief-justice-of-the-madras-high-court-there-will-be-a-welcome-address-by-the-advocate-general-chai/
[2/11, 20:19] Sekarreporter 1: Monday 12 o clock sitting

 

 

 

 

2/11, 11:32] Sekarreporter 1: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் அவருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விசாரணை அறிக்கையின்ன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,
நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்தது. அப்போது, இந்த விசாரணை அறிக்கையின் நகலை சூரப்பாவுக்கு வழங்குவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழக அரசு தரப்பில், விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுனருக்கு மட்டுமே அனுப்ப உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க அரசு ஏன் தயங்குகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால் தான் சமபந்தப்பட்ட நபர் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க முடியும் என தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான் பணி என்றும், அரசியலமைப்புச் சட்ட பணி இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கபட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லபடவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பார்த்திபன், நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை இரண்டு வாரங்களில் சூரப்பாவுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வேந்தருக்கு அறிக்கையை அனுப்பும் முன்பாக அதை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணை அறிக்கை தொடர்பாக நான்கு வாரங்களில் சூரப்பா தனது விளக்கத்தை அரசுக்கு அளிக்க செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
….
[2/11, 13:26] Sekarreporter 1: சூரப்பா வழக்கில் நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவுப் பகுதி…

விசாரணை ஆணைய அறிக்கையை தனக்கு கொடுத்துவிட்டு, விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கை முடித்துவைக்கலாம் என மனுதாரர் சூரப்பா தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எந்த ஒரு நியாயமான காரணத்தையும் கூறமாலும், சட்டரீதியான தாக்கங்களை கருத்தில் கொள்ளாமலும் அறிக்கையை வழங்கவே முடியாது என அரசு எடுத்த நிலைப்பாடு நியாயமானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை நீதிப்படி எவர் ஒருவரையும் அவர் தரப்பு கருத்தை கேட்காமல் தண்டிக்கக்கூடாது என்றும், துறை ரீதியான நடவடிக்கைகளை பொறுத்தவரை அறிக்கை நகல்களை சமந்தபட்டவர்களுக்கு வழங்கும் அரசு, இந்த வழக்கில் அரசு வழங்க தயங்குவது ஏன் என தெரியவில்லை என்றும், பதவியிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூரப்பா மீதான விசாரணை அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, 2 வாரங்களில் அதன் நகலை நகலை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த நகல் கிடைத்த 4 வாரங்களில் சூரப்பா தனது விளக்கத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சூரப்பாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு முடிவுசெய்தால், அவரது ஆட்சேபங்களை பெற்ற பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[2/11, 15:13] Sekarreporter 1: நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தான், ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் முன்பு போல் அல்லாமல் தற்போது அதிகாரிகள் கடமையை செய்து வருவதாகவும், இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன் சட்டப்படி உரிய அறிவிப்புகளையும், நோட்டீஸ்களையும் அனுப்பி, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், நேரடியாக ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்றுவிடுவதாக தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தாசில்தாரை அடுத்த விசாரணையின் போது ஆஜராக உத்தரவிட்டார்.
[2/11, 15:36] Sekarreporter 1: கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதி பதிவான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் 24 மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், புகார்தாரரும் காணொலி காட்சியில் ஆஜரானார்கள்.

அப்போது சமசரம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும்
உயர் நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்கறிஞர்கள் நல நிதியதிற்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.
[2/11, 15:56] Sekarreporter 1: முதல்வர் இல்லாமல் இயங்கும் புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வர் இல்லாமல் செயல்படும் சட்டக்கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப் பெறும்படி பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு புதுச்சேரி அரசுத்தரப்பில், பொன் விழா கொண்டாட உள்ள இந்த கல்லூரியில் படித்த 15க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் எனவும், அங்கீகாரத்தை திரும்பப் பெற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 17 காலியிடங்களில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[2/11, 16:02] Sekarreporter 1: அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜக-விற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களும், டிவிட்டர் பதிவுகளும் நீதிபதி முன்பு சமர்பிக்கபட்டது.

அப்போது தமிழக அரசு சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பாஜகவின் இளைஞரணி தலைவராகவும், ட்விட்டரில் மனுதாரரை பின் தொடர்பவர்கள் 68 ஆயிரம் பேர் உள்ள நிலையில் பொது அமைதியை குலைக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளதாகவும், மேலும், அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக மனுதாரர் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பத்திரிகையில் வந்த செய்தியையே பகிர்ந்ததாக வினோஜ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராயவும், வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
[2/11, 16:47] Sekarreporter 1: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு விஐபி-களுக்கு வழங்கப்படும் உலகத்தரத்திலான சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்கப்படுவதாக தமிழக சிறைத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த அண்டு ஜூன் 16ஆம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது தற்போதைய உடல்நிலை குறித்து தனக்கு அறிக்கை அளிக்கும் படியும், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரியும் சிபிசிஐடி காவல்துறையிடமும், புழல் சிறை நிர்வாகத்திடமும் ஜனவரி 23ஆம் தேதி மனு அளித்தும் கருத்தில் கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்கக் உத்தரவிட வேண்டுமென ஜெயலட்சுமி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் சிவசங்கர் பாபாவுக்கு தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,
மூத்த மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் வி.ஐ.பி.-களுக்கு வழங்கப்படும் உலகத்தரத்திலான சிகிச்சை சிவசங்கர் பாபாவுக்கு அளிக்கப்படுவதாகவும்,
ஸ்டான்லி மருத்துவமனையை விட தனியார் மருத்துவமனையால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சையில் திருப்தி இல்லை என்றால், ஓமந்தூரார் உயர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

சிவசங்கர் பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் ப்ரூக்ளீன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்புகிறீர்களா? என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
[2/11, 17:07] Sekarreporter 1: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்திய
தொல்லியல் துறை சார்பில் இந்த கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அறநிலைய துறை அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 38, 39 மீட்டர் தூரத்தில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தொல்லியல் துறை சட்ட விதிகளின்படி, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் சொந்த விதிகளையே தொல்லியல் துறை காற்றில் பறக்கவிட்டு கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளதாக கூறி, கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டனர்.

வழக்கு தொடர்பாக தொல்லியல் துறை பதிலளிக்க இரு வார அவகாசம் வழங்கிய நீதிபதி, கட்டிடங்கள் கட்டியிருந்தால் இந்த விதிமீறலுக்கு யார் காரணம் எனவும் விளக்கமளிக்கவும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
[2/11, 17:50] Sekarreporter 1: இந்து சமய அற நிலையத்துறை கோவில் நிலங்களிலிருந்து வர வேண்டிய 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கால், இடங்கள், கட்ட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

கடந்த ஆண்டு அக்டோபர் வரை தமிழக அறநிலையத்துறை கோவில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி 2,390 கோடி ரூபாயை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பினர். முறையாக வசூலித்திருந்தால் 100 கோவில்களை நன்றாக பராமரித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

காணொலி மூலம் ஆஜராகியிருந்த ஆணையர், ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து கோவில்களின் சொத்துக்களும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்களின் பட்டியலும், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில் கோவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை தேர்ந்து எடுப்பதற்கான குழுவை அமைப்பதற்கான அனைத்து மாவட்டங்களிலும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த 4 வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
[2/11, 20:02] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்ற
பொறுப்பு தலைமைநீதிபதி
முனீஸ்வர்நாத் பண்டாரி
தலைமை நீதிபதியாக திங்கட்கிழமை காலை பதவி ஏற்பு..
ஆளுநர் வி.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்….

You may also like...