Madas high court orders april 28

[4/28, 10:52] Sekarreporter: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை அரசு ஏற்கவில்லை என கூறியிருந்தார். எனவே உதயநிதி வேட்புமனு ஏற்றதை செல்லாது எனவும், அதன்மூலம் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது எனவும் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன் மீதான வழக்கு விவரங்களை மறைக்கவில்லை என்றும், அதனால்தான் வேட்புமனு மீதான ஆட்சேபங்களை ஏற்காத தேர்தல் ஆணையம் தனது வேட்பு மனுவை ஏற்று போட்டியிட அனுமதித்ததாக குறிப்பிட்டிருந்தார். எனவே பிரேமலதா தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
[4/28, 12:06] Sekarreporter: மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று புதுவை நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள
கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24 ம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட சட்டவிட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் அளிக்கப்பட்ட புகாரில் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரர் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி, புதுச்சேரியில் பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[4/28, 14:51] Sekarreporter: நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தண்டு மாரியம்மன் கோவில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெரு ஆகியவற்றின் சந்திப்பில் 350 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறித்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் சக்திவேல் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்தை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அரசு அளித்த விளக்கத்தில், சேலம் ஆட்சியர், மேட்டூர் சார் ஆட்சியர், செயற் பொறியாளர், நகர பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தததாகவும், தாரமங்கலத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டபட உள்ளதாகவும், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு அளித்த உத்தரவாதத்தின்படி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை என உயர் நீதிமன்றத்திற்கு சக்திவேல் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு கடந்த ஆண்டு எடுத்த சூமோட்டோ வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
[4/28, 18:32] Sekarreporter: போலி சாதிச்சான்று அளித்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி வரும் அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் துறைரீதியான விசாரணையை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளது.

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய்த்தில் கடந்த 1987ம் ஆண்டு பயிற்சியாளராக சேர்ந்த கணேசன், பின் கல்ப்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்துக்கு பணி மாறுதல் பெற்று, பதவி உயர்வு பெற்று, அறிவியல் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

பணியில் சேர்ந்த போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், பட்டியலினத்தவர் என போலி சாதிச் சான்று அளித்து, வயது வரம்பு சலுகை பெற்றதாக பட்டியலின மற்றும் பழங்குடியினர் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறைரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரி கணேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பல ஆண்டுகள் பணியில் இருப்பதையும், பிரதமர் விருது பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டி, குற்றவழக்கு விசாரணை முடியும் வரை துறைரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க 2013ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கல்ப்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர், 2020ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சபீக் அமர்வு, தீர்ப்பாயம் உத்தரவிட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக சம்பளம் பெற்றுள்ளதையும், குடியரசு தலைவர் விருது பெற்றுள்ளதையும் கருத்தில் கொண்டு கணேசனுக்கு கட்டாய ஓய்வு மட்டுமே வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், அவருக்கு 40 சதவீதம் மட்டும் பென்ஷன் வழங்க வேண்டும் எனவும், வருங்கால வைப்பு நிதி தவிர வேறு எந்த ஓய்வுக்கால பலன்களும் வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் உரிய நேரத்தில் நீதிமன்றத்தை நாடியிருந்தால் கணேசனுக்கு 40 சதவீத ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் துறைரீதியான விசாரணையை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்தனர்.
[4/28, 19:13] Sekarreporter: அரசு பேருந்து மோதியதால் பலியான காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 73 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோயிலைச் சேர்ந்த 56 வயதான தேவராஜ் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 2015ஆம் ஆண்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி அருகே அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அரசு பேருந்து மோதியதால் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கணவர் இறப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி மாலா சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி. தங்கமணி கணேஷ் முன்பு விசாரணை நடந்தது.

அந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பேருந்தை அதிவேகமாகவும்., கவனக்குறைவாகவும் இயக்கியதே காரணம் என்பது நிருபணமாவதால், விபத்தால் இறந்த தேவராஜின் மரணத்திற்கு இழப்பீடாக, 73 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை, ஓரண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் அவரது மனைவி மாலாவிற்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
[4/29, 06:30] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை 21 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கே. கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், அவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், அவை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக 21 நீதிபதிகளை சுழற்சி நீதிபதிகள் வீதம் 20 விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மதுரை கிளையில் ல்15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

You may also like...