Madas high court feb 8th day order

[2/8, 11:27] Sekarreporter 1: வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை நாளை மறுநாள் முதல் அமல்படுத்த தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வனவிலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013ம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் என்பது, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமல்லாமல், சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதாக குறிப்பிட்டுள்ளார்.

24 மணி நேரமும் கனரக வாகனங்களும், இலகு ரக வாகனங்களும் என ஒரு நாளைக்கு 5000 வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்வதாகவும், கடந்த 2012 முதல் 2021ம் ஆண்டு வரை 8 சிறுத்தை, ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி பலியாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

அதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வானங்கள் போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் ஈரோடு ஆட்சிய்ர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே இதுசம்பந்தமான வழக்கில் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களின் கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பு காரணமாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்தவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார் என்ற போதும் உத்தரவை இதை அமல்படுத்த வேண்டும் என்றும், அதை மீறுவோரின் பெயர் பட்டியலை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்தாததால் ஏற்பட்ட விலங்குகளின் மரணத்துக்கு வனத்துறை அதிகாரிகளை ஏன் பொறுப்பாக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் ஊதியம் எதற்கு? என்றும், வனத்துறை அதிகாரிகள், வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த உத்தரவை நாளை மறுநாள் (10ம் தேதி) முதல் அமல்படுத்த வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருந்தது ஏன் என விளக்கமளிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/8, 12:19] Sekarreporter 1: அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக இந்து கோவில்களை மட்டும் இடிக்கப்படுவது தொடர்பான ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்ய இந்து முன்னணி நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக கூறி, இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் நீர்நிலைகளில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து, 10 ஆயிரத்து 556 ஏக்கர் குடியிருப்புகளும், 1,500 ஏக்கர் வணிக நிறுவனங்களும், 30 ஆயிரத்து 24 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுவதாகவும், குறிப்பாக, 1,311 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதில் இந்து கோவில்களை மட்டும் அரசு இடித்து வருவதாகவும், சமீபகாலத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரமாண்டுகள், நூறாண்டுகள் பழமையான கோவில்களும் இடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதனால், அரசு நிலங்களில் உள்ள கோவில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தவோ அல்லது மாற்று இடங்களில் அமைக்கவோ உரிய திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இந்து கோவில்களை மட்டும் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்குந் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திட்டத்தை வகுக்காமல் கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மேலும், இந்து கோவில்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்வும், பிற வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவில் நீர்நிலைகள் பற்றி குறிப்பிடவில்லை என்றும், இந்து கோவில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்து கோவில்களுக்கு எதிராக மட்டும் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுத்தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் எந்த பாரபட்சமும் காட்ட கூடாது என்றும், குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரிய வந்தால் அரசுக்கு தான் சிக்கல் என்று எச்சரித்தனர்.

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 2003 முதல் 2022 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஆணையர், கடமை தவறுகிறார் என்றும் அதிருப்தி தெரிவித்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[2/8, 12:47] Sekarreporter 1: கோவிலையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகிறது.

கடந்த 2007 முதல் மாத வாடகை இரண்டரை லட்சம் என நிர்ணயித்து, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம் நான்கரை லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பேரில் 3 கோடி ரூபாய் அளவிற்கு பாக்கி வைத்திருப்பதாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கோவிலின் இணை ஆணையர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கோவில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு விட வேண்டுமெனவும், அதற்கு மேல் நீட்டிக்க உரிய அனுமதி பெற வேண்டுமென அறநிலையத்துறை சட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அதனடிப்படையில் சந்தை மதிப்பின் வாடகை நிர்ணயிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோவிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்ட பிறகு, அந்த கோவிலின் நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் கடைபிடித்து, கோவிலையும் அதன் சொத்துக்களையும் பாதுக்காக்க வேண்டிய கடமை இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல் அறநிலையத்துறை சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், கோவிலுக்கு தானமாக கொடுத்த நன்கொடையாளர்களிடம் கொடுத்த உத்தரவாதத்தை மீறும் செயல் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாப்பூர் கிளப்புக்கு 2016ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்கும் வகையில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது என்பதால், அந்த வாடகையை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த நோட்டீசை ரத்து செய்ய மறுத்து, மயிலாப்பூர் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்
[2/8, 14:38] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரியும், தேர்தலை ரத்து செய்யக்கோரியும் தொடரபட்ட வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய இருதரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கு மற்றும் தேர்தலை எதிர்த்து கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகிரிக்கக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடர்பட்ட வழக்கு மற்றும் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி தொடரபட்ட வழக்குகளில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
[2/8, 15:54] Sekarreporter 1: பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பெத்தேல் நகர் குடியிருப்போர் பாதுக்காப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்குகளும் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்களுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் படிப்பு, தேர்வுகளை கருத்தில் கொண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கல்வியாண்டு முடியும் வரை அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளனர்.

அதேசமயம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான அரசின் கொள்கை முடிவு எடுத்துள்ளதாக, அங்கு வசிப்பவர்களின் விவரங்கள், நிலத்தின் தன்மை குறித்த விவரங்களை அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழங்க வேண்டும் என பெத்தேல் நகர் மக்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெயர், நிலத்தின் பரப்பு, சர்வே எண், எவ்வளவு காலமாக வாழ்கிறார்கள், ஆதார் மற்றும் வாக்காள அட்டைகளின் விவரங்கள் ஆகியவற்றை பெத்தேல் நகரில் குடியிருப்போர் கொடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவற்றை தொகுத்து அட்டவணையாக்கி நேரடி ஆக்கிரமிப்பாளரா அல்லது பிறரிடம் வாங்கியவர்களா என்ற விவரங்களுடன் தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

அப்போது அரசு தரப்பில் வணிக நிறுவனங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், அந்த கட்டடங்கள் குடியிருப்புடன் இணைதிருப்பதால் இடிக்க முடியவில்லை எனவும், சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று அதிகாரிகள் ஆஜராக நீதிபதிகள் விலக்கு அளித்தனர்.

சீல் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்ற உரிமையாளர்களின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.
[2/8, 20:00] Sekarreporter 1: வரதட்சணை கேட்டும், குழந்தை பாக்கியத்திற்காக
கோமியத்தை குடிக்கவைத்தும் சித்ரவதை செய்ததால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகால்
சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு, ஒன்றரை
ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார் மற்றும்
கணவர் ஆகியோர் அமலியை துன்புறுத்தியுள்ளனர்.

2007ம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப்
பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளை
செய்ய வற்புறுத்தியதுடன், அவரது பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால், மன
உளைச்சலுக்கு ஆளான அமலி, கடந்த 2014 நவம்பர் 5ம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ்
அயனாவரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி
ராஜலட்சுமி, மருத்துவர் அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம்
நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இருவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து
தீர்ப்பளித்தார். தந்தை விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய்
அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் தற்கொலை செய்து
கொண்டதாகவும், ஏற்கனவே இரு முறை தற்கொலைக்கு
முயன்றதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தை இல்லை என்பதற்காக
வீட்டில் பூஜைகளை நடத்தி, அமலியை கோமியம் குடிக்க
வற்புறுத்தியுள்ளதாகவும், அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆதாரங்களில்
இருந்து டாக்டர் தற்கொலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று
கருதுவதால் அவரது தற்கொலைக்கு காரணமான மனுதாரர்களுக்கு
விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்வதாக
கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், மீத
தண்டனையை அனுபவிக்கும் வகையில் இருவரையும் மீண்டும் சிறையில்
அடைக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like...