Judge velmurugan ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான
ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.

இந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹருல்லா உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது .
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்து தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீட்டுக்காக தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME