Jp-மாண்புமிகு நீதியரசர் கே.என் . பாஷா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நீதியரசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாண்புமிகு நீதியரசர்
கே.என் . பாஷா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
நீதியரசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த 2004 -2005 காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
பணியிடம் நிரப்பப்படாமல்
இருந்த நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்த
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உடனடியாக காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக் கோரி காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்தது. அப்போராட்டத்தின் பலனாக நீதித்துறை வரலாற்றில் முதல் முதலாக ஒரே நாளில் 17 நீதிபதிகள் பொறுப்பேற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்தது.
அவ்வாறு பதவியேற்ற நீதிபதிகளில்
அனைவரும் பல்வேறு சட்ட பிரிவில் சிறந்தவர்களாக விளங்கி நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளை விரைவில் முடித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்ற உயர் நீதி மன்றங்களை விட மிக அதிகமாக வழக்குகளை பைசல் செய்து சாதனையை படைத்தது.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில்
17 நீதிபதிகளில் ஒருவராக தன் பணியைத் தொடங்கிய மாண்புமிகு நீதியரசர் கே. என். பாஷா அவர்கள் பணியாற்றிய 2005லிருந்து 2013 வரையான காலகட்டம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் பொற்காலம் என்றால் மிகையாகாது. மாண்புமிகு நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களை ” மக்களின் நீதிபதி ” என்று அழைப்பார்கள் ஆனால் நம் நீதியரசர் அவர்களை ” வழக்கறிஞர்களின் நீதிபதி ” என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும்.
அந்த அளவிற்கு வழக்கறிஞர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் அரவணைப்பையும் கொண்டு மனித நேயத்தின் மறு உருவமாகவே திகழ்ந்தார்.
2003 ஆண்டில்
முதல் தலைமுறை வழக்கறிஞராகப் பதிவு செய்த என்னைப் போன்ற இளம் வழக்கறிஞர்கள் இத்தொழிலில் நிலைத்து நிற்கும் நம்பிக்கையை மனதில் விதைத்து எங்கள் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தவர்.
எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அவரிடம் வழக்கை எடுத்துக் கூறினால் சீனியர் ஜூனியர் என்ற பேதம் பார்க்காமல் உத்தரவு பெற்றுவிடலாம்
என்ற உத்வேகத்தை ஏற்படுத்திக்கொடுத்த உத்தமர்.
2007 இல் நடைபெற்ற எனது திருமணத்திற்கு வருகை தந்து வாஞ்சையோடு வாழ்த்திய நற்பண்பின் பிறப்பிடம் அவர்.
அந்தக் கரகர குரலுக்கு சொந்தக்காரர்
கடும் சொல் பேசாதவர். இன்முகத்துடன்
அந்தக் கர்ஜனை சிரிப்பால் நம்மை கவரக்கூடிய கண்ணியமானவர். நாம் தவறு செய்தால் அதை தாயுள்ளத்தோடு மன்னிக்கும் தகைமையாளர்.
அவர் நீதியரசராக இருந்த கால கட்டத்தில் நாங்கள் தொழில் பயின்றோம் என்பதைவிட நல்வாழ்வு வாழ்ந்தோம் என்று சொல்வதுதான் தகும். இன்று 17 ஆண்டுகள் வழக்கறிஞர் தொழிலை நிறைவுசெய்து உள்ளேன்.
என்னிடம் பலர் ஜூனியராக உள்ளார்கள்.
எனது இல்லத்தரசி நீதிபதியாக பணியாற்றுகிறார். இன்று ஒரு நிலையான வாழ்வை நாங்கள் அமைத்துக் கொள்வதற்கு மாண்புமிகு நீதியரசர் கே. என். பாஷா அவர்கள் நீதியரசர்கள் ஆக இருந்த காலகட்டத்தில் எம்மைப் போன்ற நூற்றுக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பேசவைத்து எங்களுக்காக அரசு வழக்கறிஞர்களிடம் வாதிட்டு எங்களின் வழக்கிற்கு வழங்கிய உத்தரவுகளால் நாங்கள் இத்தொழிலில் நிலைபெற வழிவகுத்தார். மாண்புமிகு நீதியரசர் அவர்களைப்போல் நம் உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் உருவானால் இன்றைய இளம் தலைமுறை வழக்கறிஞர்கள் தவறான கட்ட
பஞ்சாயத்துகளுக்கும், காவல் நிலைய வாயிலில் காத்துக் நிக்காமல் சொத்துகளை காலி செய்யும் அன்றாட காய்ச்சிகளாகளாகவும் உருவாக மாட்டார்கள் என்பது திண்ணம்.
இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடும் மாண்புமிகு நீதியரசர் அவர்களை நன்றியோடு
வணங்கி வாழ்த்துகிறேன்
வாழ்க!
நீ எம்மான்
இவ் வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்கவே!
🙏🙏🙏🙏
செந்தமிழ்ச்செல்வன்
சி . ஜெயபிரகாஷ் வழக்கறிஞர் ,
சென்னை உயர்நீதிமன்றம்
💐💐💐💐💐💐💐