Inbadurai Mla: ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க இன்றும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்

ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க இன்றும் நீதிபதிகள் மறுத்து விட்டனர் .
நீதியரசர் அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக அப்பாவு சார்பாக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி நாளை இவ் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் மேலும் உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்க வேண்டும் என்று கோரினார்.
இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், நாளை அரசியல்சாசன அமர்வு உள்ளது. இவ் வழக்கில் தீர்மானிக்கபடவேண்டிய விஷயம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். தபால் வாக்குகளை யார் அட்டஸ்டேஷன் செய்யவேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். வழக்கு மீண்டும் பட்டியலிடபடும்போது நாங்கள் அதை தீர்மானிப்போம் என்றும் தெரிவித்தனர். எனவே உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட தடை ஆணை தொடரும்.
[2/25, 16:52] Sekarreporter: 👍👍